இது அவரின் சொந்த கருத்து மட்டுமல்ல. விவசாயக் கடன் தள்ளுபடி குறித்த விமர்சனம் என்ற பெயரில் மேட்டுக்குடி கும்பலின் வர்க்க வெறுப்பும், பொச்சரிப்பும் இப்படித்தான் பொங்கி வழிகிறது.
ஒரு 60,000 கோடி ரூபாய் தள்ளுபடி (இதுவே ஃபிராடு என்பது தனிக்கதை) குறித்து இப்படி அங்கலாய்த்துக் கொள்ளும் ""சோ'' வகையறாக்கள், ஒவ்வொரு ஆண்டும் வரிச் சலுகை என்ற பெயரில் பல பத்தாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள், தரகு முதலாளிகள் மேல்தட்டு வர்க்கத்திற்காகத் தள்ளுபடி செய்யப்பட்டு வருவது குறித்து கள்ள மௌனம் சாதிக்கிறார்கள்.
கடந்த (200708) பட்ஜெட்டில், பெரும் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட வரிச் சலுகையால் அரசுக்கு ஏற்பட்ட நட்டம் 58,655 கோடி ரூபாய். இது, அதற்கு முந்தைய ஆண்டு ஏற்பட்ட இழப்பை விட 30 சதவீதம் அதிகமாகும்.
பங்குதாரர் நிறுவனங்கள் உள்ளிட்ட பிற வர்த்தகத் தொழில் நிறுவனங்களுக்கு 200708 பட்ஜெட்டில் கொடுக்கப்பட்ட வரிச் சலுகையால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ, 4,000 கோடி.
தனிப்பட்ட நபர்களுக்கு, 200708 பட்ஜெட்டில் கொடுக்கப்பட்ட வருமான வரிச் சலுகையால் ஏற்பட்ட இழப்பு 38,000 கோடி ரூபாய்.
தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட உற்பத்தி வரிச் சலுகையால், 200708இல் அரசுக்கு ஏற்பட்ட வருமான வரி இழப்பு 88,000 கோடி ரூபாய்.
.
No comments:
Post a Comment