தமிழ் அரங்கம்

Monday, June 8, 2009

பெண்களை நிர்வாணப்படுத்தியது புலியென்று, அரச ஆதரவாக ஆய்வு செய்கின்றனர்

இராணுவத்தின் வெற்றிகரமான இனவழிப்பின் போது, பெண்களுக்கு நடந்த அவமானத்தை உறுதிசெய்யும் வண்ணம் இராணுவம் எடுத்த நிர்வாணப்படத்தை அதிரடி இணையம் வெளியிட்டு இருந்தது. அதிரடியில் தொடர்ச்சியாக எழுதும், கிழக்கான் ஆதம் என்ற நபர், 'இராணுவத்தினரை விட புலிகளே செய்திருக்கச் சாத்தியங்கள் அதிகமுள்ளது." என்று எழுதுகின்றார்.

அதிரடி ஆசிரியர்கள் இதை வெளியிட்டு, தம் மறுப்பை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் அதிரடியின் நிலை என்பது, பொறுப்புமிக்கதும் ஆரோக்கியமானதுமாகும். அத்துடன் இன்னும் பல படங்கள் தமக்கு கிடைத்ததாகவும் கூட அறிவித்துள்ளனர்.

கிழக்கான் ஆதம் எழுதுகின்றார் 'அப்பெண் போராளிகள் இராணுவத்தினரால் தான் நிர்வாணமாக்கப்பட்டனரா? என்பதற்கு எந்த ஆதாரத்தையும் அதில் காண முடியவில்லை மாறாக பல சந்தேகங்களே தொக்கி நிற்கின்றன. அவைகளை நோக்கும் போது தங்கள் சக போராளிகளால் நிர்வாணப்படுத்தப்பட்டு அவைகள் புகைப்படங்களாக்கப்பட்டு இறுதியில் பிரச்சாரத்திற்காக வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் போலத்தான் அவை தெரிகின்றன." இங்கு பேரினவாத ஆணாதிக்க இராணுவத்தைக் காப்பாற்றும்
......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: