தமிழ் அரங்கம்

Thursday, August 27, 2009

தோழர் வினவின் தளத்தில் கூறும் ஈழ அனுபவம் புரட்டுத்தனமானது

கடந்த வரலாற்றில் தமிழ்மக்கள் சந்தித்தது, புலிப் பாசிசம் கூறுவது போல் ஒரு அனுபவமல்ல. பேரினவாதம் முதல் இயக்கங்கள் வரை, தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கின. புலிகள் மக்களுக்கு கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரத்தை வழங்கினால், தாம் அரசியல் அனாதையாகிவிடுவோம் என்று வெளிப்படையாக துண்டுப்பிரசுரம் போட்டு சொல்லுமளவும் புலிப் பாசிசம் கொட்டமடித்தது.

(பார்க்க.....தமிழீழ விடுதலைப் புலிகள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு) தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மாணவர் சமூகம் முன்னிறுத்தி, புலிப் பாசிசத்துக்கு சவால் விட்டது. இது புலிகளை அரசியல் அனாதையாக்கி விடும் என்று புலிகள் பகிரங்கமாகவே கூறினர். இவை எல்லாம் அந்த மண்ணில் நடந்தது. இப்படிப் போராடியவர்களைத் தான், புலிகள் தேடி அழித்தனர். இந்தப் போராட்டத்தை தலைமை தாங்கிய மாணவன் விமேலேஸ்வரன், புலிகளால் படுகொலை செய்யப்பட்டான்;. பார்க்க பு.ஜ கட்டுரையை (புலிகளின் பாசிசம்); இந்தப் பாசிசத்தை முகம் கொடுக்காத சமூக உறுப்பினர் எம் மண்ணில் யாரும் கிடையாது. இந்த வகையில் தான் இயக்கங்களுக்கும் அதன் அடிவருடித்தனத்துக்கும் எதிராக, 22 வருடத்துக்கு முந்தைய பல்வேறு துண்டுப் .......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: