தமிழ் அரங்கம்

Monday, November 16, 2009

சூரிச் இல் 11.10.2009 அன்று நடந்த கலந்துரையாடல் (தொடர்ச்சி…)

பாகம்-2
ரயாகரன் :வணக்கம். நேரடியாகவே விவாதத்துக்குப் போகலாம் என நினைக்கிறேன். இங்கு உரையாற்றியவர்களினது கருத்துகளிலிருந்து தொடங்கலாமென நினைக்கிறேன். மே17 க்குப் பிறகு ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்களில் முக்கியமானது அதுவரைகாலமும் புலிப் பாசிசத்தினூடாகத்தான் அனைத்தும் என புலியல்லாத தரப்பு இயக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

அது முடிவுக்கு வந்திருக்கின்றது. புலத்துப் புலிகள் அதனுடைய நிதியாதாரத்துக்குப் பின்னால் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். புலிகளின் பாசிசம் தகர்ந்து போக அரசு பாசிசம் மேலெழுந்து வந்துள்ளது. எதைப் புலி செய்ததோ அதை இன்று அரசு செய்துகொண்டிருக்கின்றது. கடந்தகாலத்தில் புலிப் பாசிசம் எனறு சொல்லிக் கொண்டு அதற்கு எதிராகப் போராடினோமோ அல்லது எதிர்த்து நின்றமோ அதேயளவு காரணங்கள் எல்லாவற்றையும் மூடிவைத்துவிட்டு இன்று அரசை ஆதரிப்பவர்களாக பெரும்பான்மையாக புலியெதிர்ப்புப் பேசியவர்கள் மாறி நிற்கின்றார்கள். ஒரு மாற்றத்தை நோக்கிய தேவை அவசியம் என்பதைத்தான் நாம் இன்று சொல்லி நிற்கின்றோம்.

No comments: