இடதுசாரியம், முற்போக்கு, மார்க்சியம் பேசியபடி மானுட விரோதியாக உள்ள ஆதவன் தீட்சண்யாவுக்கும், தமிழ் தேசியத்தின் பெயரில் புலியிசம் பேசும் தமிழ்நதிக்கும் இடையில், பல மானிடம் சார்ந்த விடையங்கள் கொச்சைப்படுத்தப் படுகின்றது. இவை இந்திய எழுத்தாளர் தளத்தில், இவை மலினப்படுகின்றது.
தங்கள் பிழைப்புவாத எழுத்துக்கு ஏற்ப, சமகால நிகழ்வுகள் பச்சோந்திகளாக வாழ்வதுதான், எழுத்தாளர்களின் தார்மீகமான நிலையென்று நிலைநிறுத்த முனைகின்றனர்.
இப்படிப்பட்டவர் தான் ஆதவன் தீட்சண்யா. இவர் மனு விரோதியல்ல, மானுட விரோதி. இவர் போர்த்தியுள்ள துண்டுக்கு ஏற்ப, "புதுவிசை" இதழின் ஆசிரியராகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளராகவும் இருப்பவர். இதற்கமைய அவரின் மானுடத்துக்கு எதிரான கோட்பாடு, நடுவீதிக்கு வந்துள்ளது.
இதற்கு தமிழ்நதி எழுப்பிய கேள்வி உதவியது. அவர் கேள்வி "சில மைல்கள் அருகில் இருக்கும் இலங்கையில் இத்தனை இனப்படுகொலைகள் நடந்தும் உங்களில் யாரும் அதைப் பற்றி ஒன்றும் பேசாமல், எழுதாமல் இருந்ததன் காரணந்தான் என்ன........... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
No comments:
Post a Comment