தமிழ் அரங்கம்

Saturday, May 23, 2009

இரத்தம் தோய்ந்த வெற்றியும் மை பூசிய மசிரும் - ரவி

இலங்கை அரசின் ஜனாதிபதி கறுப்பு மயிருடனும் கறுப்பு மீசையுடனும் கம்பீரமாய் வருகிறார். ஏதோ ஒரு செய்தியை அறிவிக்கும் அவசரத்தில் விமானத்திலிருந்து இறங்கிவருகிறார். இதுவரை மண்ணைப் பிரிந்து அகதியாக இருந்ததுபோன்ற, அல்லது விடுவிக்கப்பட்ட ஒரு மண்ணில் முதன்முதல் காலடி வைப்பதுபோன்ற ஒரு பாவனையில் மண்ணை தொட்டு வணங்குகிறார். அவர் பரபரப்பாக இருந்தார். விமான ஓடுபாதையில் அமைச்சர் பட்டாளம் குதூகலமாய் வரவேற்றுக் கொண்டிருந்தது..

. அந்தப் பெண்ணின் முதுகுப்பகுதி நீளத்துக்கும் கோரமாகக் கிழிபட்டிருந்தது. வன்னி மண்ணில் சரிந்து வீழ்ந்திருந்தாள் அவள். இலையான்கள் காயத்தை மொய்த்துக்கொண்டிருந்தன. சதையின் கிழிவுக்குள் உட்புகுந்த இலையான்கள் வெளிவரத்துடிக்கும் முயற்சியில் ஈடுபடும்போதெல்லாம் அவளின் கிழிந்த சதைகள் பொருமுவதும் அமர்வதுமாக அசைந்துகொண்டிருந்தது. அவள் உயிருடன் இருந்தாள். முனகினாள். இரத்தம் கொட்டியபடி இருந்தது. காயத்துள் புகுந்த இலையானின் அரிப்பை விரட்ட அவளது கைகள் எழ எத்தனித்து எத்தனித்து தோல்விகண்டன. கண்கள் திறந்திருந்தன. ......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: