தமிழ் அரங்கம்

Wednesday, January 21, 2009

ஜார்ஜ் புஷ்ஷீக்குச் செருப்படி! அமெரிக்க ஆதிக்கத்தின் மேல் விழுந்த இடி!

டிசம்பர் 14, 2008 நள்ளிரவு நேரத்தை ஈராக்கும், உலகமும் அவ்வளவு எளிதாக மறந்து விடாது. அன்றுதான், ஈராக் மக்களுக்கு "ஜனநாயகத்தை'' வழங்கியிருப்பதாகச் சொல்லிக் கொண்டு திரியும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஸ் ஜுனியருக்கு ஈராக் மக்களின் சார்பாக, அந்நாட்டைச் சேர்ந்த முந்தாஸர் அல்ஜெய்தி என்ற பத்திரிகையாளர் செருப்படி கொடுத்தார்.


அல் ஜெய்தி வீசிய செருப்பு புஷ்ஷைத் தாக்காமல் குறித் தவறிச் சென்றிருக்கலாம். ஆனால், அதற்காக யாரும் வருத்தப்படவில்லை. புஷ்ஷை நோக்கி அடிப்பது போல ஒருவரது கை நீண்டிருந்தால்கூட உலகம் மகிழ்ந்திருக்கும். அந்தளவிற்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஈராக் மக்களாலும், பெரும்பாலான உலக மக்களாலும், ஏன் அமெரிக்க மக்களாலும் வெறுக்கப்படுபவர் என்பது ஊரறிந்த உண்மை.


ஈராக் மக்கள் அல் ஜெய்தியைக் கதாநாயகனாகக் கொண்டாடுகிறார்கள். அவரை விடுதலை செய்யக் கோரி ஈராக்கில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. பல நாடுகளில் அல் ஜெய்தியின் வீரத்தைப் பாராட்டிக் கொண்டாட்டங்கள் நடக்கின்றன. இன்று இணையதளத்தில் பிரபலமான விளையாட்டு எது தெரியுமா? ஜார்ஜ் புஷ்ஷின் உருவத்தைச் செருப்பால் அடிக்க வேண்டும். விளையாடுபவர் குறி தவறாமல் அடிக்க அடிக்க அவர் பக்கம் புள்ளிகள் ஏறிக்கொண்டே போகும். இவ்விளையாட்டில் வென்றால் "ஆம், உங்களால் முடியும்!'' என்ற பாராட்டு உங்களுக்குக் கிடைக்கும். இந்த செருப்படியை உலகமே கொண்டாடுகிறது என்பதற்கு இவையெல்லாம் சாட்சியங்கள்.


அல் ஜெய்தியின் செயலை நாம் .......................................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: