கோத்ரா: கொடூரமான பொய்
கட்டுப்படுத்த முடியாது திடீரென்று வெடித்த கலவரக்காரர்களின் கோபமானது திட்டமிட்டு நடத்தப்பட்டச் சதியாக, காவல்துறையால் எவ்வாறு காட்டப்பட்டது?. இவ்வாறு காட்டப்படுவதற்காகக் கையூட்டு பணம் கொடுத்தும் பலவந்தப்படுத்தியும் சித்திரவதைகள் செய்தும் பொய் சாட்சிகளைக் காவல்துறையினர் உருவாக்கினார்கள்.
கோத்ராவில் உண்மையிலேயே நடந்தது என்ன என்பதைக் கிடைக்கப் பெற்றத் தகவல்களைக் கொண்டுத் துல்லியமாக ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே தெரிந்துக் கொள்ள முடியும். இப்பகுதியில் காவல்துறையினரின் வழக்குகளைத் தெஹல்கா வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது
சம்பவம் ஒரு கண்ணோட்டம்கோத்ராவில் வைத்து, சபர்மதி விரைவு தொடர் வண்டியில் நடந்தத் துயரமான சம்பவமே அதைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீது பெரும் கலவரங்களின் மூலம் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகளுக்கான காரணியாகும் என, முதலமைச்சர் மோடியும் இன்னும் குஜராத்திலுள்ள பாஜக அரசும் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கூறி வருகின்றனர். சபர்மதி விரைவு தொடர் வண்டி தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவமானது, கட்டுக்கடங்காமல் திடீரென்று வெடித்த கலவரகாரர்(முஸ்லிம்)களின் கடுங்கோபத்தால் நடைபெற்ற பயங்கரமான விளைவு அல்ல, மாறாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட வகுப்பு கலவரம் என்றே (மோடி கும்பல்) தெரிவிக்கின்றனர். ஆறு மாதக் காலமாக மிகக் கவனத்துடனும் சிரத்தையுடனும் தெஹல்கா மேற்கொண்ட புலன் விசாரணைகளின் போது முரண்பாடுகள் மிகுந்த பொய்யான தகவல்களும் நிர்பந்தங்களினாலும் கையூட்டுகளினாலும் (முஸ்லிம் சமுதாயத்தின் மீது பொய்கள் சுமத்தி)துரோங்கள் இழைக்கப்பட்டதும் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. இவ்வாறு அறியப்பட்டவைகள் சுருக்கமாக இங்கே தரப்படுகிறது.
காவல்துறையின் கூற்று:தங்களது நோக்கத்தைப் பொருத்தும் வகையில் காவல்துறையினர் கூறும் கூற்றுகள் இதோ பின்வருமாறு;
கோத்ராவிலுள்ள முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களில் பலர் - குறிப்பாக இஸ்லாமிய மார்க்க அறிஞர் உமர்ஜி, முஸ்லிம் நகராட்சி உறுப்பினர்களான பிலால் ஹாஜி மற்றும் பாரூக் பானா, விருந்தினர் விடுதி உரிமையாளரான ரஜாக் குர்குர் இன்னும் வியாபாரியான சலீம் பான்வாலா ஆகியோர் 27 பிப்ரவரி 2002 அன்று சபர்மதி விரைவு தொடர் வண்டியின் S-6 பெட்டியை எரிப்பதற்குச் சதி ஆலோசனை செய்தார்கள் (ஏதோ ஒரு பெட்டியல்ல குறிப்பாக S-6 பெட்டி. யாராலுமே விளக்கம் கூற முடியாத புதிரான காரணம்).கோத்ரா நகராட்சி சபையின் முன்னாள் தலைவரான முஹம்மது ஹுசைன் கோல்டா ஷேக் இன்னும் நகராட்சி உறுப்பினர்களான சலீம் ஷேக் மற்றும் அப்துல் ரஹ்மான் தான்டியா ஆகியோர் வன்முறையாளர்களின் கூட்டத்தில் இருந்ததோடு, தொடர் வண்டியைத் தீயிட்டுக் கொளுத்த வன்முறை கும்பலைத் தூண்டினார்கள என கோத்ரா குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இவர்களும் சதி ஆலோசனை செய்ததில் ஈடுபட்டதாகக் காவல்துறையினர் கூறவில்லை.
S-6 பெட்டியின் தரையில் அதிக அளவில் எரிபொருள் (பெட்ரோல்) ஊற்றப்பட்டு பின்னர் தீயிட்டு கொளுத்தப்பட்டதாகக் காவல்துறை தெரிவிக்கிறது. மேலும், 26 பிப்ரவரி 2002 அன்று காலா பாய் என்ற முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து 140 லிட்டர் பெட்ரோல் வாங்கபட்டதாகக் காவல்துறையினர் கூறியிருக்கின்றனர். பின்னர் மறுநாள் இந்த பெட்ரோல் ஒன்பது முஸ்லிம் வியாபாரிகளாலும் மேலும் திட்டவட்டமாகக் கூற முடியாத இக்காரியத்தில் ஈடுபட விருப்பப்படாத ஒரு ஹிந்து வியாபாரியாலும் எடுத்து செல்லப்பட்டு, சபர்மதி விரைவு தொடர் வண்டி நிறுத்தப்படும் அறை Aயில் வைக்கப்பட்டது.மூன்று முஸ்லிம் வியாபாரிகள் ஓடிக் கொண்டிருக்கும் சபர்மதி விரைவு தொடர் வண்டியின் வெவ்வேறு பெட்டிகளில் ஏறி தொடர் வண்டியை நிறுத்தத் தட்டைத் திருகியதால் அது அறை Aயில் நிறுத்தபட்டதே அன்றி கரசேவகர்கள் தொடர் வண்டியின் சங்கிலியை இழுத்ததினால் அல்ல. (இதில் முக்கியமானது காவல்துறையின் இந்தச் சதி திட்டம் பற்றிய அனுமானம் தவிடு பொடியாகி விட்டது. இந்தத் தொடர் வண்டி அறை Aக்கு வெளியே நிறுத்தபடாமல் இருந்த போது, எப்படி S-6 பெட்டியில் தீயிட்டிருக்க முடியும்?)
S-6 மற்றும் S-7 பெட்டிகளை இணைக்கும் 6 அங்குல இணைப்பு தொடரைச் சிலர் சாதாரண கத்தரிகோலால் துண்டித்து S-6 பெட்டியில் ஏறியதாக காவல்துறையினர் தெரிவித்தார்கள். பிறகு திரவ எரிபொருளைத் (பெட்ரோல்) தரையில் ஊற்றினார்கள். உடைந்த ஜன்னல் வழியாகவும் பெட்ரோல் உள்ளே ஊற்றப்பட்டது.தங்களது வாதத்தை பலப்படுத்த காவல்துறையினர் வைக்கும் ஆதாரங்கள்:
சம்பவத்தைக் கண்ணால் பார்த்த சாட்சிகளாகக் கூறப்படும் ஒன்பது பாஜக உறுப்பினர்களை வைத்தே காவல்துறையின் வாதம் நிறுவப்படுகிறது. கோத்ராவைச் சார்ந்த 41 முஸ்லிம்களை இவர்கள் அடையாளம் காட்டி, குற்றவாளிகளாகக் குற்றம் சுமத்துகிறார்கள். (பாஜகவைச் சார்ந்த இந்த ஒன்பது பேரில் ஒருவனான திலீப் தஸாதியா தனது வாக்குமூலத்தை முழுமையாக மாற்றி கூறியுள்ளான்).S-6 பெட்டியிலும் இன்னும் பிற பெட்டிகளிலும் பிரயாணம் செய்த கரசேவகர்களின் வாக்குமூலங்களைக் கொண்டும் இவ்வாதம் நிறுவப்படுகிறது. கலவரகாரர்கள் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய், திரவக குமிழ்கள், பெட்ரோல் குமிழ்கள் இன்னும் மசாலா பொடிகளையும் உடைந்த ஜன்னல் வழியாக வீசியதாகவும், திரவ எரிபொருளைப் (S-6) பெட்டியில் தெளித்ததாகவும் கரசேவகர்களின் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.
புகையினால் தாங்கள் மயக்கமுற்று விட்டதாகவும் அதனால் எதனையும் பார்க்கவில்லை என்று மூன்று கரசேவகர்கள் முதலில் கூறினார்கள். இரண்டு மாதங்களுக்குப் பிறகு தங்களது கூற்றை மாற்றி, ஏதோ திரவ பொருள் (S-6) பெட்டியின் தரையில் ஊற்றப்படுவதைப் பார்த்ததாக கூறினர். இந்தப் புதிய தகவல்கள் 7 மே 2002 ல் - அதாவது முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு தான் சேர்க்கப்பட்டதோடு, இதுவே காவல்துறை விசாரணையின் முக்கியமான, வலுவான ஆதாரமாகவும் முன்னிறுத்தப்பட்டது.S-6 பெட்டியானது ஜன்னல் வழியாக வீசப்பட்ட திரவ எரிபொருளினாலோ அல்லது பெட்டியின் வெளியில் தெளிக்கப்பட்டதாலோ எரிக்கப்பட்டதாக மேலே சொன்ன குற்றச்சாட்டை தடயவியல் அறிக்கை தள்ளுபடி செய்தாலும், அது கூறுவது என்னவென்றால், "தென்புறத்திலிருந்து 60 லிட்டர் பெட்ரோல் பெட்டியின் தரையில் ஊற்றப்பட்டு இருக்கலாம்......" இதுவே ஏற்றுக் கொள்ளப்பட்ட அனுமானம்.
முதல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒன்றரை மாதத்திற்குப் பிறகு, காவல்துறை "அனைத்தும் தெரிந்த சாட்சி" என்று அஜெய் பாரியா என்னும் ஹிந்து வியாபாரி ஒருவரைக் கொண்டு வந்து நிறுத்தியது. இந்தச் சாட்சி, "தான் ஒன்பது முஸ்லிம் வியாபரிகளால் நிர்பந்திக்கப்பட்ட நிலையில் அவர்களுடன் சேர்ந்து பெட்ரோலைக் கொண்டு வந்து S-6 பெட்டியை எரித்ததாகக்" கூறுவது விளங்க முடியாத மர்மமான கூற்றாக உள்ளது. இவ்வழக்கின் முக்கிய ஆதாரமாக இருக்கும் பாரியா, தற்போது காவல்துறையின் கடுமையான கண்காணிப்பில் வாழ்ந்து வருகிறார்.அவர்களைக் கைது செய்த இரு வாரங்களுக்குப்ப் பிறகு, மேலும் இரு முஸ்லிம் வியாபாரிகளான - இல்யாஸ் ஹுசைன் மறறும் அன்வர் கலந்தர் ஆகியோரை இரயிலின் தட்டைத் திருப்பி நிறுத்தியதாக குற்றம்சாட்டி காவல்துறையினர் கொண்டு வந்து நிறுத்தினர். இவ்விருவரும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தப் பிரமாணத்திலேயே தங்களது வாக்குமூலத்தை முழுமையாக மாற்றி கூறியிருந்தனர்.
ஜாபிர் புன்யாமீன் பஹீரா என்னும் முஸ்லிம் வியாபாரி, பெட்டிகளை இணைக்கும் இணைப்பு தொடரை வெட்டிய குழுவில் தான் இருந்ததாகவும் பெட்ரோலை பெட்டியின் தரையில் ஊற்றியதாகவும் ஒப்பு கொண்டார். உமர்ஜியின் கட்டளையின் படி, முஸ்லிம் நகராட்சி உறுப்பினர்களான பிலால் ஹாஜி மற்றும் பாரூக் பானா ஆகியோர் S-6 பெட்டியை எரிக்க சொன்னதாகவும் பஹீரா சொன்னார். பின்பு பஹீரா, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணத்தில் தனது வாக்குமூலத்தை முழுமையாக மாற்றி கூறினார்.சம்பவம் நிகழ்ந்து ஓர் ஆண்டிற்குப் பிறகு, காலா பாயின் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வேலை பார்த்த இரண்டு ஹிந்து விற்பனையாளர்கள் - பிரதாப் சிங் பட்டேல் மற்றும் ரன்ஜித் சிங் பட்டேல் ஆகியோர் 26 பிப்ரவரி 2002 அன்று மலை 140 லிட்டர் பெட்ரோலைக் குற்றவாளிகளுக்கு விற்றதாக கூறி காவல்துறையினர் வழக்கில் கொண்டு வந்து நிறுத்தினார்கள். இதில் குறிப்பிடதக்க விசயம் என்னவென்றால், இவ்விருவரும் முதலில் தாங்கள் எவருக்கும் அன்றைய தினமோ (இரயில் விபத்து நடந்த தினம்) அல்லது அதற்கு முந்தைய மாலையிலோ வாகனம் இல்லாமல் பெட்ரோலை விற்பனை செய்யவில்லை என்று கூறியிருந்தார்கள். தற்போது இவ்விருவருக்கும் 24 மணி நேர காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சிக்கந்தர் சித்தீக் என்பவன் காவல்துறையின் மற்றுமொரு சாட்சியாவார். S-6 பெட்டியை முஸ்லிம் வியாபாரிகள் எரிப்பதைத் தான் பார்த்தாகவும் இன்னும் குற்றவாளிகளுக்குத் தலா ரூ.1,500 வழங்கியதாக இஸ்லாமிய மார்க்க அறிஞர் உமர்ஜி தன்னிடம் கூறியதாகவும் இந்த சாட்சி தெரிவித்தான். மேலும் நகராட்சி மன்ற உறுப்பினர்களான பிலால் ஹாஜி மற்றும் பாரூக் பானா ஆகியோரை இரயில் பெட்டிக்கு அருகே பார்த்ததாகவும் தெரிவித்தான். இன்னும் கூடுதலாக, இஸ்லாமிய மார்க்க அறிஞர் யாகூப் பஞ்சாபி வன்முறை கும்பலை ஊக்கபடுத்தியதைத் தான் பார்த்தாகவும் தெரிவித்திருந்தான். ( இதன் அடிப்படையில், காவல்துறை மார்க்க அறிஞர் யாகூப் பஞ்சாபியைக் கைது செய்து பின்னர் விடுவித்து விட்டது. ஏனென்றால் சம்பவம் நிகழும் போது பஞ்சாபி இந்தியாவிலேயே இல்லை; அவர் சவுதி அரேபியாவில் இருந்தார்).இஸ்லாமிய மார்க்க அறிஞர் உமர்ஜி மற்றும் முஸ்லிம் நகராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்டளைபடி S-6 இரயில் பெட்டிக்குத் தீயிட்டதில் தாங்கள் பங்கு பெற்றதை இன்னும் ஆறு முஸ்லிம் வியாபாரிகள் ஒப்பு கொணடதாகக் காவல்துறையினர் அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றனர். இவர்கள் அனைவரும் அதன் பிறகு தங்கள் ஒப்புதல் வாக்குமூலத்தை முழுமையாக மாற்றிக் கொண்டனர்.
எது நிகழவில்லையோ அதனை விலக்கினால் மட்டுமே கோத்ராவில் உண்மையிலேயே நிகழ்ந்த சம்பவம் என்ன என்பதை அறிந்து கொள்ள முடியும். மேலும் சில கொடுமையான கற்பனை தகவல்களைத் தெஹல்காவின் புலன் விசாரணை அம்பலபடுத்தியுள்ளது.நன்றி பதிவர்: இறை நேசன் http://copymannan.blogspot.com/2007/11/1.html
No comments:
Post a Comment