தமிழ் அரங்கம்

Friday, September 7, 2007

புதிய நூல் வெளிவந்துள்ளது.

இரயாகரனின் புதிய நூல் வெளிவந்துள்ளது.


மனித அவலங்களில் மிதற்கும் அரசியலும் கோட்பாடுகளும்!



310 பக்கங்ளைக் கொண்ட இந் நூல், இலங்கையின் நடைபெறும் மனித அவலத்துக்கு காரணமானவர்களைப் பற்றிப் பேசுகின்றது.

மக்களுக்கு எதிராக சமகாலத்தில் நடைபெறும் செயற்பாடுகளை அம்பலமாக்கின்றது.


இந்த நூலின் மேற்கத்தைய விலை 7 ஈரோ

இலங்கையில் 270 ரூபா

இந்தியாவில் 140 ரூபா


இது போன்ற எனது நூல்கள் உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் அவதூறுகளுக்கு மத்தியில் கடின உழைப்பின் மூலம் எழுதப்பட்டவை. இதை நாம் வெளியீடாக செய்ய முடிவதில்லை. எந்த அறிமுகமும், ஆதரவும் கிடைப்பதில்லை. சமரசமின்றிப் போராடுவதால், எமது இணையம் புறக்கணிக்கப்பட்டு அனாதையாக்கப்பட்டுள்ளதோ அதே நிலையே எமது நூலுக்கும்.


எமது இணையத்தை மற்றவர்களுக்கு நீங்கள் அறிமுகப்படுத்துவது போல், இந்த நூலையும் நீங்கள் தான் அறிமுகம் செய்யவேண்டும்.


எனது உழைப்பில் மட்டும் நம்பி இது முழுமையாக வெளிவருகின்றது. தோழர்களே நண்பர்களே அனுதாபிகளே, முகமறியா இணைய வாசகர்களே எனது நூலை விலைகொடுத்து வாங்கி உதவவும்;. எடுத்து விற்று உதவவும்;. மொத்தமாக வாங்கி உதவவும்;.


சமுதாய நலனில் அக்கறையுள்ள ஒவ்வொருவரிடமும் உரிமையுடன் கோருகின்றோம். இதுவரை 9 நூல்கள் அச்சில் வெளிவந்துள்ளது. விவரங்களுக்கு நூல் பகுதியை பார்க்க.


இவ்வருட இறுதிக்குள் மேலும் இரு நூல்கள் வெளிவரவுள்ளது. உங்கள் பங்களிப்பை, ஒத்துழைப்பையும் வழங்கும்படி உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

3 comments:

Arasu Balraj said...

//சமரசமின்றிப் போராடுவதால், எமது இணையம் புறக்கணிக்கப்பட்டு அனாதையாக்கப்பட்டுள்ளதோ அதே நிலையே எமது நூலுக்கும். //

நிச்சயமாக தாங்கள் இவ்வாறு கருத வேண்டியதில்லை. காரணத்தை நீங்கள் சரியாக பரிசீலித்துள்ள போதிலும், அதிலிருந்து அனாதையா க்கப்பட்ட உணர்ச்சிக்கு ஆளாக வேண்டாம். ம.க.இ.க முதலான புரட்சிகர அமைப்புகள் தங்களது சமரசமற்ற போராட்டத்திற்கு தொடர்ச்சியாக அளித்து வரும் ஆதரவு தாங்கள் அறிந்ததே. ஆம், நாம் தனித்து நின்று போராடுகிறோம். சமரசமும், முகஸ்துதியும் இல்லாத நமது புரட்சிகரப் பண்பாடு 'பிழைக்கத் தெரிந்த' அறிவுஜீவிகளுக்கு சங்கடம் தருகிறது. அவர்கள் நம்மைப் புறக்கணிக்கிறார்கள். அது நல்லதே. ஆனால் நீங்களே குறிப்பிட்டது போல முகமறியாத எத்தனையோ வாசகர்கள் தொடர்ச்சியாக தங்களது இணையத்தையும், கருத்துக்களையும் கவனித்து வருகிறார்கள். அதனில் அளவு மாற்றமும், பண்பு மாற்றமும் நிச்சயம் ஏற்பட்டே தீரும்.

பாவெல் said...

\\ஆம், நாம் தனித்து நின்று போராடுகிறோம். சமரசமும், முகஸ்துதியும் இல்லாத நமது புரட்சிகரப் பண்பாடு 'பிழைக்கத் தெரிந்த' அறிவுஜீவிகளுக்கு சங்கடம் தருகிறது. அவர்கள் நம்மைப் புறக்கணிக்கிறார்கள். அது நல்லதே. ஆனால் நீங்களே குறிப்பிட்டது போல முகமறியாத எத்தனையோ வாசகர்கள் தொடர்ச்சியாக தங்களது இணையத்தையும், கருத்துக்களையும் கவனித்து வருகிறார்கள். அதனில் அளவு மாற்றமும், பண்பு மாற்றமும் நிச்சயம் ஏற்பட்டே தீரும்.//


தோழர் அரசு பால்ராஜ் கூறுவது மிகவும் சரி 'மாற்றம்' வரும்
கலங்குதல் வேண்டாம்.




மேலும் நூல் எங்கு கிடைக்கும்
என்று விவரம் இல்லையே?


உங்கள் பணிசிறக்க
புரட்சிக வாழ்த்துக்கள்.

bharathy said...

rayaharan avarhaluku..
"முகமறியாத எத்தனையோ வாசகர்கள் தொடர்ச்சியாக தங்களது இணையத்தையும், கருத்துக்களையும் கவனித்து வருகிறார்கள். அதனில் அளவு மாற்றமும், பண்பு மாற்றமும் நிச்சயம் ஏற்பட்டே தீரும்" appadipatta vaasakarhalil naanum oruvan..naan candavil vasikireen.evvaru ungalathu puthahangali vaanga vendum enadru thayavu seithu email moolam aryathaarungal..
ippadiku unmayullla
bharathy