தமிழ் அரங்கம்

Friday, October 17, 2008

குஜராத், ஒரிசா, காநாடகா… தெற்கிலும் தலைதூக்கும் பார்ப்பன பாசிசம்!

மாதம் ஒன்றாகியும், மத்திய அரசு படைகளை அனுப்பியும், ஊரடங்குச் சட்டம் பிறப்பித்தும், ஒரிசாவில் கிறித்தவ மக்கள் தாக்கப்படுவது நிற்கவில்லை. ஒவ்வொரு நாளும் கலவரத்தின் கொடூரமான கதைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. பாதிரியார்கள் நிர்வாணமாக்கப்பட்டு இரக்கமின்றித் தாக்கப்படுகின்றார்கள். கன்னியாஸ்திரீகள் கும்பலால் கற்பழிக்கப்படுகிறார்கள். அகதி முகாமிலும், காடுகளிலும் தஞ்சமடைந்திருக்கும் கிறித்தவ மக்கள் நிர்மூலமாக்கப்பட்ட தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்பினால் மீண்டும் அடித்து விரட்டப்படுகிறார்கள்.

"இந்துவாக மாறும்வரை யாரும் ஊருக்குள் நுழைய முடியாது'' என பஜ்ரங்தள் குண்டர்களால் மிரட்டப்படுகின்றார்கள். பார்ப்பன இந்து மதவெறியர்களின் கொலைப்படை கிராமம் கிராமமாகச் சுற்றிவந்து கிறித்தவர்களின் வீடுகளையும், தேவாலயங்களையும் தேடித்தேடி நொறுக்குகிறது. காந்தமால் மாவட்டத்தில் தாக்கப்படாத ஒரு கிறித்தவ வீடு கூட இல்லை என்ற நிலைமை உருவாக்கப்பட்டு விட்டது. சங்கபரிவாரக் கும்பலின் அட்டூழியங்களை போலீசு வேடிக்கை பார்க்கின்றது.

ஒரிசாவில் ருசிகண்ட ஒநாய்க்கூட்டம் கர்நாடகத்திலும் தாக்கத் தொடங்கிவிட்டது. "கர்நாடகத்தை குஜராத் ஆக்குவோம்' என்ற முழக்கத்தை எடியூரப்பா அரசு அமல்படுத்துகின்றது. கிறித்தவ இளைஞர்களைக் கைது செய்து பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைக்கின்றது. கிறித்தவ மக்களின் மீது தாக்குதல் நடத்தும் பஜ்ரங் தள்ன் கர்நாடக மாநில அமைப்பாளர் மகேந்திரக் குமாரை மட்டும் ஒப்புக்குக் கைதுசெய்து உடனே விடுதலையும் செய்திருக்கின்றது எடியூரப்பா அரசு. கேரளத்திலும், தமிழகத்திலும் கூட சர்ச்சுக்கள் தாக்கப்பட்டிருக்கின்றன.

"பிரதமர், குடியரசுத் தலைவர், சோனியா காந்தி என எல்லோரையும் சந்தித்து முறையிட்டு விட்டோம்; எந்தப் பயனுமில்லை'' என்று குமுறுகின்றார் ஒரிசாவின் பிஷப். கர்நாடகத்திலும் அதே நிலைதான். ஒரிசாவின் கலவரப் பகுதிகளுக்குள் சங்க பரிவாரத் தலைவர்கள் தடையின்றி வந்து செல்கின்றனர். ஆனால் உண்மையறியும் குழுக்களை மட்டும் அரசே தடுத்து நிறுத்துகின்றது. இவ்வளவு .நடந்து..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

2 comments:

ஆ.ஞானசேகரன் said...

மாநில அரசுகளும் இதற்கு துணைப் போகின்றது. பல மானிடமும் இதற்கு மனறீதியாக ஒப்புதல் கொடுக்கின்றனர். தன்னுடைய மதஞாயத்தை, மததர்மத்தை வேட்டையாடுதல் மூலம் ஞாயப்படுத்துகின்றது வேடிகையான ஒன்று. தான் நம்பும் மதம் மக்கள் மனங்களில் ஞாயப்படுத்த எவனும் சேவை மனப்பான்மையோ, தொண்டு செய்வதன் மூலம் செயல்படுத்த முடியாத துப்பில்லாமல் மதவெறியை தூண்டி குளிர்காயும் ஓட்டு பொரிக்கிகள் கொட்டம் தாங்க முடியவில்லை. இப்படிதான் ஒரு மதம் வளரவேண்டும் என்பது வெறித்தனாமான நம்பிக்கை.

Robin said...

மைனாரிட்டியினருக்கு எதிரான தாக்குதல்கள் தற்போது அதிகரித்து வருகிறது. இதை தடுக்கவேண்டிய மாநில அரசுகள் இந்த தாக்குதல்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு கொடுப்பது நம் நாடு மதசார்பற்ற நிலையிலிருந்து விலகி காவி சித்தாந்தத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது.