தமிழ் அரங்கம்

Saturday, August 29, 2009

வினவு குழு எமக்கு எதிராக நடத்தும் "வறட்டுவாதத்திற்கு எதிரான போராட்டம்!!" (பகுதி 5)

'புலி அனுதாபிகளுடன்' சேர்ந்து அவர்கள் துயரங்களை கேட்கவும், விவாதிக்கவும், அரசியல் செய்யவும் மறுப்பது வறட்டுவாதமாம். இந்த வரட்டுவாதத்தை முறியடிப்பது தானாம், உடனடியான அரசியல் பணி என்று வினவு குழு அறிவித்துள்ளது. இங்கு அவர்கள் 'புலி அனுதாபிகள்' என்று கூறுபவர்களை, புலிகளாக, பாசிட்டுகளாக பார்த்தால் மன்னிக்க முடியாத வரட்டுத்தனமாம்.

இப்படி கூறி ஈழத்து கம்யூனிஸ்டுகளை புலியுடன் சென்று, வென்று எடுப்பது தான், சரியான அரசியல் யுத்ததந்திரம் என்கின்றனர். இதை அவர்கள் நடத்த, நாங்கள் அம்பலப்படுத்த, அதை வறட்டுவாதம் என்று முத்திரை குத்தியுள்ளனர்.

மற்றொரு நாட்டு கம்யூனிச இயக்கத்தின் அரசியல் வழிமுறைக்கு எதிரான போராட்டத்தை, "வறட்டுவாதத்திற்கு எதிரான போராட்டம்!!" என்று வினவு, திடீரென வினவு குழுவாக மாறி அறிவித்திருக்கின்றது. இந்த அரசியல் வழிமுறை சர்வதேசியத்தின் அரசியல் வழிமுறைகள் அனைத்தையும் நிராகரிக்கின்றது. ஈழத்து கம்யூனிஸ்டுகளாகிய (நாங்கள் கம்யூனிஸ்ட்டுகளல்ல என்றால் அதைச் சொல்லுங்கள்) நாங்கள், பாசிசத்தை எந்த அரசியல் வழி ஊடாக, யாரைச் சார்ந்து எப்படி போராட வேண்டும் என்ற பிரச்சாரத்தை, கிளர்ச்சியையும் கடந்த 30 வருடமாக பலரை இழந்தபடி தொடர்ச்சியாக செய்து வ....
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: