தமிழ் அரங்கம்

Wednesday, June 4, 2008

டாலர் மதிப்புச் சரிவு: இந்தியா இடிதாங்கியா?

டாலர் மதிப்புச் சரிவினால் இந்தியாவில் 80 இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்தியப் பொருளாதாரம் 9 சதவீத வளர்ச்சியை எட்டப் போகிறது என மன்மோகன் சிங் கும்பல் ஒருபுறம் ஆரவாரம் செய்து கொண்டிருந்தாலும், இன்னொருபுறம், அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சி என்ற கத்தி அவர்களை அச்சுறுத்தத் தொடங்கியிருக்கிறது.

சர்வதேச நிதிச் சந்தையில் அமெரிக்க டாலர் சந்தித்து வரும் சரிவுதான் டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்தி வருகிறதே தவிர, இதில் இந்தியப் பொருளாதாரத்தின் சாதனை எதுவும் இல்லை. தாராளமயம் தனியார்மயம் தீவிரமாக அமலுக்கு வந்த 1991ஆம் ஆண்டில், ஒரு அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 26,90 ஆக இருந்தது. இது, கடந்த பதினைந்து ஆண்டுகளில் படிப்படியாகச் சரிந்து ரூ.45/ஐத் தொட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே, அமெரிக்க டாலரின் மதிப்பு சர்வதேச நிதிச் சந்தையில் விழத் தொடங்கியதையடுத்து, தற்பொழுது, ஒரு அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 39/ ஆக அதிகரித்திருக்கிறது.

நமது நாட்டுச் செலாவணியான பணம் வலுவாக இருப்பது நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்லதுதானே எனப் பாமரன் கருதலாம். ஆனால், ஏற்றுமதிக்கு முன்னுரிமை தரப்படும் தற்போதைய இந்தியப் பொருளாதாரத்தில், பணத்தின் மதிப்பு உயர்வு மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். அதனால்தான், ஏற்றுமதி நிறுவன அதிபர்கள் இந்த "உயர்வை'' வரவேற்க மறுக்கிறார்கள்.

அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியும்கூடத் திடீரென, எதிர்பாராதவிதமாக நடந்துவிட்ட விபத்து அல்ல; மாறாக, அமெரிக்கா திணித்துவரும் உலகமயம் மற்றும் அதனின் மேலாதிக்க நடவடிக்கைகளின் நேரடி விளைவுகள்தான் இந்த வீழ்ச்சி.
.

No comments: