தமிழ் அரங்கம்

Monday, June 29, 2009

இனக் (புலி) களையெடுப்பை நியாயப்படுத்தும் மூதேவிகள்

ஜனநாயக வேஷம் போட்டு குலைக்கும் கூட்டம், இனக்களையெடுப்பை புலிக் களையெடுப்பாக சித்தரிக்கின்றது. நாட்டில் அமைதி மற்றும் யுத்தமற்ற சூழல் நிலவ, இந்தக் களையெடுப்பு அவசியம் என்கின்றது. இப்படி மகிந்தாவின் பாசிசத்துக்கு முன்னால், விளக்கு பிடித்துச் செல்லுகின்றனர். கேட்பாட்டு ரீதியாக, நடைமுறை ரீதியாக, இதை அவர்கள் செய்யத் தயாராகவே உள்ளனர். இவர்கள் வேறு யாருமில்லை, தமக்கு மட்டும் "ஜனநாயகம்" பேசும், "ஜனநாயக" மூதேவிகள்.

புலிப் பாசிசம் இதே போன்றே 30 வருடமாக தமிழ் மக்கள் மத்தியில் களையெடுப்பை நடத்திய போது, நாங்கள் அதற்கு எதிராகப் போராடினோம். அரசு இன்று அதே போன்ற களையெடுப்பையே நடத்துகின்றது. அன்று எந்த அடிப்படையில் எதிர்த்தோமோ, அதே அடிப்படையில் இன்றும் நாம் மட்டும் எதிர்க்கிறோம். அன்று தேசியத்தின் பெயரில் புலிகள் இதைச் செய்தனர். இன்று "ஜனநாயக"த்தின் பெயரில் அரசு இதைச் செய்கின்றது. இப்படி பாசிசத்தின் இரு வேறு முகங்கள். அதே போல் "தேசியம், ஜனநாயகம்" என்று, பாசிசம் முன்னெடுக்கும் களையெடுப்பை, மனிதவிடுதலையாக காட்டி கொஞ்சும் பச்சோந்திகள் கூட்டம்.

யுத்தமற்ற சூழல் நிலவ, இந்தக் களையெடுப்பு அவசியம் என்ற தர்க்கத்தை முன்வைத்து, இன்று "ஜனநாயகம்" பேசும் மூன்றாம்தரப் பேர்வழிகள் நியாயப்படுத்துகின்றனர். இப்படி அரசு சார்பாக இயங்கும் வானொலிகள், தொலைக்காட்சிகள், இந்த தர்க்கத்.....
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: