கடந்த ஆண்டு இதே மே மாதத்தில் (மே 14, 2007) குடியுரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் அனைத்திந்திய துணைத் தலைவரும், (சட்டீஸ்கர்) மாநிலச் செயலாளருமான பினாயக் சென், இதே சிறப்புப் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது வாசகர்களுக்கு நினைவில் இருக்கலாம் (பு.ஜ. ஜூலை 2007 - சத்தீஸ்கர்: 'நீ எங்களோடு இல்லையென்றால் நீ தீவிரவாதியோடு இருக்கிறாய்!" அரசு பயங்கரவாதம் விடுக்கும் எச்சரிக்கை ). சர்வதேசப் புகழ் பெற்ற குழந்தை மருத்துவ நிபுணரும், மனித உரிமைப் போராளியுமான பினாயக் சென்னுக்குப் பிணையும் மறுக்கப்பட்டு, அவர் கடந்த ஓராண்டாகவே சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்திய அரசு, பினாயக் சென்னைப் பயங்கரவாதக் குற்றவாளியாகச் சித்தரித்தாலும் அமெரிக்காவைச் சேர்ந்த உலக நலவாழ்வுக் கழகம், சென்னின் மருத்துவச் சேவையைப் பாராட்டி இந்த ஆண்டிற்கான ""ஜொனதான்மான்'' விருதை, அவருக்கு வழங்கியிருக்கிறது. இதனையொட்டி, பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், மருத்துவர்களும் மட்டுமின்றி நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் பலரும் பினாயக் சென்னை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோளுக்கு சட்டீஸ்கர் மாநில அரசு அளித்த அநாகரிகமான பதில், அஜயின் கைது.
சமூக சேவகரான அஜய் கைது செய்யப்பட்ட விதம் மட்டுமன்று, அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும் இந்திய அரசின் பாசிச வக்கிர புத்தியைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.
2004இல் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற பொழுது, அத்தேர்தலைப் புறக்கணிக்குமாறு இ.பொ.க. (மாவோயிஸ்டு) அறைகூவல் விடுத்தது. சட்டீஸ்கர் மாநில அரசோ, எப்படியாவது பழங்குடி இன மக்களை ஓட்டுப் போட வைத்து, மாவோயிஸ்டுகளின் அறைகூவலை முறியடித்து விட வேண்டும் என்ற நோக்கில், மத்திய ரிசர்வ் போலீசு படையைக் கிராமங்கள்தோறும் நிறுத்தியது.
இந்த நிலையில், அஜய், பினாயக் சென் உள்ளிட்ட சிலர், மக்களின் மனநிலையை அறிய, தேர்தல் நடந்த நாளன்று பல்வேறு கிராமங்களுக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். அன்று மாலை 4 மணியளவில், ஒரு கிராமத்திற்கு வந்த அவர்கள், அக்கிராமம் ஆள் அரவமின்றி வெறிச்சோடிக் கிடந்ததைக் கண்டனர். வாக்குச்சாவடியும் ""அநாதையாக''க் கிடப்பதைக் கண்ட அஜய், தனது புகைப்படக் கருவியால் அதனைப் படமெடுக்க முயன்றார்.
அந்த சமயத்தில் மாவோயிஸ்டுகளை ஆதரிக்கும் இளைஞர்கள் சிலர், அஜயையும் அவரது நண்பர்களையும் சுற்றி வளைத்துக் கொண்டனர். இவர்கள் போலீசின் ஏஜெண்டுகளாக இருக்கலாம் எனச் சந்தேகப்பட்ட அந்த இளைஞர்கள், அஜயையும், அவரது நண்பர்களையும் சிறை பிடித்தனர். இரவு வெகு நேரம் கழித்தே அவர்களைக் கிராமத்தில் இருந்து திரும்பிப் போக அனுமதித்தனர். எனினும், அந்த இளைஞர்கள் அஜயிடமிருந்து பறித்துக் கொண்ட புகைப்படக் கருவியைத் திருப்பித் தர மறுத்துவிட்டனர்.
இவ்விரும்பத்தகாத சம்பவத்தைக் கேள்விப்பட்ட... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
No comments:
Post a Comment