தமிழ் அரங்கம்

Wednesday, August 15, 2007

மொழி வக்கிரம் பற்றி புலம்பும் புலியெதிர்ப்பு அவதூறுகள்

பி.இரயாகரன்
15.08.2007


புலியொழிப்பையே அரசியலாக செய்யும் புலியெதிர்ப்புவாதிகளின் அரசியல் துரோகத்தை நாம் தோலுரிக்கும் போது, அதை மொழி வக்கிரம் என்று முதுக்கு பின்னால் அவதூறு செய்யமுனைகின்றனர். புலியெதிர்ப்பை தவிர வேறு எதையும் பேசத்தெரியாத இக் கும்பலின் அரசியல் வாழ்க்கை என்பது, அவதூறு செய்வதே அரசியல் நடைமுறையாகி விடுகின்றது. புலியை ஒழிக்க ஏகாதிபத்தியத்துடனும் பேரினவாத அரசுடனும் கூடி விபச்சாரம் செய்யும் இந்தக் கும்பல், வேறு எதையும் சமூகத்துக்கு செய்வது கிடையாது.

இதை மூடிமறைக்கவே சமூக கோட்பாடுகள் மீதும், சமூக நடைமுறைகள் மீதும்,ஐஎச்சமிட்டு நஞ்சிடுவதை நடைமுறையாக கொள்கின்றனர்.

சமூகம் சார்ந்த கருத்தை விவாதிக்க முடியாது போகின்றது. கருத்து சார்ந்த விவாதத்தில் மொழி வக்கிரம் பற்றியும், தனிநபர் தாக்குதல் பற்றியும் முதுக்கு பின்னால் அவதூறு பொழிகின்றனர். இந்த மொழி வன்முறை மற்றும் தனிநபர் தாக்குதல்கள் எங்கே? எப்படி? எந்த வகையில்? நடக்கின்றது என்று அரசியல் ரீதியாக விளக்கி நிறுவ முடிவதில்லை.

புலியொழிப்பை புலியெதிர்ப்பில் முன்வைக்கின்ற இந்தக் கும்பலிடம், இதை விளக்கும் அரசியல் அடிப்படை எதுவும் இருப்பதில்லை. இதனால் தான் இயக்கங்கள் செய்த அதே உத்தியை, மீண்டும் மீண்டும் கையாளுகின்றனர். அதாவது அரசியல் அவதூறுகள் மூலம், புலியெதிர்ப்பு அரசியல் செய்ய முனைகின்றனர். குறிப்பாக புலியைக் கூட, அரசியல் ரீதியாக விமர்சிக்க முடிவதில்லை. புலியெதிர்ப்பைக் கொண்டு, புலி பாசிசத்தின் துணையில் புலியொழிப்பைக் கொண்டு வாழ்கின்றனர்.

இதில் அரசியல் வேடிக்கை என்னவென்றால், புலியெதிர்ப்பு புலியொழிப்பு அரசியலை பற்றி எதுவும் பேசுவது கிடையாது. ஏகாதிபத்தியத்துடனும், பேரினவாத அரசுடனும் சேர்ந்து புலியொழிப்பை வைப்பதால், அதற்கு வெளியில் வேறு மாற்று அரசியல் கிடையாது. இந்த அரசியல் துரோகத்தை மூடிமறைக்க, அதை திசைதிருப்ப இந்த மொழி வன்முறை பற்றி புலம்புகின்றனர்.

பொது வாழ்வு என்பது கேலிக்குரியதல்ல. மற்றவனை அரசியல் ரீதியாக ஏமாற்றி வாழ்வதல்ல. அரசியல் ரீதியான நேர்மை, அதே போல் அரசியல் கோட்பாட்டு நேர்மை அவசியமானது. மக்களை சார்ந்து நிற்காத எதுவும் நேர்மையற்றது. அது மக்களின் முதுகில் குத்தும் துரோகமாகும். இதைவிட இதற்கு மாற்று எதுவும் கிடையாது.

1.பொதுவாழ்விற்கு வந்த பிற்பாடு, தனிமனித சீர்கேடுகள் அனைத்தும் பொதுவானவை தான். அதற்கு விலக்கு பெற முடியாது.

2.அரசியல் நடைமுறை, அரசியல் கோட்பாடுகள் வக்கிரம் கொண்டதாக இருக்கின்ற போது, அதை பற்றி பேசுவது அவசியமானது. இதைப்பற்றி பேசாது, மொழி வக்கிரம் பற்றி பேசுவது, பொதுவான தொடாச்சியான துரோகத்தை மூடிமறைக்க செய்யும் முயற்சியாகும்.

உதாரணத்துக்கு புலியொழிப்பை அரசியலாக கொண்ட, புலியெதிர்ப்பு சித்தாந்த குரு சிவலிங்கம், ஏகாதிபத்திய பிசாசுடன் சேர்ந்து புலியை ஒழிக்க போவதாக கூறியவர். அதைத்தான் சொந்த அரசியல் நடைமுறையாக கொண்டவர். இந்த அரசியல் இழிதனத்தை அம்பலப்படுத்துவது மொழி வக்கிரமா! இந்த பிசாசு எடுபிடி, பேரினவாத பேய்களுடனும் இதனடிப்படையில் தான் கூடிக்குலாவுகின்றார். இதை அம்பலப்படுத்துவதை மொழி வன்முறை என்றும், தனிமனித தாக்குதல் என்றும்; கூறுவதன் மூலம், இந்த கடைகெட்ட இழிசெயலை பாதுகாக்க முனைகின்றதைத் தவிர அது வேறு எதுவுமல்ல.

நாம் இதை அம்பலப்படுத்துவதைத் தவிர வேறு வழி கிடையாது. இதை மொழி வன்முறை என்று, தனிநபர் தாக்குதல் என்றால், அதையிட்டு நாம் கவலைப்படுவதில்லை. பொறுக்கித்தனமான அனைத்து அரசியல் கோட்பாட்டு மற்றும் நடைமுறைத் துரோகத்தை, அம்பலப்படுத்தி போராடுவது தான் மனித குலத்தின் விடிவிற்கான ஒரு வழிப்பாதையாகும்.

No comments: