தமிழ் அரங்கம்

Wednesday, May 21, 2008

தமிழ் முஸ்லீம் மக்களை பிளக்கும் 'ஜனநாயகம்"

பிட்டும் தேங்காப் பூவுமாக வாழ்ந்த கிழக்கு மக்களின் இன ஒற்றுமையை, தமிழ்தேசியம் தான் பிளந்தது என்று கூறிக்கொண்டு புலியெதிர்ப்பு என்ன அரசியல் நடத்தியது? தமிழ்தேசியத்தின் பெயரில் புலிகள் நடத்தியதை விட, மிகமோசமாக இன ஒற்றுமையை கிழக்கிசம் சிதைத்தது.

தமிழ் தேசியத்தில் இருக்கின்ற ஜனநாயகக் கோரிக்கையை மறுக்கும் ஜனநாயக விரோதிகளில் ஒரு பகுதியினர், அதை மூடிமறைக்க கிழக்கு என்ற கோசத்தை எடுத்தனர். இவர்களோ புலியை விட மிகமோசமான, (கிழக்கு) மக்களின் விரோதிகளாக வெளிவந்துள்ளனர். கிழக்கு மக்கள் மத்தியில் புதிய சமூகப் பிளவை, புலிக்கு நிகராக பேரினவாதத்தின் துணையுடன் விதைத்துள்ளனர். இதைத்தான் இவர்கள் தமது 'ஜனநாயகம்" என்கின்றனர். மக்களை பிரித்து பிளக்கும் அரசியலை, மக்கள் மத்தியில் விதைப்பதைத்தான் மக்களின் 'ஜனநாயகம்" என்கின்றனர்.

இவர்கள் தமிழ் தேசியத்தின் ஜனநாயக கோரிக்கையையே ஏற்க மறுப்பவர்களாக இருப்பதாலும், இவர்கள் ஜனநாயக விரோதிகளாக உள்ளனர். இதனால் இவர்கள் தமிழ் தேசியத்தை தவறாக விளக்கியதுடன், அதன் மேல் குப்பைகளை வாரிக்கொட்டினர். மக்களின் ஜனநாயக உரிமைக்கு எதிராக இருந்ததுடன், தேசியத்தை வெறும் புலியாகவே காட்டி இயங்கினர். தமிழ் தேசியத்தை, வடக்கு மக்களின் பிரச்சனையாக திரித்தனர். இதன் மூலம் குறுகிய கிழக்கு மையவாதத்தை உருவாக்கினர்.
.
.

No comments: