தமிழ் அரங்கம்

Tuesday, April 29, 2008

முக்கிய அறிவித்தல்

முக்கிய அறிவித்தல்


தோழர்களே, நண்பர்களே, வாசகர்களே.. சமூக அக்கறையுள்ள அனைவருக்கும் எமது வணக்கங்கள்.

www.tamilcircle.net என்ற எமது இணையத்தளம், மே மாதம் முதலாம் திகதி முதல், எந்த இடைத் தடங்கல் எதுவுமின்றி ஒரு வடிவ மாற்றத்தைப் பெறுகின்றது. அத்துடன் இது இரண்டு பெயர்களில் இயங்கவுள்ளது

1. http://www.tamilcircle.net/


2. http://www.tamilmanram.net/

புதிய வடிமைப்பில் இந்த தளம் இயங்கும் சம காலத்தில், தளத்தின் பழைய வடிவம் தற்காலிகமாக புதிய தளத்தினூடான இணைப்பின் வழி அப்படியே இயங்கவுள்ளது. ஆயிரக்கணக்கான கட்டுரைகளை இடமாற்ற எடுக்கும் எமக்குத் தேவையான கால இடைவெளி வரை, அதுவும் இயங்கும்.

முக்கியமாக கட்டுரைகளுக்கு இணைப்புகளைக் கொடுத்தவர்கள், இணைய இணைப்புக் கொடுத்தவர்கள், அவ்விணைப்புகளில் மாற்றங்கள் செய்ய வேண்டி எற்படலாம். இதை தொடர்ச்சியாக கவனத்தில் கொள்ளவும். பழைய தளம் சிறிது காலத்தில் முற்றாக செயலிழக்கும்.

இதன் மூலம் உங்களுக்கு ஏற்படுத்தும் சிரமத்தைப் பொருட்படுத்தாது ஓத்துழைப்பையும், வேண்டும் அதேவேளை உதவி தேவைபட்டால் நாம் உதவவும் தயாராகவுள்ளோம்.

புதிய தளம் பல வசதிகளைக் கொண்டது. இது தமிழில் தேடுதல் வசதியைக் கொண்டது. இலகுபடுத்தப்பட்டுள்ளது. கருத்துகளைக் கூறவும், ஈமெயில் அனுப்பவும், பி.டி.எவ் ஆக்கும் வசதியும் (இது தற்காலிகமாக தமிழ் எழுத்துருவில் செயல்படுவதில் ) உள்ளது. கட்டுரைகளை வகைப்படுத்தலும் இலகுபடுத்தப்பட்டுள்ளது. புதிய பல விடையங்களை இது உள்ளடக்குகின்றது.

இது தவிர புதிய பலரின் எழுத்துகளை அன்றாடம் சேர்க்கவுள்ளோம். எதிர்காலத்தில் அன்றாட செய்தி கொண்டுவரும் வகையில், நாம் சிந்திக்கின்றோம்.

இதில் முக்கியமாக ஆவணப்பகுதி ஒன்றை தொடங்கியுள்ளோம். இலங்கைப் போராட்டம் தொடர்பான முழுத் தகவலையும் ஆவணப்படுத்தும் ஆரம்பமாக இது இருக்கும். எம்மிடம் உள்ள ஆயிரக்கணக்கான பக்கங்களை இதில் நாம் இணைக்கின்றோம். மிகுதியை நீங்கள் தான், தந்து அதனை பூரணப்படுத்த உதவ வேண்டுகின்றோம். உங்கள் பங்களிப்பு இதில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இது கருத்து முரண்பாட்டுக்கு அப்பாற்பட்டது. அவை தொலைந்து போன, தொலைகின்ற ஆவணங்கள். இதை இலகுவாக நீங்கள் பார்க்கும் வகையில், பிரதி எடுக்கும் வகையில், உங்களிடமும், அவை ஒரு ஆவணமாக பாதுகாக்கும் உணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கம்யூட்டர் உள்ள ஒவ்வொருவரும் ஆவண காப்பகத்தை தனக்குள் கொண்டு இயங்கும் உணர்வை இது உருவாக்கும். இதற்கு உங்கள் ஒத்துழைப்பை பல வழிகளில் எதிர்பார்க்கின்றோம்.

அறிவியல் பகுதி ஒன்றை தொடங்கியுள்ளோம். இது விஞ்ஞானம், தொழில் நுட்பம், மருத்துவம், கம்யூட்டர், சமையல் கலை, தையற்கலை என்று, பல விடையங்களை உள்ளடக்கவுள்ளது. பலரின் கட்டுரைகளை, இதில் இலகுவாக பார்க்கும் வகையில் இதைத் தரவுள்ளோம்.

ஆவணப்பகுதி, அறிவியல் பகுதி இணையவேற்றம் முழுமையான பின்பு, அது தனக்குள் தகவல்களை பாரியளவில் கொள்ளத் தொடங்கும். பலரின் பல அரிய கட்டுரைகள், தகவல்கள் உங்களுக்கு இலகுவாக கிடைக்கும். இதற்கு உங்கள் ஒத்துழைப்பை நாம் பல வழிகளிலும், உங்களிடம் கோருகின்றோம்.

ஆனால் இவை முன்பக்கத்துக்கு கட்டுரை நிரலாக வராது. முன்பக்கத்தில் உள்ள இணைப்பின் ஊடாக தேடிச் சென்று, இப்குதியை இலகுவாக பார்க்க முடியும்.

இந்தத் தளத்தில் உள்ள குறைபாடுகள், சேர்ப்புக்களை, தேவைகளைச் சுட்டிக்காட்டும் படியும், சமூக பொறுப்புள்ள உங்கள் ஒத்துழைப்பையும் நாம் கோருகின்றோம்.

உங்கள் பங்களிப்பு எதுவாக இருந்தாலும், அதை நாம் பொறுப்புணர்வுடன் அணுகத் தயாராக உள்ளோம்.


தமிழரங்கம்
29.04.2007

1 comment:

தமிழச்சி said...

தோழருக்கு வணக்கங்கள்

"டென்மார்க் அபிராமியின் பித்தலாட்டங்களுக்கு துணைப் போகும் தமிழர்களின் மானக்கேடு! வெட்கக்கேடு!" என்ற தலைப்பில் எழுதப்பட்ட பதிவு 13-05-2008 இல் தமிழரங்கம் நெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இருக்கும் இரண்டு இணைப்புப் சுட்டிகள் வேலை செய்யவில்லை. அவற்றை திருத்தம் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன் மிக்க நன்றி தோழர்