தமிழ் அரங்கம்

Friday, November 21, 2008

அம்பானியின் கனவைத் தகர்த்த விவசாயிகள் எமுச்சி!

மராட்டிய மாநிலத்தின் பண்டாரா மாவட்டத்தைச் சேர்ந்த கயர்லாஞ்சியில் ஏழை தலித் பூட்மாங்கே குடும்பத்தினர் 2006ஆம் ஆண்டு சாதி இந்துக்களால் கொடூரமாக வேட்டையாடப்பட்ட கதையை வாசகர்கள் மறந்திருக்க முடியாது.

இந்தக் கிராமத்தில் பூட்மாங்கே குடும்பத்தினருக்கு வறண்டு போன ஐந்து ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் தங்களுக்குத் தேவைப்படும் வசதியோடு ஒரு வீடு கட்ட அந்த தலித் குடும்பம் விரும்புகிறது. ஒரு தலித் படோபமாக வீடு கட்டுவதா என்று சாதி இந்துக்கள் அதை வன்மத்துடன் எதிர்க்கின்றனர். மேலும் இரண்டு ஏக்கர் நிலத்தை கிராமத்தின் பொதுப்பாதைக்கு தேவை என்று வஞ்சகமாக எடுத்துக் கொள்கின்றனர். இந்த அநீதியை அந்தக் குடும்பத்தின் தாயான சுலேகாவின் உறவினர், அருகாமை கிராமத்தில் இருப்பவர், போலீசிடம் எடுத்துச் செல்வதற்கு உதவுகிறார். ஆனால் போலீசு இந்தப் புகார் எதையும் பதிவு செய்ய மறுக்கிறது.

ஒரு தலித் குடும்பத்தினருக்கு இவ்வளவு திமிரா என்று சினமடைந்த சாதிவெறிக் கும்பல் அந்த உறவினரைப் போட்டு அடித்ததோடு சுலேகாவையும் அவளது இளவயது மகளான பிரியங்காவையும் நிர்வாணமாக்கி கும்பலாக பாலியல் வன்முறை செய்து அருகாமை ஓடையில் கொன்று போடுகிறது. மேலும் சுலேகாவின் இருமகன்களான ரோஷனும், சுதீரும் அடித்துக் கொல்லப்படுகிறார்கள். குடும்பத் தலைவரான பையாலால் பூட்மாங்கே மட்டும் இந்தக் கொடூரத் தாக்குதலிருந்து தப்பிக்கிறார்.

No comments: