தமிழ் அரங்கம்

Wednesday, September 17, 2008

போஸ்கோ தீர்ப்பு : நீதிக்குத் தூக்கு!

தென் கொரியாவைச் சேர்ந்த நிறுவனமான போஸ்கோ, ஒரிசா மாநிலத்தில் தனது இரும்பு உருக்காலையை நிறுவிக் கொள்ள அனுமதி அளித்துத் தீர்ப்பளித்திருக்கிறது, உச்சநீதி மன்றம். 55,000 கோடி ரூபாய் முதலீட்டில் இரும்பு உருக்காலையை அமைக்கத் திட்டமிட்டுள்ள போஸ்கோ, ஆலை அமைப்பது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள இரண்டு ஆலோசனைகளை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டுள்ளது.

போஸ்கோ தொடங்கவுள்ள இரும்புச் சுரங்கம் மற்றும் உருக்காலையால் ஒரிசாவின் பாரதீப் பகுதியில் உள்ள பெரும் வனப்பகுதியே மொட்டையடிக்கப்படும் என்பதால், சுற்றுச்சூழலை நிர்வகிப்பதற்கு ஒரு கமிட்டியை அமைக்க வேண்டும் என்பது ஒரு ஆலோசனை. காடுகளை அழித்து விட்டுச் சுற்றுச்சூழலை எப்படி பாதுகாப்பது? இந்த கமிட்டி மரம் நடும் திட்டத்தின் மூலம் சுற்றுச் சூழலை பாதுகாக்கப் போகிறதா என்பது போன்ற கேள்விகளுக்குள் எல்லாம் உச்சநீதி மன்றம் சென்றதாகத் தெரியவில்லை; கமிட்டி என்பதோடு பிரச்சினையை முடித்து விட்டது.

காடுகள் அழிக்கப்படுவதால் அதில் இருந்து துரத்தப்படும் பழங்குடி இன மக்களுக்கு நிவாரண உதவி வழங்க 73.5 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும் என்பது இரண்டாவது ஆலோசனை. ஒரிசா மாநில அரசு போஸ்கோவுடன் போட்டுக் கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, ஏறத்தாழ 10 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இரும்புத் தாது அதன் கைக்குப் போகப் போகிறது. இரும்புத் தாதுவை வெட்டி எடுத்து விற்கும்போது, இன்றைய நிலவரப்படி அதனின் மதிப்பு ஏறத்தாழ 28 இலட்சம் ரூபாய் கோடியைத் தொடும். எனவே, நிவாரண உதவிக்காக 73.5 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும் என்பது சுண்டைக்காய் பணம்தான்.....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: