தமிழ் அரங்கம்

Sunday, September 18, 2005

ஆபிரிக்காவின் இன்றைய ...

ஆபிரிக்காவின் இன்றைய இழிநிலைமைக்கு யார் காரணம்

முழுக்க முழுக்க ஏகாதிபத்திங்களே காரணமாகும். ஏகாதிபத்திய சூறையாடல் தான் ஆபிரிக்காவின் இன்றைய நிலைக்கு காரணமாகும். இந்த சூக்குமத்தை நாம் தெரிந்து கொள்வதே எம்முன்னுள்ள மிகப் பெரிய சவாலாக உள்ளது. ஆபிரிக்கா மக்களை அமெரிக்கா மூலதனம் கறுப்பு அடிமைகளாக சந்தைகளில் வாங்கி, அவர்களின் உடல் உழைப்பை பிழிந்து சுரண்டத் தொடங்கிய போதே அந்த மக்களின் வாழ்வு திட்டமிட்டே அழிகப்பட்டது. அமெரிக்கா மூலதனம் இப்படித் தான் அடிமைகளின் உழைப்பைக் கொண்டு கொழுத்தது. இப்படி அமெரிக்கா கண்டம் சார்ந்த மூலதனம் அண்ணளவாக 10 கோடி கறுப்பின அடிமைகளையே ஆபிரிக்காவில் இருந்து சுரண்டலுக்காகவே கடத்திச் சென்றது. இதைத்தான் ஐரோப்பிய மூலதனம் செய்தது. கூலியற்ற அடிமை உழைப்பு வேகம் பெற்ற போதே, அந்த நாடுகளையே காலனியாக்கத் தொடங்கினர். காலனிகள் மூலம் அந்த மக்களின் அடிப்படையான சமூக நுகர்வை புடுங்கி சுரண்டியதன் மூலம், மேற்கு நாடுகளில் செல்வம் குவியத் தொடங்கியது. மேற்கின் மூலதனம் இப்படித் தான் கொழுத்து வீங்கியது. இதைக் கொண்டே உலகமயமாதல் என்ற நவீன அடிமைத்தனம் புகுத்தப்பட்ட ஒரு வரலாற்று காலகட்டத்தில் நாம் இன்று உள்ளோம். இன்று இந்த நாடுகளை தமது அடிமை நாடுகளாக மாற்றிய வரலாற்றுப் போக்கில் தான், அந்த நாட்டு மக்கள் கையேந்திய நிலைக்கு இட்டுச் சென்றுள்ளனர்.

இன்றும் உலகில் வளங்கள் செறிந்த இடம் ஆபிரிக்காவாகவே உள்ளது. 30 சதவிகிதமான யூரேனியம் ஆபிரிக்காவிலேயே உள்ளது. வைரத்தில் 96 சதவிகிதத்தையும், குரோமியத்தில் 90 சதவிகிதத்தையும், பிளாட்டனத்தில் 85 சதவிகிதத்தையும், கோபால்ட்டில் 50 சதவிகிதத்தையும், மாங்கனீசில் 55 சதவிகிதத்தையும், பாக்சைட்டில் 40 சதவிகிதத்தையும், செம்பில் 13 சதவிகிதத்தையும், பாஸ்பேட்டுகளில் 50 சதவிகிதத்தையும் ஆபிரிக்காவே கொண்டுள்ளது. இதைவிட இரும்பு, நிக்கல், ஈயம் என்று அனைத்து மூலவளங்களும் அங்கு செறிவாக உள்ளது. 10 ஆபிரிக்கா நாடுகளே எண்ணை வளத்தில் பெரும் பகுதியை உற்பத்தி செய்கின்றன. இதைவிட பெரும் நீர் வளங்களையும் கொண்ட ஆபிரிக்கவே, இன்று உலகின் வறுமையின் கோரப்பிடியில் காணப்படுகின்றது.

இவை இன்றும் உற்பத்தி செய்யப்படுகின்ற இன்றைய நிலையலும் இதுதான் நிலை. என் இந்த சமூக அவலம்;. இவ் உற்பத்திகள் முழுக்கமுழுக்க அன்னியனின் கட்டுபாட்டுக்குள் சென்றுள்ளது நிலையில், சமூகத்தின் வறுமை அவலமாகவே காட்டியளிப்பதில் வியNhதுமில்லை. ஆனால் இன்றைய உலகளவிய சமூகப் பொதுப்புத்தி மட்டம் இதை எற்றுக் கொள்வதில்லை. இதனால் எதார்த்த உண்மை புதைகுழியில் புதைக்கப்பட, மனித பிணங்களை அதன் மேல் போட்டு நிரபப்படுகின்றன. இதுவே இன்றைய ஆபிரிக்காவின் சமூக எதார்த்தம்.

இதன் மேல் தான் உதவி என்ற பெயரில் ஏகாதிபத்திய மோசடிகள் அரங்கேறுகின்றது. பொதுவாக இந்த சூறையாடும் கடனை, பொதுஜன அறிவியல் மட்டத்தில் உதவியாக மட்டும் காட்டப்படுகின்றது. இதை நாம் உதவி என்று எடுத்தால், அதன் உண்மையான முகம் தான் என்ன? எழைநாடுகளுக்கு உதவி என்ற பெயரில் ஒரு டொலர் கடனாக கொடுக்கும் அதேநேரம், இதற்கு 1.30 டொலர் வட்டியாக செலுத்தும் நிலைக்கு நாடுகள் அடிமையாகிவிட்டன. இதைத்தான் கௌவுரமாக மறைத்து, உதவியாக காட்டப்படுகின்றது. மிக வறிய மிகப் பின்தங்கிய பிரதேசமாக மாற்றப்பட்ட ஆபிரிக்காவில் கல்வி மற்றும் சுகாதாரத்துக்காக செலவு செய்வதை விடவும், நான்கு மடங்கு அதிகமாகவே வட்டியை ஏகாதிபத்தியங்கள் அறவிட்டு வருகின்றன. இதனால் 1994 க்கும் 2000க்கும் இடையில் ஆபிரிக்காவின் வறுமை 50 சதவிகிதத்தால் வளர்ச்சியுற்றுள்ளன. ஆபிரிக்காவில் எற்படும் வறுமையின் அதிகரிப்பு ஏகாதிபத்தியம் வசூலிக்கும் வட்டி இருந்தும் உருவாகின்றது. கடன் அற்ற ஒரு நிலையில், செல்வத்தின் ஒருபகுதி; எதோ ஒரு வகையில் மக்களைச் சென்றடைந்தது. உலகமயமாதல் என்ற வேள்விக் கிடங்கில், விட்டில் பூச்சியாக விழுந்துமடியும் மனித உயிர்கள் என்றமில்லாத வளர்ச்சியை அடைகின்றன. கல்வி மறுப்பு, அடிப்படை மருத்துவ இன்மை, உணவு இன்மை என்று என்னற்ற சமூக நலத்திட்டங்கள் அனைத்து நிறுத்தப்பட்டு, அப்பணமே வட்டியாக மேற்கு நோக்கி செல்வதை கண்காணிக்கும் உலக வடிவத்தின் பெயர் தான் உலகமயமாதல். உலகைச் வரைமுறையின்றி இலகுவாக சுரண்டுவதை துரிதமாக்கி அதைக் கண்கணிக்கும் அமைப்புத்தான் உலகமயமாதல்.

ஆபிரிக்காவின் இன்றைய சமூக அடிமைத்தனத்துக்கு மேற்கு உதவி என்ற பெயரில் வழங்கிய கடன்களே பிரதானமான காரணமாக அமைந்தன. இதன் வரலாற்றைப் பார்ப்போம். அடிமைத்தனத்தின் (பின்)நவீன சித்தாந்தமாக உலகமயமதால் உருவாக முன்பு, வறிய ஆரிரிக்கா நாடுகளின் கடன் 1980 இல் 6060 கோடி டொலராக மட்டும் இருந்தது. இது 1987 இல் 12900 கோடி டொலராகவும், 2000 இல் 20610 கோடி டொலராகவும், 2004 இல் 27850 கோடி டொலராகவும் மாறியது. கடன்களை வழங்கி அந்த நாடுகளின் தேசிய திவலை உருவக்கிய மேற்கு நாடுகள், அங்கிருந்த செல்வங்களை தொடாச்சியாக கடத்துகின்றது. ஆபிரிக்காவின் மனிதஉழைப்பு, மேற்கின் நுகர்வுவெறிக்கு இலவசமாகவும் அபரிதமாகவும் தினிபோடுகின்றது.

இப்படி மேற்கின் சுகபோக வாழ்வுக்கு எற்ப தினிக்கப்பட்ட கடன், அவர்களின் சொந்த தேசிய வருமானத்தில் மிகப் பெரிய ஒரு பூதமாகவே உருமாறிவிட்டது. வறிய ஆபிரிக்கா நாடுகளின் தேசிய வருமானத்தில் கடன்; 23.4 சதவிகிதமாக 1980 இல் இருந்தது. இது 2000 இல் 66.1 சதவிகிதமாக அதிகரித்தது. 1980 இல் இக் கடன் ஆபிரிக்காவின் ஏற்றுமதி வருவாயில் 65.2 சதவிகிதத்தில் இருந்தது. இது 2000 இல் 180.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 1980 இல் இந்த கடனுக்கான மிள் கொடுப்பனவு (வட்டியாகவும் முதலாகவும்) 670 கோடி டொலராக இருந்தது. இது 2000 இல் 1460 கோடியாகியாகியது. இந்த மீள் கொடுப்பனவு எற்றுமதியில் 7.2 சதவிகிதத்தில் இருந்து 12.8 சதவிகிதமாகியுள்ளது. எப்படி செல்வவளமுள்ள ஆபிரிக்க வளங்கள் திருடப்படுகின்றது என்பதை, இந்த கடனுக்கான வட்டி மற்றும் மீள்கொடுப்பனவு எடுத்துக் காட்டுகின்றது. இந்தக் கொள்ளை பலவகையானது. ஆபிரிக்காவின் பெருமளவில் குவிந்துள்ள இயற்கை வளங்கள் அன்னிய பன்நாட்டு கம்பனிகளின் தனிப்பட்ட சொத்தாக மாறிவிட்டது. இதில் தேசிய அரசுகள் எந்த தலையீட்டையும் நடத்த முடியாத வகையில், கடன் நிபந்தனைகள் அதை உலக மயமாக்கியுள்ளது. அத்துடன் இந்த இயற்கை வளங்களின் விலையை மிகமலிவான விலையில் மேற்கு வரைமுறையின்றி சூறையாடுகின்றது. ஆபிரிக்கா நாட்டு மக்களின் பிரதான உணவாக உள்ள சோளம், மேற்கின் மிருங்களுக்கான உணவாக மற்றப்பட்டு அடிமாட்டு விலையில் கட்டயப்படுத்தி மேற்கினால் வாங்கப்படுகின்றது. ஆபிரிக்க மக்கள் தமது உணவை இழந்து பட்டினி கிடக்க, மேற்குநாட்டு பண்ணை மிருகங்கள் அந்த உணவையுண்டு கொழுக்கின்றன. இந்த மிருகங்கள் சார்ந்த உணவை உண்ணும் மேற்கு மனிதனும் அதீதமாகவே கொழுக்கின்றான்.

1983 இல் உலகில் எந்தவொரு ஆபிரிக்க நாடும் பெரும் கடனாளி நாடுகளின் கடன் பட்டியலில் இடம் பெறவேயில்லை. ஆனால் இன்று அப்படியல்ல. வறிய ஆபிரிக்காவின் மனித அவலங்களுக்கான அடிப்படையான சமூகக் காரணமே, ஏகாதிபத்தியங்களின் வரைமுறையற்ற சூறையாடல் தான் என்பதை இது துல்லியமாகவே எடுத்துக் காட்டுகின்றது. ஆபிரிக்காவில் பசியாலும், மருந்து இன்றியும் இறக்கும் கோடிக்கணக்கான மரணங்களுக்கு, இந்த ஏகாதிபத்திய உலகமயமாதல் பொருளாதார கொள்கைதான் காரணம். இதை இனியும் யாராலும் மறுக்கமுடியாது. கடனை அவர்களின் தலையில் சுமத்திவிட்டு, அதற்கு அறவீடுகள் என்ற பெயரில் அந்த நாடுகளை அடிமைப்படுத்தி கொழுக்கும் மேற்கத்திய சமூகப் கூறு தான் இதற்கான முழுப் பொறுப்புமாகும்;. கடனின் அளவு, ஒருநாளும் இந்த கடனை மீளக் கொடுக்க முடியாது என்ற நிலையை தெளிவாகவே எடுத்துக் காட்டுகின்றது. அவர்களின் சொந்த தேசிய வருமானத்தைவிடவும், அவர்களின் ஏற்றுமதியை விட கடன் அதிக உயரத்தில நின்று நச்சத்திரமாகவே மின்னுகின்றது. ஆபிரிக்கா மக்கள் இந்த கடனில் இருந்து மீள்வது என்பது இந்த சமூக அமைப்பை மறுக்கும் ஒரு புரட்சி இன்றி, இந்தக் கடனுக்கு ஒருநாளும் முடிவு கட்டமுடியாது. தனிப்பட்ட மனிதன் சார்ந்து தனிப்பட்ட நாடுகள், மனித இனத்தையே சூறையாடும் கொள்ளையை அடிபடையாக கொண்ட கடனை தரமறுக்கும் புரட்சி தான், மக்களின் நலனை பேனுவதற்கான மாற்றப் பாதையாக எம்முன்னுள்ளது.

இந்த நிலையில் எகாதிபத்தியத்தினால் ஆபிரிக்க செல்வம் கறக்கப்படுகின்றது. இந்த நிலையில் ஆபிரிக்காவில் ஒரு டொலருக்கு குறைவாகவே நாள் ஒன்றுக்கு பெறுவோர் எண்ணிக்கை பெருக்கெடுத்து வருகின்றது. ஒரு டொலருக்கும் குறைவாகவே பெறுவோர் ஆபிரிக்காவில்

1990 24.2 கோடி பேர்
2000 30.0 கோடி பேர்
2015 34.5 கோடி பேர் (2015 இது தான் நிலை என்று சர்வதேச ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

ஆபிரிக்க மக்களின் சமூக சிதைவு என்பது துல்லியமாக அதிகாரித்து வருகின்றது. நேற்றைய வாழ்வை இன்று இழப்பது, அந்த நாடுகளின் தலைவிதியாக மேற்கு தினித்துள்ளது. வாழவழியற்ற எழைகள் ஒவ்வொரு நாளும் உற்பத்தி செய்யப்படுகின்றனர். பின் அந்தநாட்டு மக்கள் கையேந்தி பரிதாபிக்கும் காட்சிகளை உருவாக்கி, உதவியென்ற பெயரில் மேற்கு மக்களின் காதுக்கே பூவைக்கின்றனர். இப்படி ஒரு மனித இனத்தை சூறையாடும் அரசியல் வக்கிரமே அரங்கேறுகின்றது.

உதாரணத்துக்கு எத்தியோபியவில் எற்பட்ட மனித அவலத்துக்கான காரணத்தைப் பார்ப்போம். எத்தியோப்பிய மனித அவலத்துக்கு (பஞ்சத்துக்கு) மழை மேல் குற்றம் சாட்டம் பன்நாட்டு நிறுவனங்களும், எகாதிபத்தியங்களும் உண்மையான தமது சொந்த குற்றத்தையே மூடிமறைத்தனர். 1960 இல் உலகவங்கி ஆவாஸ் பள்ளத்தாக்கில் கட்டிய அணை தான், 10 லட்சம் மக்களை கொன்றதுடன் 80 லட்சம் மக்களை நிரந்தரமான பட்டினிக்கும் தள்ளியது. உலகவங்கி கட்டிய அணை மக்கள் அன்றாட நீர் தேவையையும், மேச்சல் நிலங்களின் வளத்தையும், விவசாய நிலத்துக்கு கிடைத்த நீரையும் தடுத்துநிறுத்தியது. இந்த அணை மூலம் உலகவங்கி ஆபிரிக்கா மக்களுக்கு, அவர்களின் நீரை இல்லாதாக்கியது. இந்த நீரை ஜெர்மனி, இஸ்ரேல், இத்தாலி, பிரிட்டன் மற்றும் பல்வேறு பன்நாட்டு நிறுவனங்கள் உருவாக்கிய பெரும் வேளண்மை நிறுவனத்துக்கு திருப்பிவிடப்பட்டது. நீரோட்ட பகுதியில் வாழ்ந்த 1.7 லட்சம் மக்கள் கட்டாயப்படுத்தி வெளியேற்றி வீதிகளில் அகதி முகாங்களிலும் தள்ளினர். 1972 இல் இப்படி வெளியேற்றப்பட்ட மக்களில் 30 சதவிகிதமான மேச்சல் இன மக்கள் உயிர் இழந்தனர். தொடர்ந்தும் நீர் இன்றி உற்பத்திகளை இழந்த வரண்ட பிரதேச மக்கள் பட்டினியால் கொல்லப்பட்டனர். நீரை பெற்ற பன்நாட்டு வேளண்மை நிலங்களில் உருவான உணவுகள், மேற்கு நோக்கிச் சென்றன. அங்குள்ள கால்நடைகள் கொழுக்க வைக்கபட்ட போது, மக்கள் எலும்பும் தோலுமாக மடிவதைத் தான் உலக ஜனநாயகத்தின் சதந்திரமாகவே நியாயப்படுத்தப்பட்டது. இதற்கு இயற்கை மேல் குற்றம் சாட்டியதுடன், யுத்தமே இதற்கு காரணம் என்று பூச்சூடினர்.

உண்மையில் சமூகத்தில் பற்றக்குறை எற்படும் போது, பற்றக்குறையை எற்படுத்தியவன் அதை சமூகப் பிளவுகள் மூலம் திசைதிருப்பி மோதவிடுகின்றான். இதனால் சமூகங்களுக்கு இடையில் யுத்தங்கள் எற்படுகின்றன. பின் யுத்தம் தான் மனித அவலத்துக்கு காரணம் என்று கூறுவது, எகாதிபத்தியத்தின் அரசியல் அகாரதியில் வழமையான ஒரு அரசியல் மோசடியாகும். எத்தியோப்பிய பஞ்சத்தை தடுக்க குறித்த அணையை தகர்த்தாலே போதும். அந்த மக்களின் நிலங்கள் அந்த நீரில் குளிர்வது போல், அந்த மக்களின் வாழ்வும் குளிரும். ஆனால் உலகத்தில் செல்வத்தினை வைத்திருப்பவர்களின் சூறையாடும் ஜனநாயகத்துக்கு இது எதிரானதாக, அவர்கள் கூக்குரலீடுவர். இதை அவர்கள் பயங்காரவாதம் என்பர். இதில் வேடிக்கை என்னவென்றால் குறித்த அணைiயை கட்ட வாங்கி பணத்துக்கு கூட, எத்தியோப்பிய எழை மக்கள் தான் வட்டி கட்டி கொண்டிருக்கின்றனர். அவர்கள் தமது சொந்த நீர் வளத்தை அன்னியனிடம் இழந்தது மட்டுமின்றி, தமது சொந்த விவாசாய நிலத்தையும் கூட அவனிடம் இழந்தனர். தமது சொந்த கால்நடைகளைக் கூட இழந்தனர். எந்த அன்னியனிடம் இதையெல்லாம் இழந்தனரோ, அவர்கள் இதை இழக்க வைக்க திட்டமிட்டு திணித்த கடனுக்கு கூட இன்றும் எத்தியோப்பியன் வட்டி கட்டுகின்றான். இது எடுப்பான ஒரு சிறந்த உதாரணம் மட்டும்தான். இதைத் தான் உலககெங்கும் கடன்கள் செய்கின்றன.

2 comments:

Anonymous said...

Have u seen theinterpreter
http://www.theinterpretermovie.com

Anonymous said...

AFRICANS ARE STUPID AND AMERICANS ARE SMART.
HOW COME AFRICAN NEVER FIGHT FOE THEIR FREEDOM AND THEIR WEALTH

STOP COMPLAINING ABOUT WESTERN WORLDS
ALSO YOU ARE LIVE IN A WESTERN COUNTRY (FRANCE) TOO
SO WHAT ARE YOU TRING TO SAY RAYAGARAN? DO YOU REALLY CARE ABOUT THOSE PEOPLE?
STOP BEING LUMBAN? OKAY

THANKS