மக்கள் தான் புலிகளை தோற்கடித்தவர்களே ஒழிய கருணா என்ற பாசிச கூலிக்கும்பல் அல்ல.
பி.இரயாகரன்18.02.2007
இந்த உண்மை புலியெதிர்ப்பு கும்பலுக்கு கசப்பான ஒன்று. இதனால் மக்கள் புலிகளை தோற்கடிக்கவில்லை என்று காட்டுவதே புலியெதிர்ப்பு எடுபிடி பேர்வழிகளின் சுத்துமாத்து அரசியலாகும். இந்த மோசடியை உண்மையானதாக காட்ட மக்களையும் கருணா கும்பலையும் ஒன்றாக காட்டுவதே இவர்களின் அரசியலாகும். அதை அவர்கள் 'கருணாவின் அரசியலை நேசிக்கும் கிழக்கின் மக்களும் அந்த மக்களை நேசிக்கும் கருணாவின் அரசியலும்.." என்றவாறாக தமது பலியெதிர்ப்பு அரசியல் நிலைக்கு ஏற்ப கயிறு திரிப்பதே இவர்களின் அரசியல் சாரமாகும் புலிகள் வேறு மக்கள் வேறு அல்ல என்பதை எப்படி புலிகளும் அதன் பினாமி எழுத்தாளர்களும் மறுக்க முனைகின்றனரோ அதையே புலியெதிர்ப்புக் கும்பலும் செய்ய முனைகின்றது.
இந்த வகையில் தேனீ இணையத்தில் எஸ்.மனோரஞ்சன் என்ற புலியெதிர்ப்பு பினாமி எழுதிய 'கருணா அம்மான் உடைத்ததால் மட்டும் அது மண்குடம் ஆகிவிடுமா என்ன? மக்களை நேசிக்கும் அரசியலும், ஆயுதமுமே புலிகளை தோற்கடிக்கும்!" என்ற கட்டுரை அதையே தான் செய்ய முனைகின்றது. கருணா கும்பல் மேல் கட்டிய ஓளிவட்டம் அனைத்தும் நிர்வாணமாகின்ற ஒரு நிலையில் தம்மையும் தமது மக்கள் விரோத பாசிச அரசியலையும் நிலைநிறுத்திக் கொள்ளும் ஒரு மூடிமறைத்த பாசிச புலம்பலைத் தான் இக்கட்டுரை மூலம் செய்ய முனைகின்றது. புலிகளை விட எந்தவிதத்திலும் கருணா கும்பல் மக்களுக்கான ஒரு நடத்தையை கொண்டிருக்கப் போவதில்லை. இந்த உண்மையை மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு (HRW) சொல்லித் தெரிய வேண்டிய அவலம் ஒருபுறம். இதற்கு வெளியில் சொந்தமாக எந்த அரசியல் சரக்கும் கிடையாது. மறுபுறத்தில் மக்கள் விரோத இந்த அரசியல் மோசடிகள் மூடிமறைப்புகள் அம்பலமாகும் போது, விழுந்துகட்டி அதை விமர்சிப்பதாக ஆடிப்பாடிக் கொண்டே பாதுகாப்பது மற்றொரு சதியாகும்.
புலியெதிர்ப்பில் முகிழ்ந்து அதுவாகவே அனைத்தையும் சிந்தித்து, கருணா கும்பலின் நாய்களாக குலைத்தவர்கள், மீண்டும் வாலாட்டுவதைத் தான் இந்தக் கட்டுரை மீண்டும் செய்கின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு HRW) அறிக்கையை, தேனீ தவிர்ந்த மற்றைய புலியெதிர்ப்பு பாசிசக் கும்பல்கள் பிரசுரிக்கவில்லை. இது முன்னைய காலத்திற்கும் முரணானது.
புலிக்கு எதிரான அனைத்தையும் வாந்தியெடுக்கும் இந்த புலியெதிர்ப்பு பாசிசக் கும்பல்கள், இதை திட்டமிட்ட வகையில் இம்முறை தமிழ் மக்களுக்கு இருட்டடிப்பு செய்தனர். நாங்கள் புலிகள் வழியில் தான் செயல்படுவர்கள் என்பதையே இப்படியும் நிறுவினர். இந்த நிலையில் மூடிமறைக்கப்பட்ட கட்டுரையைக் கொண்டு, எஸ்.மனோரஞ்சன் கட்டுரை மயில் இறகு கொண்டு கருணாவை தடவி ஆசீர்வதிக்க முனைகின்றது. அந்த விசுவாசத்துடன் தான் 'கருணா அம்மான்" என்று அவருக்கு 'மேதகு" மரியாதை கொடுத்து புலம்புகின்றது.
ஒரு பாசிட்டு, கடைந்தெடுத்த ஒரு சமூக விரோதப் பொறுக்கி, இவருக்கு புலிகள் வழங்கிய முன்னைய 'அம்மான்" மதிப்பூடாகவே கூடி வக்கரிக்கின்றனர். இந்த கருணா என்ற பாசிட்டு, பேரினவாதிகளின் கூலிக் கும்பல், 'ஜனநாயக" சக்தியுடன் இணைத்துக்கொள்ள அழைக்கின்றனர். இவர்களின் 'ஜனநாயகம்" எப்படிப்பட்டது என்பது இதில் இருந்தே தெரிகின்றது. இந்த புலியெதிர்ப்பு தேனீக் கும்பல் 'ஜனநாயக" சக்தியுடன் இணைத்துக்கொள்ள வழங்கும் ஆலோசனை என்ன?
'ஆகவே கருணா இன்று கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய சில உடனடிப் பிரச்சினைகள் இருக்கின்றன.
1.முதலாவது, சிறார்களை பலவந்தமாகப் பிடிப்பதை உடனடியாக நிறுத்துவது.
2.இரண்டாவது, கட்சிக்கு (பாசிச நடவடிக்கைக்கு இது நாம்) பணம் தேவை என்பதற்காக தமிழர்களைக் கடத்தி பணம் பறிப்பதை நிறுத்துவது.
3.மூன்றாவது, ரி.ஆர்.ஓ (வுசுழு) நபர்களைக் கடத்திய சம்பவத்தில் (இதைக் கருணா குழு செய்திருந்தால்) பிரதானமாக நடந்ததாக கூறப்படும் பாலியல் பலாத்காரமும் கொலைகளும் பற்றிய விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பது." என்கின்றார். 'ஜனநாயக சக்திகளின் விமர்சனங்களை உள்வாங்குவது கருணா அணியினருக்கு நிட்சயம் பலம் சேர்ககும்" என்கின்றார்.
என்ன அரசியல்! இதை நிறுத்தினால் எல்லாம் சரியாகிவிடும். இதுவே இவர்களின் புலுடா. இது அம்பலமாவதை பின் போட்டு கணிசமாக குறைக்குமே ஓழிய, மக்கள் இயக்கமாகி விடாது. நன்கு தெரிந்த இந்த சம்பவங்கள், ஒரு அரசியலின் விளைவு. ஒரு பாசிச அரசியல் வழிமுறையில், இவை போன்றன உதிரியான சில்லறை விடையங்கள். ஏகாதிபத்தியத்துக்கும் அதன் எடுபிடிகளுக்கும் இவை பெரிய விடையங்கள். இதை நிறுத்துவதாக நடிப்பது, மோசடி செய்வது அனைத்தும் கடைந்தெடுத்த பாசிச வழிகாட்டலாகும்.
புலிகள் கூட இதே வழியை அடிக்கடி கையாண்டவர்கள். பேச்சுவார்த்தை, சிறுவர் விடுவிப்பு என்று பற்பல அரசியல் மோசடியைச் செய்தவர்கள். இவ்வாறே கருணாவையும் செய்யக் கோரும் ஆலோசனைகள் இவை. இவர்கள் கவனமாக திடட்மிட்டு தவிர்த்துக் கொள்வது, அவர்கள் கொண்டுள்ள பாசிச அரசியலை கேள்விக்குள்ளாக்குவதைத் தான். அதாவது மக்களின் வாழ்வைத் தீர்மானிக்கும் அரசியலுக்கு மாற்றான, மக்கள் விரோத அரசியலை ஆணையில் வைப்பதை இவர்கள் மறுப்பதில்லை. அது தான் இவர்களை ஒரு புள்ளியில் ஒன்றுபடுத்துகின்றது.
இந்த புலியெதிர்ப்பு எஸ்.மனோரஞ்சன் வகையறாக்கள், ஜனநாயகத்தின் பெயரில் பாலில் நஞ்சைக் கலந்து குழந்தைக்கு கொடுக்கும் இழிபிறவிகளாகவே ஒன்றுபட்டு நிற்கின்றனர். 'கருணாவின் அரசியலை நேசிக்கும் கிழக்கின் மக்களும், அந்த மக்களை நேசிக்கும் கருணாவின் அரசியலும், அந்த நோக்கில் கருணா அணியினர் கையில் எடுக்கும் ஆயதங்களுமே புலிகளின் அரசியலை தோற்கடிக்க வல்லது. இதில் ஒன்று தவறினாலும் எம் எல்லோருக்கும் தோல்விதான்." எப்படிப்பட்ட அரசியல் பொறுக்கிகள் என்பதையே இப்படி தெளிவுபடுத்துகின்றனர். இந்த கட்டுரையின் மொத்த சாரமும், இதற்குள் தான் புற்றெடுக்கின்றது.
கருணாவின் கையில் இருக்கும் ஆயுதம் தான் புலிகளின் அரசியலை தோற்கடிக்கும் என்பது கடைந்தெடுத்த கருணா கும்பலின் மோசடியுடன் கூடிய எடுபிடித்தனமாகும். புலிகளை மக்கள் எப்போதோ தோற்கடித்துவிட்டனர். அதில் கருணா கும்பலும், உங்களைப் போன்ற அரசியல் பினாமி பொறுக்கிகளும் சவாரி விடுகின்றனர்.
மக்கள் தான் புலியைத் தோற்கடித்தனரே ஒழிய, கருணா என்ற மற்றொரு பாசிட்டல்ல. கருணா என்ற பாசிட் புலிகளுடன் தொடர்ந்து இருந்து இருந்தாலும், புலியின் தோல்வி எப்போதோ நிகழ்ந்துவிட்டது. மக்கள் தான் அவர்களை தோற்கடித்தவர்கள். இந்த கருணா கிழக்கு மக்களின் நண்பன் அல்ல. புலியைப் போல், ஒரு மக்கள் விரோதி. கிழக்கு மக்களின் முதல் தரமான எதிரி. பேரினவாதத்துடன் சேர்ந்தியங்கும் ஒரு கூலிக் கும்பல். பேரினவாதத்தின் துணையில் ஒரு கூலிக் கும்பலாக அரசியல் செய்பவர். இப்படிப்பட்டவரை 'கருணாவின் அரசியலை நேசிக்கும் கிழக்கின் மக்களும், அந்த மக்களை நேசிக்கும் கருணாவின் அரசியலும்," என்று கூறி, காதுக்கே துணிந்து பூவைக்கும் ஒரு மோசடி. இப்படி புலியெதிர்ப்பு சூழ்ச்சிகளால் சமூகத்தை காயடித்து மலடாக்குகின்றனர். இதை எந்த மக்கள் நலன் சார்ந்த ஒருவனாலும் செய்யமுடியாது.
சரி கருணா எடுபிடிகளே! எந்த வகையில்? எப்படி? மக்களை இந்த கருணா கும்பலை நேசிக்கின்றது.? உங்களால் அதை ஒருநாளும் எடுத்துக் காட்டமுடியாது. சரி மக்கள் கருணா கும்பலை எந்தக் காரணத்தில் எப்படி நேசிக்கின்றனர். எடுத்துக்காட்டுங்கள். அது உங்களால் ஒருநாளும் முடியாது. பேரினவாதத்தின் கூலிப்படையால், பாசிட்டுகளால் எப்படித் தான் மக்களை நேசிக்க முடியும்? மக்களை நேசிப்பதற்கு, இந்தக் கும்பல் கொண்டுள்ள அந்த மக்கள் அரசியலில் என்னதான் இருக்கின்றது?
சரி 'கருணா அணியினர் கையில் எடுக்கும் ஆயதங்களுமே புலிகளின் அரசியலை தோற்கடிக்கவல்லது." என்கின்றீர்களே, புலி அரசியலில் இருந்து கருணாவின் அரசியல் எந்த வகையில் வேறுபட்டது. ஒரு புள்ளியில் கூட வேறுபாட்டைக் காட்டமுடியாது. மக்களுக்கான அரசியலை முன்வைக்க முடியாத இந்த கும்பலும், இதற்கு எடுபிடி வேலை செய்யும் உங்கள் 'ஜனநாயகமும்" மக்களுக்கு விரோதமானவை. உங்கள் 'ஜனநாயகம்" என்ன என்பதற்கு, விளக்கம் தரமுடியாத ஓட்டைச் சிரட்டைகள் தான். இது கருணா போன்ற பாசிசக் குண்டர்களின் பின்னால் நின்று, அதை வடிகட்டி தேடுவதும், விளக்குவதுமே உங்கள் 'ஜனநாயகம்". மக்கள் கருணாவின் பின் நிற்பதாக காண்பதுவும், கருணாவின் ஆயுதம் தான் புலிகளை தோற்கடித்தது, தோற்கடிக்கும் என்ற கூறுவதும் கடைந்தெடுத்த பாசிசமாகும். புலிகள் எல்லாவற்றையும் ஆயுதம் ஊடாக காண்பது போல், இந்த புலியெதிர்ப்பு எல்லாம் கருணாவின் ஆயுதம் மூலம் விளக்குவது நிகழ்கின்றது. மக்களே புலிகளை தோற்கடித்தனர் என்ற அரசியல் உண்மையை மறுப்பது இதன் சாரமாகும். மக்கள் தான் புலிகளை தோற்கடித்தனர் என்ற அரசியல், கருணாவை நேரடியாகவே தூக்கியெறியும்.
இதை காணாது இழிந்து போன இந்தக் கூலிக் கும்பலால், நாய் வாலுக்கு மட்டை வைத்துக் கட்டி அதை ஒருநாளும் நிமிர்த்தமுடியாது. சுற்றிவளைத்து நிமிர்த்துவதாக குலைப்பதே இந்த புலியெதிர்ப்பு அரசியலின் பினாமித்தனமாகும். இந்த பாசிட்டுகள் புலியின் வாலாக, அதன் கோவணமாக இருப்பதுடன், எந்த விமர்சனத்தையும் சுயவிமர்சனத்தையும் செய்தது கிடையாது. கருணா என்ற தனிமனிதன் தன்னை முன்னிலைப்படுத்தி, தனது சொந்த தனிப்பட்ட முரண்பாட்டை அடிப்படையாக கொண்டு புலிகளைப் பிளந்தவர். அதை மூடிமறைக்க பிரதேச ரீதியான முரண்பாட்டை காட்டிப் பிழைக்கும் ஒரு பொறுக்கி. இந்த பொறுக்கி அரசியலைக் கொண்டு, எதையும் மக்களுக்காக செய்யப் போவதில்லை.
முதலில் ஒரு பாசிச இயக்கத்தில் இருந்து உடைந்து வெளிவருபவர்கள் செய்து இருக்க வேணடியது என்ன?
1. கடந்த காலத்தை விமர்சன ரீதியாக அணுகுவது. அதாவது நாங்கள் என்ன செய்தோம்? அவை எப்படி மக்களுக்கு எதிராக இருந்தது? இதை நாங்கள் எப்படி களைய வேண்டும்? இவைகளை வெளிப்படையாக சுயவிமர்சனம் செய்யவேண்டும் சாராம்சத்தில் இது விமர்சனம் சுயவிமர்சனம் கூட. இதை இந்தக் கும்பல் செய்தது கிடையாது. மாறாக அதை நியாயப்படுத்தி, அதே வழியில் தொடருகின்றது.
2. மக்கள் என்றால் என்ன? அதை நாங்கள் முன்னர் எப்படி பார்த்தோம், இப்போது எப்படி பார்க்கின்றோம் என்பதை தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.
3. மக்களை நாங்கள் எப்படி அணுக வேண்டும்? எந்த வகையில் இணைந்து நிற்க வேண்டும்? இவைகளை பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் முன்வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும்.
4. மக்களுக்கான அரசியல் என்ன? மக்களின் பிரச்சனையாக எவற்றை இனம் காண்கின்றோம்? அதை எப்படி நாம் நடைமுறைப்படுத்த உள்ளோம் என்பதை தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். குறிப்பாக முன்னைய அரசியலில் இருந்து எப்படி வேறுபடுகின்றோம் என்பதை, தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.
5. மக்களின் எதிரிகள் யார் யார்? அவர்களே எமது எதிரி என்று கூறியிருக்க வேண்டும்
6. மக்களின் எதிரி புலிகள் மட்டுமல்ல. பேரினவாத அரசு என்பதை பிரகடனம் செய்து இருக்க வேண்டும். அந்தவகையில் எதிரிக்கு எதிராக மக்களுடன் இணைந்து நிற்கவேண்டும். இப்படி மக்கள் நலன் சார்ந்த கோரிக்கையை, நடைமுறையை வெளிப்படையாக கொண்டிருக்க வேண்டும். இதைவிடுத்து புலிகளைப் போல் பாசிச சதிகார சூழச்சிகர அரசியல் எடுபிடிகளாக வாழ்வதே, கருணா கும்பலின் அரசியலாகிவிட்டது.
இப்படி மக்கள் விரோத பாசிச அரசியலை ஆணையில் வைத்து குலைக்கும் யாழ் மேலாதிக்க கிழக்கு கோவணம் நாற்றத்தால் நாறுகின்றது. தேனீ கட்டுரையாளர் செய்த அரசியல் மோசடி, இந்த கிழக்கு கோவணத்தை கழுவிக்கொடுப்பது தான். உண்மையில் கருணா கும்பலை பாதுகாக்க முனையும் ஒரு சூழ்ச்சி தான் இந்தக்கட்டுரை. அந்த வகையில்
1. கருணா கும்பல் பேரினவாத இராணுவத்துடன் சேர்ந்து ஒரு கூலிக் கும்பலாக இயங்குவதை விமர்சிக்கவில்லை.
2. அந்த கூலி பாசிசக் குண்டர்களின் மக்கள் விரோத அரசியலைக் கண்டிக்கவில்லை.
3. மக்களின் சமூக பொருளாதார அரசியலின எதிரியான கருணா கும்பலின், அரசியல் தளத்தை கேள்விக்குள்ளாக்கவில்லை.
4 .கருணா மற்றும் புலிகளுக்கு இடையில் எந்த வேறுபாடுமற்ற அரசியலை கண்டிப்பதில்லை
இப்படி ஒரு மூடு மந்திரத்தை கொண்டுதான், கருணா கும்பலை பின்பக்கத்தால் பாதுகாக்க முனைகின்றனர்.
கருணா என்ற தனிமனித விருப்பங்கள் அல்ல, கருணா கும்பலின் நடத்தைகள். அது, அது கொண்டுள்ள அரசியலின் விளைவாகும். கருணா குழுவுக்கு எஸ்.மனோரஞ்சன் விடுக்கும் அதே வேண்டுகோள், புலிக்கும் பொருந்திவிடுமல்லவா! எப்படி புலிக்குள் வைத்து கருணா நடத்தைகளை நியாயப்படுத்த முடியுமோ, அதேபோன்று புலிகளை பேரினவாத தளத்தில் வைத்து நியாயப்படுத்த முடியும். வெளிப்படையான இந்த உண்மையை, ஒரு தலைப்பட்சமாக கருணாவுக்கு மட்டும் சாதகமாக முன்வைப்பது, அவர்களின் அரசியல் நேர்மையை சந்திக்கு இழுக்கின்றது.
இந்த புலியெதிர்ப்பு தேனீயில் எஸ்.மனோரஞ்சன் புலுடா விடுவது, பின் சுயபுராணமாக ஒப்பாரி வைப்பதமாக புலம்புகின்றார். 'புலி எதிர்ப்புவாதமும் ஒரு பிழைப்பு வாதம் என்று ஒரு குற்றச்சாட்டுண்டு. அக்குற்றச்சாட்டு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை என்ன என்பதும் எமக்குத் தெரியும். புலிகள் தவறு, ஆகவே மற்றெல்லாம் சரி, என நாம் வாதிடுவதும் அவற்றை நியாயப்படுத்தவதும் ஒரு காரணம். புலிகளின் அரசியலை எதிர்ப்பவர்கள் எமது அரசியலில் மக்களின் நலனை மறந்து போய் நாங்களும் இன்னொரு விதத்தில் ‘குட்டிப் புலி’ அரசியலையே செய்ய முனைவது அடுத்த காரணம்." இப்படிக் கூறியபடி "குட்டிப் புலி" அரசியலையே இந்த கட்டுரையிலும் செய்கின்றனர். இதை விட வேறு என்ன தான், உங்கள் கும்பலிடம் மாற்றாக அரசியல் ரீதியாக உண்டு. இதைத்தான் சுற்றி வளைத்து, இந்தக் கட்டுரையிலும் முன்வைக்கபட்டுள்ளது. இதைத் தானே கருணா கும்பலுக்குமான ஆலோசனையாக வைக்கின்றீர்கள்.
உண்மையில் கருணாவின் அரசியலுக்கு ஏற்ற மூடிதான் நீங்கள்.
அற்பர்களின், அற்பத்தனங்கள் தான் இவை. கேடுகெட்ட மனித விரோதத்தின் முழு முகங்களும் வெளிப்படுகின்றது. இப்படி பாய் விரிப்பதால் தான், உங்கள் விபச்சாரமே அடங்கிக்கிடக்கின்றது. இப்படி பாயை விரித்துவிட்டு, ஏறி அமர்ந்து விபச்சாரம் செய்யும் போது 'கருணாவின் அரசியலை நேசிக்கும் கிழக்கின் மக்களும், அந்த மக்களை நேசிக்கும் கருணாவின் அரசியலும், அந்த நோக்கில் கருணா அணியினர் கையில் எடுக்கும் ஆயதங்களுமே புலிகளின் அரசியலை தோற்கடிக்க வல்லது. இதில் ஒன்று தவறினாலும் எம் எல்லோருக்கும் தோல்விதான்." என்கின்றனர்.
அதே புலியெதிர்ப்பு, அதே சவடால், சொந்தமாக மக்களுக்காக எதையும் சிந்திக்க முடியாத மலட்டுத்தனம், விபச்சாரமாக ஒப்புப்பாடுகின்றது. முன்னுக்கு பின் முரணாக உளறுவதன் மூலம், ஏதோ கருணாவை விமர்சித்ததாக காட்டிக் கொண்டு, கருணாவின் வாலில் பிடித்து ஊருகின்றனர்.
ஏதோ தாங்கள் நேர்மையாக இருப்பதாக நடிக்கின்றனர். 'சில கேள்விகளும் எம் நோக்கி எழுப்பப்படுகிறது. கருணா எதற்காக அரசியல் செய்கிறார்? அவரது கட்சியின் எதிர்காலம் என்ன? நாங்கள் ஏன் கருணாவின் அரசியலை ஆதரிக்கிறோம்? இன்று ஏன் கட்டாயம் அதை ஆதரிக்க வேண்டும்? இவை சில முக்கிய கேள்விகளாகும்." என்கின்றா. இப்படி முக்கிமுனங்கிய விடையம், ஐயோ புலி என்று பாடுவதைத் தாண்டியதல்ல.
மக்களைப் பற்றி பேச வக்கற்று, அந்த மக்களுக்காக குரல்கொடுக்க முடியாத நீங்கள் எல்லாம், ஜனநாயக வாதிகள் என்று கூறிக்கொள்வது ஒரு சொல் மேலான மோசடிதான். வடக்கு மேலாதிக்கத்தின் கிழக்கு கோவணங்களே!
புலியெதிர்ப்பு கோவணங்களே
'கருணா எதற்காக அரசியல் செய்கின்றார்?" சொல்லுங்களேன்? என்ன அரசியல் செய்கின்றார்? கூற முடியுமா? ஏன் புலுடா?
'அவரது கட்சியின் எதிர்காலம் என்ன?" என்று கவலைப்படும் நீங்கள், மக்களின் எதிர்கால அரசியல் என்ன என்று, கவலைப்பட்டது உண்டா?
'நாங்கள் ஏன் கருணாவின் அரசியலை ஆதரிக்கிறோம்?" என்று புலியெதிர்ப்பில் புலம்பும் நீங்கள், புலிகளை தோற்கடித்த அந்த மக்களை நீங்கள் எப்போதாவது ஆதரித்ததுண்டா?
கருணாவை 'ஏன் கட்டாயம் ..ஆதரிக்க வேண்டும்?"என்ற உங்கள் புலியெதிர்ப்பில் குலைக்கும் நீங்கள், மக்கள் ஏன் எந்த வகையில் எப்படி ஆதரிக்க வேண்டும் என்று ஏன் சொல்ல முடிவதில்லை?
எல்லாம் புலியெதிர்ப்பு மூட்டைக்குள் நின்று கொறித்தபடி, மக்களை எட்டி உதைக்க முனைகின்றனர். இந்த மோசடிகள் அசாதாரணமானது. 'கருணாவினால் முதுகெலும்பு உடைக்கப்பட்ட நிலையிலேயே பிரபாகரனின் புலிகள் இருக்கின்றனர். கிழக்கைச் சேர்ந்த பல மூத்த புலி உறுப்பினர்கள் ஒத்தாசையாக இருந்தும் வடக்கைச் சேர்ந்த புலிகளின் எந்தத் தளபதியாலும், கருணாவின் மொழியில் சொன்னால், பிரபாகரனின் தொந்தி வளர்ந்த தளபதிகளால் கிழக்கில் தற்போது நின்றுபிடிக்க முடியவில்லை. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. முதலாவது கருணா புலிகளை விட்டு ஆயிரக்கணக்கான அங்கத்தவர்களுடன் பிரிந்தது மட்டுமன்றி, இன்று தனியாக ஒரு படையணியாக நின்று புலிகளுடன் மோதுவது. இரண்டாவது கிழக்கு மக்களின் கணிசமானளவு ஆதரவை வன்னிப் புலிகள் இழந்தது." எப்படிப்பட்ட ஒரு மோசடி. மக்களை எட்டி உதைக்கும் ஒரு மோசடி. இராணுவ ரீதியான யுத்த தளத்தில், கருணா கும்பல் புலிகளை தோற்கடிக்கவில்லை. மாறாக பேரினவாதம் தான் அதை செய்கின்றது. அதன் எடுபிடிகள் தான் கருணா கும்பல். ஐந்தாம் படையாகத் தான, இந்த கும்பல் செயல்படுகின்றது. இந்த கும்பலுக்கு என்று, பேரினவாத அரசியல் வழிக்கு வெளியில், தனியான சுயமான அரசியல் இராணுவ வழிகள் கிடையாது. இந்தியாவினதும், இலங்கை அரசினதும் வளர்ப்பு வேட்டை நாய்களாக, களத்தில் மக்களை புலிகளின் பெயரில் வேட்டையாடுகின்றது. அவ்வளவு தான் இதன் அரசியல்.
கிழக்கில் புலிகள் தோற்றார்கள் என்றால், இதற்கு காரணம் வெறும் கருணா அல்ல. மாறாக மக்கள் புலிகளை தோற்கடித்துவிட்டார்கள். இது கிழக்கில் மட்டுமல்ல, வடக்கிலும் தான். புலிகள் மக்கள் ஆதரவை முழுமையாக இழந்துவிட்டனர். எல்லாவிதமான நம்பிக்கைகளையும், அசாதாரணமான கற்பனைகளும் கூட, சிதைந்து சின்னாபின்னமாகி கிடக்கின்றது. புலிக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுகள் என்றுமில்லாத வகையில் சிதைந்து மீளமுடியாத நிலையை அடைந்துவிட்டது. இதை பயன்படுத்தி பேரினவாத இராணுவம் கிழக்கில் புலிகளை ஒழித்துக்கட்டுகின்றது. அடுத்து வடக்கு நோக்கி அது நகரும்.
புலிகள் அன்றாடம் ஒவ்வொரு விடையத்திலும் தோற்கின்றனர். இதுவே மேலும் மேலும் மக்களுக்கு எதிராக மூர்க்கமாக பாய்கின்றது. இதைப் பயன்படுத்தி புலிகளை தோற்கடித்தவராக காட்டிக்கொண்டு, சில வில்லன்கள் கதாநாயக வேஷத்தில் பொறுக்கித்தனமான வகையில் வெளிப்படுகின்றனர். இந்த வகையிலான ஒரு புலுடாப் பேர்வழிதான் கருணா. அவன் கும்லும் அதற்கு காவடி எடுத்தாடும் அரோகராப் பேர்வழிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். புலிகளை தோற்டித்த அந்த கருணாவின் இராணுவ வெற்றிகள் எங்கே எப்போது நடந்தது? ஐயா புண்ணியவான்களெ, யாருக்கு புலுடா விடுகின்றீர்கள்.
உண்மை வேறுவிதமானது. மக்கள் தோற்கடிக்காத ஒன்றை, யாரும் தோற்கடிக்கமுடியாது. மக்கள் விரோதியான கருணா கும்பலும் இதை செய்யமுடியாது. மக்கள் புலிகளை தோற்கடித்த நிலையில், அந்த வெற்றிடத்தில் ஒட்டைச் சட்டியை ஒட்டுவது பொறுக்கித்தனம். இப்படிப்பட்ட பொறுக்கி அரசியல் பேர்வழிகளின் பின்னால் நக்கித்திரிவது எடுபிடி அரசியலாகின்றது.
இந்த அரசியல் எடுபிடித்தனம் கருணாவை விமர்சிப்பதாக காட்டிக்கொண்டு, நடத்தும் அரசியல் பித்தாலாட்டமானது, மோசடித்தனமானது. 'கருணாவை அழித்துவிட்டு, அவரினதும் அவரது கட்சியையும் அதன் அரசியலையும் அழித்துவிடும் நோக்கில் நடத்தப்படும் சேறடிப்புக்களை கருணா கவனத்திற் கொள்ள தேவையில்லை. அவற்றின் உள்நோக்கம் யாவரும் அறிந்ததே. அவை பலமுகங்களுடன் வரும், சில வேளை தமிழருக்கான ஜனநாயகம், மனித உரிமை, பத்திரிகைச் சுதந்திரம், பல்கலைக்கழகங்களின கருத்து என பல வேஷங்களோடும் வரும்." எப்படிப்பட்ட பாசிட்டுகள் இந்த 'ஜனநாயகவாதிகள்" என்பதை இதன் மூலம் கூறிக்கொள்கின்றனர். மனித விரோதிகளால் தான், இதை இப்படிக் கூற முடிகின்றது?. '..தமிழருக்கான ஜனநாயகம், மனித உரிமை, பத்திரிகைச் சுதந்திரம், பல்கலைக்கழகங்களின கருத்து.." என்று கோரினால், அதை மறு என்று கூறுகின்ற புலியெதிர்ப்பு பாசிச போக்கிரிகள் தான் இவர்கள். மனித உரிமை, கருத்துச் சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் எதுவும் புலிக்கு சார்பானது என்பது இவர்கள் சுற்றி வளைத்து கூறும் அரசியலாக உள்ளது. இவைகளே புலிகளின் அரசியலை அனாதையாக்கும் என்று, அன்று புலிகள் கூறியவர்கள். இன்று இது கருணா கும்பலின் பாசிச அரசியலை அனாதையாக்கும் என்று புலியெதிர்ப்பு கும்பல் கூறி அதை மறுக்கின்றது. அதே புலி அரசியல்? ஆனால் அதை நாகரிகமாக மூடிமறைத்து செய்யக் கோருவதே, இவர்களின் 'ஜனநாயகமாக" உள்ளது. உள்ளடகத்தில் பாசிசம் இப்படி மூடிமறைத்து நிற்கின்றது.
தமிழ் அரங்கம்
Thursday, July 12, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
´ýÚÁ¢ø¨Ä ÒÄ¢¸¨Ç Äí¸¡Å¢ø ¡ÅÃõ ¦ºöÔõ ²¸¡¾¢Àò¾¢Â ¿¢ÚÅÉí¸û Á£Ð ¾¡ì̾ø ¦¾¡Îì¸î ¦º¡øÄ¢ ´Õ §ÅñΧ¸¡û ¨ÅòÐ «¨¾ «Å÷¸û ¿¢¨È§ÅüȢɡø ¦¾Ã¢Ôõ §º¾¢, ÒÄ¢¸Ç¢ý ¯ñ¨ÁÂ¡É ÀÄõ ±íÌ ¯ûÇÐ ±ýÚ,
«ÍÃý
ஒன்றுமில்லை புலிகளை லங்காவில் யாவரம் செய்யும் ஏகாதிபத்திய நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடுக்கச் சொல்லி ஒரு வேண்டுகோள் வைத்து அதை அவர்கள் நிறைவேற்றினால் தெரியும் சேதி, புலிகளின் உண்மையான பலம் எங்கு உள்ளது என்று,
அசுரன்
Post a Comment