தமிழ் அரங்கம்

Saturday, November 22, 2008

ஒரு வர்க்கத்தின் சொர்க்கம், நரகங்களின் மேல் தான் நிர்மணிக்கப்படுகின்றன

தனிமனித செல்வக் குவிப்பு, அமெரிக்காவில் உயர்ந்த கட்டத்தை அடைந்துள்ளது. 2004இல் அமெரிக்காவின் முதல் 500 மிகப் பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் வருடாந்தரம் குறைந்தபட்சம் ஒரு கோடி டாலருக்கு மேல் சம்பளமாக பெற்றனர். மிகப் பெரிய 25 நிறுவனங்களின் தலைவர்கள் குறைந்த பட்சம் 3.5 கோடி டாலரை சம்பளமாக பெற்றனர். இதை எங்கிருந்து எப்படி பெறுகின்றனர் என்றால் மக்களின் அன்றாட உழைப்பு தான்.

1979இல் அமெரிக்கா லட்சாதிபதிகள் எண்ணிக்கை 5.2 லட்சமாகும். மொத்த மக்கள் தொகையில் 0.4 சதவீதமாகும். 1996இல் 13 லட்சம் பேர் லட்சாதிபதிகளாக இருந்தனர். இவர்கள் அமெரிக்கச் சனத் தொகையில் ஒரு சதவீதம் பேராவர். இவர்கள் அமெரிக்க நிலத்தில் 22 சதவீதத்ததை வைத்திருந்தனர். படிப்படியாக மக்களை சூறையாடுவதன் மூலம், கோடீஸ்வரர்கள் பெருக்கெடுக்கின்றனர். அமெரிக்காவில் ஒரு கோடி டாலருக்கு மேல் சொத்துடைய சமூக விரோதிகள் எண்ணிக்கை 1995இல் 1.19 லட்சமாகியது. இது 1998இல் 2.75 லட்சமாகியது. இந்த மூன்று வருடத்தில் கோடி டாலருக்கும் அதிகமான சொத்துடையோர், இரண்டு மடங்கையும் தாண்டிக் கொழுத்துள்ளனர். இதே மூன்று வருடத்தில் அமெரிக்காவில் வீடுகளின் எண்ணிக்கை 3 சதவீதத்தால் அதிகரித்தது. ஆனால் 10 லட்சம் பெறுமதியுடைய மாடமாளிகைகளின் எண்ணிக்கை 10 லட்சத்தால் அதிகரித்தது. மேல் இருக்கும் உயர் வர்க்கத்தின் படிநிலைக் கட்டமைப்பு செல்வக் குவிப்பு மேல் நோக்கி நகர்த்துகின்றது. கீழ் உள்ள சமூகக் கட்டமைப்பின் படிநிலையில் செல்வம் படிப்படியாக அகன்று விடுகின்றது. செல்வம் மேலும் கீழுமாக, நேர்எதிர்வீதத்தில் நாள் தோறும் மறுபங்கீட்டைச் செய்கின்றது.

இதன் விளைவு மேல்நோக்கி கொழுக்க, கீழ்நோக்கி ஏழைகளின் புதைகுழிகள் நிர்மாணிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் உள்ள 14 ஆயிரம் மிகப் பெரிய பணக்காரக் குடும்பங்களின் ஆண்டு வருமானம், அமெரிக்காவில் அடிநிலையில் உள்ள 2 கோடி குடும்பங்களின் மொத்த வருமானத்துக்குச் சமமானதாகும். இது சமூகப் பிளவின் வீச்சையே எடுத்துக்காட்டுகின்றது. உண்மையில் 1999இல் அமெரிக்காவில் இருந்த முதல் 400 பணக்காரரின் சொத்தின் பெறுமானம் ......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: