skip to main |
skip to sidebar
இந்தப் பனிலிங்கம் மற்றும் அதைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளையும் செய்து கொடுக்கும் பொறுப்பு, பேடாகுந்த் பகுதியில் வசிக்கும் முசுலீம் குடும்பங்களிடம் தான் இருந்து வந்தது. 1990களில் காசுமீரில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் வெடித்த பிறகு, அதற்கு எதிரான ஆயுதமாக, இந்து மதவெறியைத் தூண்டிவிடும் வாய்ப்பாக, இந்த யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசப்பட்டதோடு, அரசே ஏற்பாடு செய்து நடத்தும் யாத்திரையாக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். கும்பலோ, ஹஜ் யாத்திரையைப் போன்று, அமர்நாத் யாத்திரையை புனிதப்படுத்தும் தில்லு முல்லைச் செய்தது; செய்தும் வருகிறது. பார்ப்பனர்கள் கொண்டாடி வந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகை, முசுலீம்களுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டிவிடும் விநாயகர் ஊர்வலமாக மாற்றப்பட்டதைப் போல, அமர்நாத் யாத்திரை, காசுமீர் முசுலீம்களுக்கு எதிரானதாக உருமாற்றப்பட்டது. பக்தி, இந்து பாசிசமாகியது.
2 comments:
ஹஜ் யாத்திரை போவதற்கு இந்துக்கள் ஏன் காசு கொடுக்க வேண்டும்.
உங்கள் பதிவு இந்தியர்களைப் பிரித்து காட்டியதால் எனக்குள் வந்த கேள்வி!.
இந்தியர்கள் எல்லோரும் சமமானவர்களே,ஒரு தாயின் புதல்வர்களே,சட்டத்தின் முன்பு எல்லோரும் சமமானவர்களே, என்பதை எப்போது உணரப் போகிறீர்கள்!
1.இந்தியா சட்டம் என்பதே அனைவருக்கும் சமானதல்ல. இது இந்துச் சட்டம். இப்படி சட்டமே காவிமயமானது.
2.கஷ்மீர் இந்தியாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பிரதேசம். இதனால் அரசே ஒத்துக்கொண்ட சிறப்பு விதிகள் உண்டு.
3.இந்த பனி என்பது இயற்கையானது. மதசார்பற்ற அரசு அதற்கு எப்படி உடந்தையாக இருக்க முடியும்;?
4.சுற்றுலவுக்குரியதை தீடீர் வழிபாட்டுக்குரியதாக்கிய இந்துத்துவ காவிகள் தான், இதை ஊதிப்பெருக்கி மக்களின் பிளவை வித்திட்டவர்கள்.
5.காவிமயமான அதிகார வார்க்கத்தின், தனிபட்ட சாதிய இந்துத்துவ வக்கிரங்கள் தான் மக்களை பிளக்கின்றது
இப்படி பல
Post a Comment