தமிழ் அரங்கம்

Monday, November 24, 2008

மன்மோகன் சிங் : நவீன தருமன்

"நல்ல காலம் முடிந்தது'' இப்படி அலறுகிறது, இந்தியாடுடே வார இதழ். 21,000 புள்ளிகளாக இருந்த பங்குச் சந்தை வளர்ச்சி, 10,000 புள்ளிகளுக்கும் கீழே சரிந்து விழுந்த பிறகு; பங்குச் சந்தை சூதாட்டத்தால் உலகக் கோடீசுவரர்களான இந்தியத் தரகு முதலாளிகளின் சொத்து மதிப்பு சடசட வெனச் சரியும்பொழுது, இப்படித்தான் ஓலமிட முடியும்.

பங்குச் சந்தையும், தகவல்தொழில்நுட்பத் துறையும், ரியல் எஸ்டேட் வியாபாரமும், சுற்றுலா உள்ளிட்ட சேவைத் துறையும், ஏற்றுமதி சார்ந்த தொழில்களும் இந்தியாவை வல்லரசாக்கி வருவதாகக் கூறி வந்தார்கள். ஆனால், அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சுனாமி இந்தத் தொழில்கள் அனைத்தையும் ஆட்டம் காண வைத்துவிட்டது; தாராளமயம் உருவாக்கியிருந்த நீர்க் குமிழி உடைந்து விட்டது. ஆளும்வர்க்கம் பீற்றிக் கொண்ட 9 சதவீத பொருளாதார வளர்ச்சி, வேரோ விழுதோ அற்ற வளர்ச்சி என்பது நிரூபணமாகிவிட்டது.

அரசு, பொருளாதாரத்தில் தலையீடு செய்வதை "லைசென்ஸ் ராஜ்ஜியம்'', "கோட்டா ராஜ்ஜியம்'' எனத் தூற்றிய முதலாளிகள், இன்று அரசாங்கம் உதவ வேண்டும் எனத் தட்டைத் திருப்பிப் போட்டுத் தட்டுகிறார்கள். ஆட்குறைப்புச் செய்வதன் மூலம், புதிய முதலீடுகளைச் செய்யாமல் பணத்தை இரும்புப் பெட்டிக்குள் பூட்டி வைத்துக் கொள்வதன் மூலம் அரசையும் மக்களையும்............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: