ம.க.இ.க. வின் பிறப்பு குறித்து புரளி பேசுவன் யார்?
பி.இரயாகரன்
13.07.2007
மக்களுக்கு துரோகம் செய்து, கொள்கை ரீதியாக சோரம் போனவர்கள் தான்;. மக்களுக்காக, அவர்களின் நலன்களை முன்வைக்க அரசியல் ரீதியாக வக்கற்று போனவர்கள். மக்களை பிறப்பில் வைத்தே பிளக்கும் நயவஞ்சகத்தைத் தவிர வேறு அரசியல் அற்வர்கள். இவர்கள் தான்
1.ஆண் பெண் பால் பிரிவினையை பிறப்பில் வைத்தே, ஆணாதிக்கமாக்கும் வக்கிரத்தின் சொந்தக்காரர்கள்.
2.மதப் பிளவை பிறப்பில் வைத்தே பிளக்கும் இழிதனத்தைக் கொண்டவாகள்.
3.சாதியை பிறப்பில் வைத்தே சூதாடும் பார்ப்பனியத்துக்கு பாய் விரிபவர்கள்.
4.நிறம் குறித்த ஓடுக்குமுறையை செய்யும் ஓட்டுண்ணிகள்.
5.விபாச்சாரியின் குழந்தையை பிறப்பு சார்ந்த விபச்சாரம் செய்ய துண்டும் பொறுக்கிகளின் அற்பத்தனத்தை செப்பவர்கள்.
இப்படி அநேக ஒடுக்குமுறையை பிறப்பு அடையாளப்படுத்தி, செழிப்பவர்கள் இவர்கள். மக்களின் அப்பட்டமான விரோதிகள் இவர்கள்.
இப்படி மக்களை பிளந்து, அவர்களை குழிதோண்டி புதைக்க வெளிக்கிட்டும் கும்பல் சோந்தவர்கள். ஒரு விவாவதத்தில் அப்படி இப்படியுமாக புணர்ந்து, அவர்களே அறியாது பாசிசத்தை புலம்புபவர்கள்;. இப்படி பிறப்பு குறித்து ம.க.இ.க. வை தமது சொந்த முகந்தரத்துடன் புணர முனைகின்றனர். இப்படிக் காட்டுகின்ற பாசிச வன்மம் என்னென்றால், அவர்களின் போராட்டத்தை கண்ட அஞ்சும், மக்களை ஓடுக்கின்ற வர்க்க பிரதிநிதிகளின் நடத்தையாக வெளிப்படுகின்றது.
இவர்கள் ம.க.இ.க வின் கொள்கையை விவாதிக்க முடியாதவர்கள். அதில் உள்ள தனிநபர்களின் பிறப்பு குறித்து புலம்புகின்றனர். இதுவும் ஒரு அரசியலோ.
பாட்டாளி வர்க்க பிரதிதிகள், மனித இனத்தில் எந்த பாகுபாடு காட்டுவதில்லை.
1.ஆண்பெண் பாகுபாடு பார்ப்பதில்லை.
2.சாதி பாகுபாடு பார்ப்பதில்லை.
3.நிறப் பாகுபாடு பார்ப்பதில்லை.
4.இனப் பாகுபாடு பார்பதில்லை.
5.மதப் பகுபாடு பார்ப்பதில்லை.
இப்படி எந்தப் பகுபாடும் மனிதர்களுக்கு இடையில் பாப்பதில்லை. இதனால் தான் இது சர்வதேசியமாக இருக்கின்றது. உலகெங்கும் அதனிடம் ஒருமித்த நிலைப்பாடு உள்ளது. மக்கள் நலன் சார்ந்த கொள்கையுடன், மனிதர்களை அனுகுகின்றது. அது பிறப்பில் பார்பானையும், பிறப்பில் முதலாளியையும், பிறப்பில் சக்கிலியனையும், பிறப்பில் பெண்ணையும், பிறப்பில் எதுவாக இருந்தாலும், மனிதர்களுக்கு இடையில் வேறுபாடு காட்டுவதில்லை. அது கொள்கை ரீதியாக மட்டும் தன்னை ஒழுங்கமைக்கின்றது. அதாவது மனித் தன்மையை மட்டும் அளவுகோலாக கொள்கின்றது. வேறுபாடு காட்டாத மனிதத் தன்மையை மட்டும் அது கோருகின்றது. வேறுபாடு காட்டும் அனைத்து ஒடுக்குமுறையை அது எதிர்க்கின்றது. நீ யார்? நான் யார் என்று பிறப்பில் அது பிரிவனை காட்டுவது கிடையாது.
இதற்கு மாறாக உண்மையில் பிறப்பு குறித்து அனுகுகின்ற கோட்பாடு பார்ப்பனியமாக இருக்கின்றது. அதாவது சாதியக் கோட்பாடாக உள்ள்து. ம.க.இ.க வில் உள்ள நபரின் பிறப்பு குறித்து ஆராய்வதே கடைந்தெத்த பார்பனியம் தான். அதை காவடியாக துக்கும் மனித விரோதிகளையே இது அம்பலமாக்கின்றது.
இப்படி பிறப்பில் இருந்த ஆராய்கின்ற மனிதம் எப்படிப்பட்டது என்றால், உள்ளடக்க ரீதியாக பாசிசமே. ஜெர்மனிய நாசிகள் பிறப்பு குறித்த ஆரியக் கோட்பாடு, யூதர்களின் பிறப்பு குறித்த அடையாளம் உடாகவே கொன்றது. இந்தியாவில் அதுவே பார்ப்பனியமாகி சாதியமாக உள்ளது. இதை துக்கும் தமிழினவாதிகள் பிறப்பில் இருந்து காண்பது மனித விரோதமேயன்றி அது வேறு எதுவுமல்ல. இதுவே இலங்கையில் புலிப் பாசிச படுகொலையாக நடக்கின்றது. மனித தன்மையற்ற கண்ணோட்டம் இதன் மூலவேராக உள்ளது.
தமிழ் அரங்கம்
Friday, July 13, 2007
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
பாட்டாளி வர்க்க பிரதிதிகள், மனித இனத்தில் எந்த பாகுபாடு காட்டுவதில்லை.
1.ஆண்பெண் பாகுபாடு பார்ப்பதில்லை.
2.சாதி பாகுபாடு பார்ப்பதில்லை.
3.நிறப் பாகுபாடு பார்ப்பதில்லை.
4.இனப் பாகுபாடு பார்பதில்லை.
5.மதப் பகுபாடு பார்ப்பதில்லை.
..... ஆனால், பாட்டாளி, முதலாளி பாகுபாடுமட்டும் பார்க்கிறார்கள்.
மன்னிக்கவேண்டும். இப்படியே ஓர் ஒன்று ஒன்று, ஈர் ஒன்று இரண்டு வாய்ப்பாடாகவே சூத்திரம்போடுவது கொஞ்சம் குழந்தைப்பிள்ளைத்தனமாக இல்லையா?
அமெரிக்கப்பாட்டாளிமக்களின் தொழில் சீனப்பாட்டாளிமக்களுக்குப் போகின்றதென்று திட்டித்தள்ளுகின்றார்கள். சரி முதலாளிகள்தான் கொண்டுபோகின்றார்கள் என்றால், வேலை கிடைக்கும் அந்தநாட்டுப்பாட்டாளிகள் இந்தநாட்டுப்பாட்டாளிகளுக்காக நாங்கள் எடுத்துக்கொள்ளமாட்டோம் என்கிறார்களா? இல்லையே..
நீங்கள் எதற்காக இந்த விடயங்களை இவ்வளவு ஆற்றுக்கு அக்கரை இக்கரை என்பதுபோல மிகவும் எளிமைப்படுத்துகின்றீர்கள் என்று எனக்குப் புரிவதேயில்லை. நீங்கள் சொல்லும் இச்சூத்திரங்களின் நடைமுறைத்திறனை நீங்கள் மெய்யாகவே நம்புகின்றீர்களா? கேட்டால், உண்மையான பாட்டாளி இன்னும் பிறந்து வரவில்லையென்று சொல்லாதீர்கள்.
நடைமுறையை எதிர்கொள்ளமுடியால், கிளிப்பேச்சு வாய்ப்பாடுவதால், யாருக்கு என்ன பயன்?
".... ஆனால், பாட்டாளி, முதலாளி பாகுபாடுமட்டும் பார்க்கிறார்கள்.
மன்னிக்கவேண்டும். இப்படியே ஓர் ஒன்று ஒன்று, ஈர் ஒன்று இரண்டு வாய்ப்பாடாகவே சூத்திரம்போடுவது கொஞ்சம் குழந்தைப்பிள்ளைத்தனமாக இல்லையா?
அமெரிக்கப்பாட்டாளிமக்களின் தொழில் சீனப்பாட்டாளிமக்களுக்குப் போகின்றதென்று திட்டித்தள்ளுகின்றார்கள். சரி முதலாளிகள்தான் கொண்டுபோகின்றார்கள் என்றால், வேலை கிடைக்கும் அந்தநாட்டுப்பாட்டாளிகள் இந்தநாட்டுப்பாட்டாளிகளுக்காக நாங்கள் எடுத்துக்கொள்ளமாட்டோம் என்கிறார்களா? இல்லையே.
நீங்கள் எதற்காக இந்த விடயங்களை இவ்வளவு ஆற்றுக்கு அக்கரை இக்கரை என்பதுபோல மிகவும் எளிமைப்படுத்துகின்றீர்கள் என்று எனக்குப் புரிவதேயில்லை. நீங்கள் சொல்லும் இச்சூத்திரங்களின் நடைமுறைத்திறனை நீங்கள் மெய்யாகவே நம்புகின்றீர்களா? கேட்டால், உண்மையான பாட்டாளி இன்னும் பிறந்து வரவில்லையென்று சொல்லாதீர்கள்.
நடைமுறையை எதிர்கொள்ளமுடியால், கிளிப்பேச்சு வாய்ப்பாடுவதால், யாருக்கு என்ன பயன்?"
அடிப்படையற்ற விதாண்ட வாதங்கள். மனிதன்மையற்ற உங்கள் உலக வக்கிரத்தை மூiடிமறைப்பதற்கு பெயர் குழந்தைத் தனமோ!
எந்த பாட்hளியும் மற்றைய பாட்டாளியை தூற்றுவதில்லை. மூலதனத்தின் அற்பத்தனத்தை மூடிமறைத்து அதை விதைக்கின்ற போது, அதுவே தேசிய வெறியாக வக்கிரமாகின்ற போது, தொழலாளி வாக்கம் திசைதிருப்பப்படுகின்றது.
ஒரு நாட்டு பாட்டாளி தமது மக்களுக்காக தாம் உழைக்கும் போது அங்கு தொழில் உண்டு. வாழ்;வுண்டு. மூலதனத்துக்காக உழைக்கும் போது தொழில் இல்லை வாழ்வில்லை.
அக்கரைக்கும் இக்கரைக்கும் பொருந்தவில்லை என்பது, மனித இழிவையே வாழ்ககையாக நம்பி, அதைப் பாதுகாக்கின்ற உங்களைப் போன்றவர்கள், நடைமுறை பற்றி புலம்புவது எதாhத்தம்.
இந்த இழிவான அற்பத்தனத்தில் வாழ்வதே உங்கள் எதார்த்தம். எமது எதார்தத்தம் இதை மாற்றப் போராடுவதே. உங்களைப் போல் மனித இழவுகளை நியாயப்படுத்தி வாழ்;வதை, கெடுகெட்ட தனம் எனறு கருதபவர்கள் நாங்கள்.
எமக்கும் உள்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட மனிதம் பற்றியதே. இதற்கு ஒழித்து நின்று வக்கரிப்து தான், சாத்ததியம் பற்றியும், கிளிப்பிள்ளைத்தனம் பற்றியம், குழந்தை தளம் பற்றி புலம்பல்கள் எல்லாம்.
My Dear Intelligent Ramani :-))
Don't you understand the Basic argument of this Simple Post?
This says against branding people by their Birth.
But when we say one as Capitalist it is by his brought up and his Practice.
It seems your argument is குழந்தைப்பிள்ளைத்தனமாக :-))
//அமெரிக்கப்பாட்டாளிமக்களின் தொழில் சீனப்பாட்டாளிமக்களுக்குப் போகின்றதென்று திட்டித்தள்ளுகின்றார்கள். சரி முதலாளிகள்தான் கொண்டுபோகின்றார்கள் என்றால், வேலை கிடைக்கும் அந்தநாட்டுப்பாட்டாளிகள் இந்தநாட்டுப்பாட்டாளிகளுக்காக நாங்கள் எடுத்துக்கொள்ளமாட்டோம் என்கிறார்களா? இல்லையே..//
It is very very easy to blame people by keeping them in Utter Ignorance.....
Don't you ashamed to speak the Language of a oppressor...
Ooppss.... wrong question to the Wrong Person :-))
asuran
"..... ஆனால், பாட்டாளி, முதலாளி பாகுபாடுமட்டும் பார்க்கிறார்கள்." விசித்திரமான குதர்க்கம். முதலாளி தான் பாகுகபாடு காட்டுகின்றான். மற்றவன் உழைப்பை சுரண்டித் திண்ணுகின்றான். மனித தன்மையற்ற இந்த இழிதனத்தை பாட்டாளி வர்க்கம் எதிர்க்கின்றது.
இத பிறப்பு குறித்த தர்க்கமல்ல. இந்த பு+மியில் எப்படி வாழ்வது என்பது குறித்த வாதம். சக மனிதனைப் போல் உழைத்து வாழ மறுப்பவனை, மற்றவன் உழைப்பை திருடி வாழ்பனை சமூக (மனித) உயிரியாகவே கருத முடியாது.
Post a Comment