தமிழ் அரங்கம்

Friday, May 22, 2009

பன்னாட்டு நிறுவனங்களின் நிலப்பறிப்பு ஏழை நாடுகள் எதிர்கொள்ளும் புதிய அபாயம்

ஆறுகளும் பசுமையான வயல்களும், மலைகளும் நீர்வீழ்ச்சியும், காடுகளும் விலங்குகளும் கொண்ட இயற்கை அழகு நிறைந்த ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கர், கடந்த பிப்ரவரி மார்ச் மாதங்களில் விவசாயிகளின் போராட்டங்களால் குலுங்கியது. "ஒருபிடி மண்ணைக்கூட அந்நியனுக்குத் தரமாட்டோம்!; தென்கொரிய டேவூ நிறுவனமே, நாட்டை விட்டு வெளியேறு!; நாட்டைத் தாரைவார்க்கும் சர்வாதிகார அதிபர் ஒழிக!'' என்ற முழக்கங்களுடன் அந்நாட்டு விவசாயிகள் அணிதிரண்டு போராட்டங்களைத் தொடர்ந்தனர்.

போராட்டத்தை ஒடுக்க சர்வாதிகார அதிபர் மார்க் ரவலோமானனா கட்டவிழ்த்துவிட்ட பயங்கரவாத அடக்குமுறையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பலியாகினர். இப்போராட்டங்களைச் சாதகமாக்கிக் கொண்டு, தலைநகர மேயரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆண்ரி ரஜேவினா சர்வாதிகார அதிபருக்கெதிரான நாட்டு மக்களின் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். அவரைச் சர்வாதிகார அதிபர் பதவி நீக்கம் செய்ததும், நாடெங்கும் போராட்டம் தீவிரமடைந்தது. அதிபர் மார்க் அம்பலப்பட்டு தனிமைப்பட்டுப் போன நிலையில், இராணுவம் மற்றும் சட்டவாத நீதித்துறையின் ஆதரவோடு எதிர்க்கட்சித் தலைவரான ஆண்ரி, சர்வாதிகார அதிபரைப் பதவி நீக்கம் செய்துவிட்டு கடந்த மார்ச் மூன்றாம் வாரத்தில் புதிய அதிபராக முடிசூட்டிக் கொண்டுள்ளார்.

ஆப்பிரிக்க கண்டத்தி............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: