தமிழ் அரங்கம்

Wednesday, February 11, 2009

தற்கொலைகள் விடுதலையாகிவிடாது!

தற்கொலைகளே அரசியலாகிப்போன தமிழ்மக்கள் வாழ்வில் முத்துக்குமாரு போன்ற இளைஞர்களின் தற்கொலைகள் எந்தவௌhரு மாற்றத்தையும் ஏறபடுத்திவிடாது. மாறாக மக்களின் அழிவில் அரசியல் புரியும் புலிகளுக்கு ஆதரவாக நடாத்தப்படும் கூத்துக்களுக்கு, ஓர் தென்புகோலாக அமையும். அதுவே வாக்கு வங்கிகளாகவும் மாறும்!

இலங்கையில் சிவகுமாரன் தற்கொலை அரசியலின் பிதாமகன். தமிழ்த்தேசிய அரசியலில் அவன் அன்று எடுத்த நஞ்சுக்குப்பி இன்று சகல புலிகளினதும் கழுத்தில் 'விடுதலைக்" குப்பிகளாக தொங்குகின்றது.

உலகில் எந்தவொரு விடுதலைப் போராட்ட இயக்கமும் கழுத்தில் நஞ்சுக்குப்பியை தொங்கவிட்டு, தற்கொலைப் போரையே வாழ்வாதாரமாகக் கொண்டு, விடுதலைப்போர் நடாத்தியதாக வரலாறு இல்லை. குறைந்தபட்சம் கொள்ளையடிக்கும் பயங்கரவாதக் கும்பல்கள் கூட இதைச் செய்வதில்லை.

புலிகளுக்கு தலைவர் சயனைற் குப்பியை கையில் கொடுக்கும்போது, நீ யாரிடமும் பிடிபடும் சந்தர்ப்பத்தில் இதை அருந்தி அழிந்து போகக் கடவாய் என சபித்தே அனுப்புவார். அதன் விளைவு விடுதலைப் போராளிக்குரிய சகல தன்மைகளையும் இழந்து, ஓர் சாதாரண இராணுவ சிப்பாய் போன்றே களம் செல்கின்றான். நீ எப்படியாவது போராடி மடிந்தால் உன்கடமை முடிந்துவிடும் அவன் கழுத்தில தொங்கும் குப்பி நாளாந்தம் அவனுக்கு அதைச் சொல்லிக் கொணடேயிருக்கும்.

உண்மையான விடுதலை இயக்கங்களினதும், புரட்சிகர வெகுஐனப் போராளிகளினதும் நிலை அதுவல்ல. உன் உடல் பொருள் ஆவி அத்தனையும் மக்களுக்கே! நீ எதிரியிடம் பிடிபடும்போதும் எத்தகைய அடக்குமுறை சித்திரவதைகளுக்கு.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: