நேபாளப் புரட்சியைத் தலைமையேற்று வழிநடத்திய மாவோயிஸ்டுகள், அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் வெற்றியோடு சுயதிருப்தி அடைந்து முடங்கி விடவில்லை. இடைக்கால அரசில் பங்கேற்று முற்போக்கான சட்டங்களை இயற்றுவதன் மூலம் மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவி விட முடியும் என்று அவர்கள் கனவு காணவுமில்லை. ஒருபுறம், இடைக்கால அரசில் பங்கேற்று ஜனநாயகக் குடியரசை நிறுவ மேலிருந்து போராடி வரும் மாவோயிஸ்டுகள், மறுபுறம் மக்கள்திரள் போராட்டங்களைக் கட்டியமைத்து கீழிருந்தும் நிர்பந்தம் கொடுத்து புரட்சியைத் தொடர்கிறார்கள்.
நேபாளத்தில் மன்னராட்சி வீழ்த்தப்பட்டு, மன்னர் குடும்பம் அரண்மனையிலிருந்து வெளியேறி சாதாரணக் குடிமகனாக வாழவேண்டும் என்று மேலிருந்து சட்டம் இயற்றப்பட்ட போதிலும், அவர் தானாக வெளியேறிவிடவில்லை. கீழிருந்து மக்கள்திரள் போராட்டங்கள் தொடர்ந்த பின்னரே, மன்னர் குடும்பம் மூட்டை முடிச்சுகளோடு அரண்மனையை விட்டு வெளியேறியது. மேலிருந்து சட்டங்கள் இயற்றினால் மட்டும் போதாது; கீழிருந்து மக்கள்திரள் போராட்டங்களும் நிர்பந்தங்களும் எவ்வளவு அவசியம் என்பதை இது எடுப்பாக உணர்த்துகிறது.
தற்போது, இடைக்கால அரசை நிறுவுவதிலும் அமைச்சர் பதவிகளைப் பகிர்ந்து கொள்வதிலும் அரசியல் கட்சிகளுக்கிடையே முரண்பாடுகளும் இழுபறியும் நீடிக்கின்றன; மாவோயிஸ்டுகளுக்கு இதர அரசியல் கட்சிகள் பல்வேறு முட்டுக்கட்டைகள் போட்டு முடக்கத் துடிக்கின்றன; முந்தைய அரசின் பிரதமரான கொய்ராலா, பதவி விலக மறுக்கிறார். இவற்றையும், புதிய முற்போக்கான சட்டங்கள் இயற்றுவதையும் மேல்மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் உடன்பாடுகள் மூலம் மட்டும் தீர்வு காண முடியாது. கீழிருந்து மக்கள்திரள் போராட்டங்கள் நிர்பந்தங்கள் மூலமே பிற்போக்கு சக்திகளை வீழ்த்தி ஜனநாயகக் குடியரசை நிறுவ முடியும் என்பதையே நேபாள நிலைமைகள் படிப்பினையாக உணர்த்துகின்றன.
புரட்சியின் வளர்ச்சிப் போக்கில், இடைக்கால அரசில் பங்கேற்று மேலிருந்து போராடுவது என்ற மார்க்சியலெனினிய போர்த்தந்திர உத்தியை நேபாளத்தின் பருண்மையான நிலைமைக்கேற்ப செயல்படுத்தி வெற்றியைச் சாதித்துள்ள மாவோயிஸ்டுகள், அப்போர்த்தந்திர உத்தியின் வழியில் கீழிருந்தும் மக்கள்திரள் போராட்டங்களைத் தொடர்கின்றனர். நேபாள மாவோயிஸ்டு கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினரும் முக்கிய தலைவர்களில் ஒருவருமான தோழர் பாபுராம் பட்டாரய், அமெரிக்காவின் மேடிசன் குடிமக்கள் குழும வானொலிக்கு (ஙிOகீகூஊM) கடந்த மே 3ஆம் தேதியன்று அளித்த பேட்டியில், கீழிருந்து மக்கள்திரள் போராட்டங்களைத் தொடர வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார். மனித இன வரலாற்று ஆய்வாளர்களான ஸ்டீபன் மைக்செல், மேரி டெஸ் செனே ஆகியோருக்கு அவர் அளித்த பேட்டி, இவ்வானொலியில் மே 4ஆம் தேதியன்று ஒலிபரப்பானது. இப்பேட்டி ""எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி'' என்ற ஆங்கில வார இதழிலும் (மே 1016, 2008) வெளிவந்துள்ளது. மிக விரிவான இந்தப் பேட்டியைச் சுருக்கி சாரத்தை மட்டும் இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
— ஆசிரியர் குழு
* இம் மே நாளில் தொழிலாளர்களுக்கு உங்கள் கட்சி விடுத்துள்ள செய்தி என்ன? நேபாளத்தில் நாங்கள் முற்றிலும் சொந்தக் காலில் நின்று போராடி புரட்சியின் வெற்றியைச் சாதித்துள்ளோம். அதேசமயம், நாங்கள் எதிர் கொண்டுள்ள சவால்கள் ஏராளம். நேபாள பிற்போக்குவாதிகள் வரலாற்று அரங்கிலிருந்து வெகு எளிதில் விலகவிட மாட்டார்கள். அவர்கள் கடும் எதிர்த்தாக்குதலைத் தொடுக்கவே செய்வர். எனவே இந்தச் சவாலை நாங்கள் பாரதூரமானதாகக் கருதிச் செயல்பட வேண்டியுள்ளது. தூக்கியெறியப்பட்ட நிலப்பிரபுத்துவ பிற்போக்கு சக்திகளின் எதிர்த் தாக்குதலை முறியடிக்க தொழிலாளர்களும் உழைக்கும் வர்க்கத்தினரும் தேவையான தயாரிப்புகளைச் செய்ய வேண்டியுள்ளது.
அடுத்து, நாங்கள் ஒரு புதிய நேபாளத்தை உருவாக்க வேண்டும். சமாதானம், ஐக்கியம், முன்னேற்றத்தைக் கொண்ட ஒரு புதிய தேசிய ஒருமைப்பாட்டை நிறுவுவதில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளை வீழ்த்தி,... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
No comments:
Post a Comment