தமிழ் அரங்கம்

Monday, February 1, 2010

நாடும் நடப்பும் – ஜனாதிபதித் தேர்தல் (26.01.2010)

இலங்கையில் முதல் தடவையாக ஒரே நாளிலும், இரண்டு வருடத்துக்கு முதலாகவும் இவ் ஜனாதிபதித் தேர்தல் நடக்கிறது. இத் தேர்தலில் ஒரு கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 11ஆயிரத்து 98 வாக்களிப்பு நிலையங்களையும், இதற்கான காவற் கடமையில் 68 ஆயிரத்து 800 பொலீசாரும் தயாரான நிலையில் இருந்தது.

இத் தேர்தலைக் கண்காணிப்பதற்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆயத்தமாக இருக்கின்றனர். தேசிய வாக்களிப்பு கண்காணிப்பு நிலையம், தேர்தல் கண்காணிப்புக்கான வலையமைப்பு, வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம், பெப்ரல், கபே போன்றவைகளும் வேறு சில தனியார் தேர்தல் கண்காணிப்பு நிலையங்களும், கண்காணிப்பில் ஈடுபடத் தயாராக இருப்பதாக தேர்தல் திணைக்களம் தெரிவிக்கிறது.

பொது நலவாய மற்றும் தொற்காசிய பிராந்திய நாடுகளில் இருந்து 85 க்கு மேற்பட்ட வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் வந்திருந்தனர்..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: