தமிழ் அரங்கம்

Thursday, January 22, 2009

வன்னியில் என்ன நடக்கின்றது!?

பலருக்கும் புரியாத புதிர். அங்கு ஏதாவது அற்புதம் நடக்கும் என்று நம்பும் எல்லையில் கனவுகள்;. ஆயுதங்கள் முதல் விமானம் வரை கொண்டுள்ள புலிகள், மூச்சு விடமுடியாத பாசிச நிர்வாகத்தை அச்சாகக் கொண்டுள்ள புலிகள், இன்று என்ன செய்கின்றனர் எனத் தெரியாது பலர் புலம்புகின்றனர். இந்த எல்லையில் ஆய்வுகள், அறிக்கைகள் வேறு.

1980-1983 இல் போராட்டம் தொடங்கிய போது, 'சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது" என்ற பழமொழியை எமது தந்தைமாரும் ஊரில் வயதானவர்களும் கூறினர். ஆனால் ஆயுதத்தை வழிபட்ட எம் தலைமுறை, அதை எள்ளி நகையாடியாது, இழிவாடியது. அதுவோ இன்று எம் இனத்தையே அழித்துவிட்டது. ஆக்கிரமிப்பு யுத்தம், தற்காப்பு யுத்தம் என்று, என்னதான் தொப்பியை புரட்டிப் போட்டாலும், சொந்த மக்களுக்கு எதிரான யுத்தத்தை நடத்தியவர்களின் அழிவு அரங்கேறுகின்றது. அவர்கள் தம் அழிவின் போது, மக்களை யுத்தமுனையில் திணித்து கொன்றுவிடுகின்ற அதே அரசியல் வக்கிரமும் அரங்கேறுகின்றது.

கடந்த 30 வருடமாக மணலால் கட்டிய கோட்டையில், ஆயுதத்தைச் செருகி அதையே தமது வழிபாட்டுப் பொருளாக்கினர். எல்லாம் அவன் செயலே என்று நம்புமளவும் வீங்கியவர்கள், செயல்கள் செய்கைகள் மூலம் கற்பனையில் ஒரு விம்பத்தையே உருவாக்கினர். புலித்தேசியம் பாசிசமாக, மக்களின் சுயநிர்ணய உரிமையோ உரிமை மறுப்பாக்கியது. எதுவும் தம்மை மீறியில்லை என்ற அளவுக்கு, முழுச் சமூகத்தையும் அச்சமூட்டி பீதியடைய வைத்தவர்கள், மக்களை செயலற்றவர்களாக்கினர்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: