தமிழ் அரங்கம்

Sunday, September 28, 2008

'ஜனநாயகம்' என்ற பெயரில் பாசிசமே கோரப்படுகின்றது

தமிழ் மக்களின் பெயரில் "ஜனநாயக" கூத்து நடத்தப்படுகின்றது. "ஜனநாயகம்" என்ற பெயரில், ஜனநாயக மறுப்பு அரங்கேறுகின்றது. மாற்றுக் கருத்து என்ற பெயரில் பாசிசம் சித்தாந்தமாகின்றது. இதுவே புலியின் மாற்று என்று கூறிக்கொள்ளும் புலியெதிர்ப்புக் கும்பலின் நடைமுறை சார்ந்த அரசியலாகிவிட்டது. இந்த புலியெதிர்ப்பு அரசியல், மக்களை தமது நடைமுறை அரசியல் போராட்டங்களில் இருந்து எட்டியுதைக்கின்றது. மாறாக மக்களை தமது சொந்த எடுபிடி அரசியலுக்கு பயன்படுத்த கூவியழைக்கின்றது. மக்களை புலிகள் எப்படி தமது சொந்த குறுகிய நலனுக்கு பயன்படுத்த முனைகின்றனரோ, அப்படியே புலியெதிர்ப்பு கும்பலும் செய்ய முனைகின்றது. புலியெதிர்ப்பு கும்பல் ஏகாதிபத்திய தலையீட்டுக்கு ஏற்ற மறுகாலனிய சூழலையுருவாக்க, மக்களை தமது அரசியல் எடுபிடிகளாகவே வரக்கோருகின்றனர்.


 இதைவிட வேறு எந்த ஒரு வேலைத்திட்டமும் அவர்களிடம் கிடையாது. இந்தக் கும்பல் இதைத்தான் தமிழ்மக்களின் புதிய தலைமை என்கின்றனர். இதனடிப்படையில் ஒரு கட்டுரை தேனீ இணையத்தில் வெளியாகியது. "தமிழ்மக்களுக்கு இன்று புதியதொரு ஜனநாயக தலைமைத்துவம் தேவை." என்ற தலைப்பில் வெளியாகியது. ஞாநி என்ற புனைபெயரில் எழுதும் திரோஸ்கியவாதி புலியெதிர்ப்பு எடுபிடி அரசியலை, அரசியல் மயப்படுத்த முனைகின்றது. புலியெதிர்ப்பு கும்பலுக்கு அரசியல் அடியெடுத்து கொடுப்பவர்கள் இந்த திரோஸ்கியவாதிகள் தான். புலிக்கு அரசியல் வழிகாட்டியவர் முன்னாள் திரோஸ்கிய பாலசிங்கம் என்றால், புலியெதிர்ப்பு கும்பலுக்கும் திரோஸ்க்கிய அன்னக்காவடிகள் வழிகாட்ட முனைகின்றனர்.


எங்கள் எல்லோருக்குமுள்ள அடிப்படையான சந்தேகமே, அனைத்துக்குமானதாக உள்ளது. இந்த "புதியதொரு ஜனநாயக" தலைமை ஏகாதிபத்தியத்தை எதிர்க்குமா? பேரினவாதத்தை எதிர்க்குமா? சுரண்டலை எதிர்க்குமா? சாதியம், ஆணாதிக்கம் போன்ற சமூக அநீதிகளையும், சமூக முரண்பாடுகளை ஒழிக்குமா?............
...முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: