தமிழ் அரங்கம்

Thursday, September 22, 2005

உலகின் கடன் எதை ..

உலகின் கடன் எதை நோக்கி

1990 இல் வட்டி மற்றும் மிள கொடுத்தல் வருடம் 11400 கோடி டொலர் என்ற நிலையைத் தொட்டது. 1989 இல் மூன்றாம் உலக நாடுகளின் மொத்த கடன் 132000 கோடி டொலரகியது. இதில் பாதி வட்டி விகித உயர்வினால் எற்பட்டது. 1983-1989 ஆகிய 7 ஆண்டில் வருடம் 5000 கோடி டாலர் வருடாந்தம் லாபமாகவும் வட்டியுமாக ஏகாதிபத்திய நாடுகளுக்கு சென்றது. இந்தக் கடன் பின் தங்கி நாட்டுக்குள், மிகவும் பின்தங்கிய புதிய நாடுகளை உற்பத்தியாகியது. 1983 இல் 30 யாக இருந்த மிகப் பின்தங்கிய நாடுகள், 1989 இல் 42 யாக உயர்ந்தது. திணிக்கப்பட்ட கடன் பல நாடுகளின் தலைவிதியையே காலில் போட்டு எறி மிதித்தது. எங்கும் வறுமை கோரப்பிடியாக, இதுவே சமூக போக்காகியது.

1991 இல் வளரும் (மூன்றாம் உலக) நாடுகளின் மொத்தக் கடன் 90000 கோடி டொலராகும்;. இந்தக் கடனை நிர்வாகிக்கவும்;, இதற்கான வட்டியாகவும் அந்த வருடம் வளரும் (மூன்றாம் உலக) நாடுகள் செலுத்திய தொகையோ 11400 கோடி டொலராகும்;. இத 2001 இல் 38000 கோடி டொலராகியுள்ளது. அதேநேரம் 1980 இல் மூன்றாம் உலக நாடுகளின் கடன் 58000 கோடி டொலராகவே இருந்தது. இது 2001 இல் 240000 கோடி (2.4 டிரில்லியன்) டொலராகியது. கடன் பெருகிச் செல்வதையும், கடனில் இருந்து மீள முடியாத வகையில் நாடுகளின் தொத்தடிமைத்தனத்தையுமே இது எடுத்துக் காட்டுகின்றது.

இந்த கடன் மூலம் கொள்ளையடித்த தொகையோ மிகப்பிரமாண்டமானது. கடனக்கான வட்டியாகவும் மீள் கொடுப்பனவாகவும் 1980 முதல் 2001 வரை கொடுத்த மொத்த தொகை 460000 கோடி (4.6 டிரில்லியன்) டொலராகும்;. உண்மையில் 2001 இல் இருந்த கடனைப் போல் அண்ணளவாக இரண்டு மடங்கு தொகையை வட்டியாகவும் மீன் கொடுப்பனவாகவும் 1980 முதல் மூன்றாம் உலக நாடுகள் செலுத்தியுள்ளனர். இது ஒரு ஆச்சரியமான உண்மை. மேற்கு மிகப்பெரிய ஒரு தொகையை மூன்றாம் உலக நாடுகளில் இருந்து கடத்திச் சென்றுள்ளதை இது எடுத்துக் காட்டகின்றது. இந்த தொகையை எங்கிருந்து எப்படி அவர்கள் அறவிட்டனர். மூன்றாம் உலகமக்களிள் உழைப்புத் தான் இப்படி மேற்கு நோக்கிச் சென்றது. முழு இழப்பும் மூன்றாம் உலகமக்களின் வாழ்க்கையில் இன்று பிரதிபலிக்கின்றது. மூன்றாம் உலகநாடுகளின் வறுமைக்கு, மேற்கின் இந்த சூறையாடல் ஒரு முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். மேற்கின் செல்வத்துக்கு மூன்றாம் உலக நாட்டு எழை மக்கள் உழைக்கின்றனர். மூன்றாம் உலகம் மீதான மேற்கின் சூறையாடல் இவைகள் மட்டுமல்ல. இதை பல வழிபாதைகளில் நடக்கின்றன.

உண்மையில் இந்த கடன் என்ன செய்கின்றது. 1980இல் ஒரு டொரரை கடனாக பெற்றவர்கள், அதற்கான வட்டியாக கொடுத்தது 8 டொலர். அதே நேரம் கொடுக்க வேண்டிய முதல் 4 டொலராக மாறியது. இதைத் தான் எல்லோரும் மேற்கின் கருணை சார்ந்த உதவி என்கிறார்கள். முன்றாம் உலக நாடுகளும், அந்த நாட்டு மக்களும் எப்படி ஏகாதிபத்தியத்துக்கு உழைத்துக் கொடுக்கின்றார்கள் என்பதை இது தெளிவாக எமக்கு எடுத்துரைக்கின்றது. இது முடிவல்ல, உலகமயமாதலில் முடிவற்ற தொடர் கதையும் இதுதான். இது முன்பைவிட கொடூராமாகவே களமிறங்கி நிற்கின்றது.

http://www.tamilcircle.net/

2 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.