தமிழ் அரங்கம்

Thursday, November 19, 2009

எப்போதும் மக்களின் எதிரியாகவே கூத்தாடிய கூட்டமைப்பு

வலதுசாரி தமிழ் அரசியல் என்பது, யார் அதிகாரத்தில் உள்ளனரோ, அவர்களின் பாதம் தொழுது மக்களின் முதுகில் குத்துவதுதான். அன்று புலிப் பாசிசத்தினை தவழ்ந்து நக்கியவர்கள், இன்று மகிந்தாவுக்கு ஆரத்தி எடுத்து நக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த வலதுசாரிய பிழைப்புக்கு என்று ஒரு வரலாறு உண்டு. தமிழ் காங்கிரஸ்சில் இருந்த சிலர், தமிழரசுக் கட்சியாகினர். மீண்டும் தமிழ் காங்கிரஸ்; உள்ளடங்க, கூட்டணியாகினர். புலியின் பின் தொழுது எழுவதற்காய் கூட்டமைப்பாக்கினர். இவர்கள் தங்கள் இந்த வரலாறு நெடுகிலும், மக்களுடன் மக்களுக்காக நின்றது கிடையாது. சுரண்டும் ஆளும் வர்க்கத்தின் எடுபிடிகளாக, வலதுசாரிய வக்கிரத்துடன் மக்களின் பெயரில் அரசியல் பிழைப்பு நடத்தியவர்கள். இதற்கமையவே தமிழ் மக்களை குறுகிய இனவாதத்துடன் இன ரீதியாக பிளந்தனர். அதையே தமிழ் மக்களின் விடிவிற்கான அரசியலாகவும் காட்டினர்.

இப்படி பேரினவாதத்தின் துணையுடன், தமிழ் குறுந் தேசியத்தை விதைத்தனர். குறுகிய இனவாதத்தை தமிழ் தேசியம் என்றனர். இப்படி தங்கள் குறுகிய அரசியல் பிழைப்பு வாதத்தைத் தாண்டி, தமிழ் மக்களை இவர்கள் வழிகாட்டவில்லை. இதனால் இந்த மிதவாத பிழைப்புவாதம் நெருக்கடிக்குள்ளானது. இதன் பின் இருந்த இளைஞர்கள், தங்கள் தலைமைகளின் பிழைப்புவாதத்தையே கேள்விக்குள்ளாக்கினர்.

இவர்களின் மிதவாதத்.... ..... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: