தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் ஏறியதைத் தொடர்ந்து சில "விரும்பத்தகாத' துணை விளைவுகளைச் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தீட்சிதர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மார்ச் 2 போராட்டத்தின் வெற்றிக்குப் பின் ஆறுமுகசாமி சிற்றம்பல மேடையேறிப் பாடிவிட்டு இறங்கும்போது, அங்கே கூடியிருக்கும் பல பக்தர்கள் அவரை வணங்கி அவரிடமிருந்து திருநீறும் வாங்குகிறார்கள்.
தீட்சிதர்களால் பக்தர்களைத் தடுக்கவும் முடியவில்லை; ஆறுமுகசாமிக்கு பக்தர்கள் வழங்கும் இந்த மரியாதையைச் சகிக்கவும் முடியவில்லை. எனவே, புழுங்குகிறார்கள். தங்களது "ஏரியாவுக்குள்' அத்து மீறி நுழைந்த ஒருவன் தங்களுக்கு மட்டுமே உரித்தான திருநீறு வழங்கும் "அத்தாரிட்டி'யையும் பறித்துக் கொண்டுவிட்டதை எண்ணி வயிறு வெந்து துடிக்கிறார்கள்.
தமிழுக்கும் தமிழர் உரிமைக்கும் தம்மையே வாளும் கேடயமுமாக நியமித்துக் கொண்டுள்ள தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சியினரும்கூட தீட்சிதர்களைப் போலவே தீராத சூலை நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஏப்ரல் 2008 ""தமிழர் கண்ணோட்டம்'' இதழில் கி.வெங்கட்ராமன் எழுதியுள்ள கட்டுரையைப் படிக்கும்போது நமக்குத் தெரியவருகிறது.
""இந்திய தேசியர்களும், மறைமுகப் பார்ப்பனீயர்களும், துக்ளக் சோ வுக்கு இணையான சூழ்ச்சிக்காரர்களுமான ம.க.இ.க.வினர், தமிழ் மக்களின் உரிமையை நிலைநாட்ட ஒரு போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்று விட்டார்களே, இந்த "விபரீதம்' நேர்ந்தது எப்படி?'' என்ற கேள்விக்கு விளக்கமளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஒருபுறம்.
.
1 comment:
சிதம்பரம் போராட்ட வெற்றியை அடுத்து ரொம்ப பேத்துக்கு பயங்கர வயித்து கடுப்பு. ததேபோக ஒட்டு மொத்த தமிழர்களின் கண்ணோட்டத்திற்க்கும் குத்தகை எடுத்து அதை ஆங்கில பள்ளிகளின் விளம்பரத்திற்க்கு விற்பனை செய்து வந்தது, அதே மாதிரி இனிமே இருக்க முடியுமான்னு சிக்கல் வந்திருச்சி. அதான் விசயம்...
இதே மாதிரி வயித்து கடுப்பு வந்த இன்னொரு ஆள் CPIயின் C. மகேந்திரன். தாமரைல அவர் எழுதிருக்குற கட்டுரைல அவரோட வயித்துக் கடுப்பு மங்கி மயங்கி ஒலிக்குது.... நமக்கு அவிங்கள பாத்தா பாவமா இருக்கு...
அசுரன்
Post a Comment