தமிழ் அரங்கம்

Friday, January 23, 2009

இருள் மனிதர்கள்

நடந்து நடந்து இரண்டு பேரும் அய்யனார் கோயிலைத்தான் தாண்டியிருக்கிறார்கள். இன்னும் கரைப் பாதையேறி ஒரு கல் தொலைவு நடந்து கல்வெட்டாங் கிடங்கிற்குள் இறங்கி மேடேறி பனைக்கூட்டம் தாண்டி அப்பண்டு முதலாளி தோட்டங் கடந்து பைபாஸ் ரோடு போக வேண்டும். அங்கிருந்து டவுன் ஆஸ்பத்திரிக்கு குறுக்கும் நெடுக்குமாய் தெருக்களுக்குள் நுழைந்து போனாலும் அந்த தூரம் மட்டும் ஒரு மைல் தாராளமாய் இருக்கும்.

அக்னி நட்சத்திரம் முன்னேழு பின்னேழு முடிந்து ஒரு ஏழுநாள் ஆனபின்னாலும் வெயிலின் உக்கிரம் தீயாய் உடம்பில் விழுந்து எரிந்தது. அறுபதைத் தாண்டிய வயதாகிப் போன பங்கஜத்தம்மாளுக்கு ஈழை நோய் கண்டிருந்தது. முந்திச் சேலையால் தலையை முக்காடிட்டு கூன் விழுந்த உடம்பைத் தாங்கிப் பிடிக்கிற மாதிரி கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு அடியை எண்ணி எண்ணி வைத்து நடந்தாள். போய்ச் சேர வேண்டுமே என்ற அந்த நடைதான் அவளுக்கு விரசல்.

நெஞ்செலும்புகளின் இடையில் தோல்படிந்து எண்ணி விடும்படியாக அவை வெளித்தெரிந்தன. இடுப்பில் இருந்த கைகளை இறக்கி இரண்டு தொடைகளிலும் ஊன்றி கரைப்பாதையில் ஏறி பின்னால் திரும்பிப் பார்த்தாள்.

தூரத்தில் வந்து கொண்டிருந்த வயித்துப் பிள்ளைச் சூலி முனிச்சிக்கு ரொம்பவும் முடியவில்லை. வாயிலிருந்து நாக்கு லேசாக வெளித்தள்ள கிந்தி கிந்தி நடந்து வந்து கொண்டிருந்தாள். வெயிலும் தூரமும் வயிறு பருமனும் அவளைக் கிறங்கடித்து விட்டது. முழு...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: