தமிழ் அரங்கம்

Thursday, September 22, 2005

மார்க்ஸ் எதைக் கற்க ...

மார்க்ஸ் எதைக் கற்க கோருகின்றார்

"மார்க்சுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது யாதென்றால், தாம் ஆராய முற்பட்டுள்ள புலப்பாடுகளின் விதியைக் கண்டுபிடிப்பதேளூ குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்திற்குள் திட்டமான வடிவத்தையும் பரஸ்பரத் தொடர்பையும் கொண்டுள்ள இப்புலப்பாடுகளை ஆளுகிற விதி மட்டுமன்று அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அவை திரிந்து மாறுபடுவது பற்றிய, வளர்;ச்சியடைவது பற்றிய, அதாவது ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்துக்கு, தொடர்புகளின் ஒரு வரிசையிலிருந்து வேறுறொரு வரிசைக்கு மாறிச் செல்வது பற்றிய விதி அவருக்கு இன்னுமதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த விதியைக் கண்டுபிடித்தவுடனேயே, அதனை சமூக வாழ்வில் வெளிக்காட்டுகிற விளைவுகளை அவர் நுணுக்கமாக ஆராய்கிறார். ஆதலால் மாhக்ஸ் ஒன்றைப் பற்றி மட்டுமே கவலை கொள்கின்றர்ளூ சமூக நிலைமைகளின் நிர்ணயமான அமைப்பகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர வேண்டிய அவசியத்தை விடாக்கண்டிப்பான விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் உணர்த்துவதைப் பற்றியும், அடிப்படைத் தொடக்க ஆதாரங்களாக அவருக்குப் பயன்படுகிற உண்மைகளை முடிந்த வரை பாரபட்சமின்றி நிலைநாட்டுவதைப் பற்றியும் கவலை கொள்கிறார். இன்றுள்ள அமைப்பின் அவசியம், இவ்வமைப்பு தவிர்க்க முடியாமலே மறைந்து அதனிடத்துக்கு வர வேண்டிய இன்னொருஅமைப்பின் அவசியம் ஆகிய இரு அவசியங்களையும், மனிதர்கள் நடம்பினாலும் நம்பா விட்டாலும், உணர்ந்திருந்தாலும் உணராதிருந்தாலும் இப்படித்தான் நிகளுமென்பதையும் அவர் ஒருங்கே நிரூபித்த விட்டாலே இதற்க்குப் போதுமானது. மார்க்ஸ் சமுதாயத்தின் இயக்கத்தை இயற்கை வரலாற்று நிகழ்முறையாக அணுகுகிறார்........... நாகரிகத்தின் வரலாற்றில் உணர்வு அமிசம் இவ்வளவு கீழ்நிலைப் பாத்திரத்தை வகிக்கிற தென்றால், நாகரிகத்தைக் கருப்பொருளாகக் கொண்ட ஒரு விமர்சன ஆராய்ச்சி உணர்வின் எந்த வடிவத்தையும் அல்லது எந்தப் பயனையும் அடிப்படையாகக் கொண்டிருக்க முடியாது என்பது கூறாமல் விளங்கும். இப்படிச் சொல்வதன் பொருள் அதன் தொடக்க ஆதாரமாகப் பயன்படக் கூடியது கருத்தன்று. பொருளாயதப் புலப்பாடேஎன்பதாகும். இப்படிப்பட்ட ஆராய்ச்சி ஒரு நிகழ்வை கருத்துகளோடு அல்லாமல், இன்னொரு நிகழ்வோடு மோத விட்டும், ஒப்பிட்டும் பார்ப்பதுடன் நின்று கொள்ளும். முடிந்தவரை சரிநுட்பமாக இரு நிகழ்வுகளையும் ஆராய்வதும், ஒன்றோடொன்று தொடர்புபடுத்தினால் உண்மையிலேயே ஒரு பரிணாமத்தின் வௌவேறு அமிசங்களாக அவை அமைவதும் இவ்வாராய்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்ளூ ஆனால் அனைத்திலும் மிக முக்கியமானது இப்படியொரு பரிணாமத்தின் வௌ;வேறு கட்டங்கள் வெளிப்படுகிற அடுத்தடுத்த நிகழ்ச்சிகளின் தொடரை, வரிசைக் கிரமங்கள் மற்றும் சங்கிலித் தொடர்களை விடாக்கண்டிப்புடன் பாகுத்தாய்வதாகும்"

www.tamilcircle.net

1 comment:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.