தமிழ் அரங்கம்

Sunday, February 8, 2009

"வன்னி மக்ககளை மீட்கின்ற அரசும்"! "வன்னி மக்களைக் காக்கிற புலிகளும்"

என்னடா கொடுமை இது? சோத்துப் பருக்கைகளைக் கூட பெற நாதியற்ற யுத்தத்தை நடத்திக் கொண்டும், அதற்குள்ளே வன்னி மக்களை இருத்திக் கொண்டும் இலங்கை மக்கள் எல்லோரையும் ஏமாந்த சோணகிரியாக்கி வருகிறார்கள். "வன்னி மக்ககளை மீட்கின்ற அரசும்"! "வன்னி மக்களைக் காக்கிற புலிகளும்"! மெண்டு.

உலக உணவுத் திட்டத்தினர் உணவுகளை வன்னிக்குள் கொண்டு செல்ல முடியாமல் திண்டாடுகிறார்கள். இந்நிலையில, வன்னிக்குள் அவர்களைக் கூட்டிச் சென்று வருவதற்கான முயற்சியை தமிழ் கூட்டமைப்பினர் ஏன் முயலக் கூடாது? பட்டினிச் சாவுக்குள்ளும் அம்மக்கள் சிக்கி தவிக்காத படி உடனடியாகவே புலிகள் அம்மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தி விட வேண்டு மென்றும் ஏன் கோரக் கூடாது? ஏன் புலம்பெயர் தமிழர்கள் இந்த விடயத்தில் அருளாமல் இருந்து வாருகிறார்கள். "யுத்தத்தை நிறுத்து, யுத்தத்தை நிறுத்து" என்று மூக்காலே சிந்துவதைத் தவிர, நாவில எதுவும் எழாதோ?

அது எப்படி நடக்கும். தனி ஒரு மனிதனில் நம்பிக்கை வைத்து தமிழீழ யுத்தத்தை நடத்துவதும், அது போல தனிமனிதர்களில் -வெளிநாட்டவரில்- நம்பிக்கை வைத்து யுத்தத்தை நிறுத்தக் கோருவதும் தமிழ் அதிசயப்பிறவிகள் காலங்காலமாக நடத்தி .............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: