தமிழ் அரங்கம்

Wednesday, August 6, 2008

சரவணன் மீதான வன்முறையும், இதைக் கண்டிப்போரின் வன்முறை அரசியலும்

சரவணன் தாக்கப்பட்ட செய்தி மறைக்கப்பட்டு, அவை ஊமையாக்கப்பட்ட பின்னணியில் தான் அம்பலமானது. இது அம்பலமான போது, இதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகின்ற கூட்டம், உடனடியாக கண்டனம் தெரிவித்து புலம்புகின்றது. தமது மக்கள் விரோத வன்முறை அரசியல் இருப்பையும், அடையாளத்தையும் காட்ட, அரசியலற்ற வெற்றுக் கண்டனங்களால் புலம்புகின்றனர். இவை எல்லாம் சரவணனை தாக்கியவனின் அதே அரசியல் எல்லைக்குள், புளுத்துத் தான் வெளிப்படுகின்றது. இவை கூட சடங்கு, சம்பிரதாயமாக, இது இவர்களின் அரசியல் நடைமுறையாகி விடுகின்றது. இப்படி கண்டனங்கள் கூட, அரசியலற்று வெற்று வேட்டுத்தனமாகின்றது.


சரவணனை தாக்கிய அரசியல் 'தமிழ்" தேசியம். இந்த 'தமிழ்" தேசியத்தை இன்று புலிகள் கொண்டுள்ளனர் என்பதால், அது புலிக்கு எதிரான கண்டனமாகின்றது. இப்படி புலியெதிர்ப்பு அரசியல் இங்கு, கும்மியடிக்கத் தொடங்குகின்றது. இதனடிப்படையில் தான் கண்டனங்கள் வெளி வந்தன. ஆனால் இது புலிக்கு மட்டும் சொந்தமானதல்ல.

வன்முறை அரசியலின் மூலம் 'தமிழ்" தேசியத்தில் மட்டுமா உண்டு? இல்லை, 'தமிழ்" தேசிய மறுப்பிலும் கூட அதுவுள்ளது. இதற்கான சமூக அடிப்படையும், அதன் அரசியல் அடித்தளமும், எம் சமூகம் கொண்டுள்ள நிலப்பிரபுத்துவ காட்டுமிராண்டித்தன சமூக பொருளாதார பண்பாட்டுத் தளத்தில் உள்ளது. இப்படி இந்த வன்முறையின் அரசியல் மூலம், எங்கும் நிறைந்து காணப்படுகின்றது. வன்முறை பலதளத்தில் பல பின்னணியில் நிகழ்கின்றது...

No comments: