தமிழ் அரங்கம்

Friday, July 10, 2009

ரகுமானுக்கு ஆஸ்கர்: எல்லாப் புகழும் அமெரிக்காவுக்கே

கடந்த பிப்ரவரி 22ஆம் தேதியன்று சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதை ஸ்லம்டாக் மில்லியனர் (கோடீ சுவரனான சேரி நாய்) திரைப்படத்திற் காக ஏ.ஆர்.ரகுமான் பெற்றார். அமெரிக்கா வின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கோடாக் அரங்கத்தின் மேடையில் விருதைக் கையில் ஏந்தியபடி, "எல்லாப் புகழும் இறைவனுக்கே!' எனத் தமிழில் உற்சாகமாக மொழிந்தார்.


அடுத்த கணம் இந்தியா முழுவதும் ஊடகங்கள், குறிப்பாக ஆங்கிலச் செய்தி ஊடகங்கள், ஒரே குரலில் "ஜெய் ஹோ#' (வெற்றி உண்டாகட்டும்!) என ஆரவாரிக்க தொடங்கினர். ஒரு வாரத்திற்கும் மேலாக ஆரவாரம் அடங்கவில்லை. ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசினார், எனவே இது தமிழுக்கு, தமிழனுக்கு கிடைத்த வெற்றி என ஒரு பக்கம் கொண்டாட்டம். மற்றொரு புறம், ஒட்டுமொத்த இந்தியாவிற்கே இது ஒரு மாபெரும் அங்கீகாரம், யாரும் சாதிக்காத சாதனை என ஆரவாரம்.

ஒட்டு மொத்தமாக இவ்வாண்டு ஆஸ்கர் விழாவை இத்திரைப்படம் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதாக மேலைநாட்டுப் பத்திரிக்கைகள் எழுதின. இத்திரைப்படத்தின் இணை இயக்குனராகப் பணியாற்றிய லவ்லீன் டாண்டன், ""ஏ.ஆர்.ரகுமான் போல இன்னும் பல திற....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: