தமிழ் அரங்கம்

Sunday, June 28, 2009

அரசியல் படுகொலைகளை சாதியமாக திரிக்கும் வலதுசாரிய மனுதர்மம்

தமிழீழத்தின் பெயரில் நடந்தேறிய வலதுசாரிய பாசிசப் படுகொலைகளை, சாதியப் படுகொலையாக திரித்து சித்தரிக்கும் ஒரு அரசியல் நாவல் தான் 'மறைவில் ஐந்து முகங்கள்". தாழ்ந்த சாதிகளைச் சேர்ந்தவர்கள் உயர்சாதியினர் மீது நடத்துகின்ற சாதிப் படுகொலைகளே தமிழீழத்தில் நடப்பதாக திரிக்கும் உயர்சாதிய வெறியர்கள், மனுதர்ம அடிப்படையில் நீதியைக் கோருகின்றனர்.

ஒரு வரலாற்று திரிபு, ஒரு அரசியல் திரிபாக இங்கு புகுத்தப்படுகின்றது. தமிழ் தேசிய வலதுசாரிய பிற்போக்கு அரசியலை ஆராய, விமர்சிக்க மறுக்கின்ற போது அது சாதியமாக திரிபுறுகின்றது. ஏன் இந்த கொலைகளை தமிழீழத்தின் பெயரில் செய்கின்றனர் என்பதையும், இதன் பின்னுள்ள வர்க்க அரசியலைக் கூட இந்த நாவல் திரித்து மூடிமறைக்க முனைகின்றது. உண்மையில் தமிழ்தேசியம் தமிழீழப் பாசிசமாக உருவானபோது, வலதுசாரி அரசியல் தொடர்ச்சியாக நெருக்கடிக்குள்ளாகின்றது. தனது சொந்த வலதுசாரிய பிற்போக்கு அரசியலை பாதுகாக்க, கொலைகார அரசியல் வரலாற்றையே இந்த நாவல் தனக்கு ஏற்ப திரிக்கின்றது. தனது உயர்சாதிய மனுதர்மத்தை முன்னிலைப்படுத்தி, நடப்பது உயர் சாதியப் படுகொலைகளே என்று இந்த நாவல் தர்க்கித்து சித்தரிக்க முனைகின்றது.

உண்மையில் 'மறைவில் ஜந்து முகங்கள்" என்ற நாவலின் அரசியலே, சாதியம் தான். ஆனால் இயக்க படுகொலைகளைப் பற்றி இந்த நாவல் பேசுவதால்.......
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: