தமிழ் அரங்கம்

Thursday, March 5, 2009

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாய்கிறது!

சத்யம் நிறுவனத்தில் நடந்துள்ள பொய்க்கணக்கு மோசடியில் மறைந் துள்ள உண்மைகளைக் கண்டறிய வேண்டும் என்றால், ராமலிங்க ராஜுவின் மகன்களை முதலாளிகளாகக் கொண்டு இயங்கிவரும் மேடாஸ் நிறுவனங்களைத் தோண்டித் துருவ வேண்டும். இந்த இரண்டு நிறுவனங்களின் மீதும் கை வைத்தால், ராமலிங்கராஜுஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிஅதிகார வர்க்கம் ஆகியோருக்கும் இடையேயான நெருக்கம் மட்டுமல்ல, மாபெரும் ஊழல்அதிகார முறைகேடுகள் கூட அம்பலத்துக்கு வரும்.

சத்யம் நிறுவன அதிபர் ராமலிங்க ராஜு, ஹைடெக் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியிலேயே அரசாங்கத்தின் செல்லப் பிள்ளையாகிவிட்டார். நாயுடு ஆட்சிக்குப் பின் வந்த ரெட்டி ஆட்சியிலோ, ராஜு அரசாங்கத்தின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டார். காங்கிரசு ஆட்சியில் தான் மேடாஸ் நிறுவனங்களுக்கு "பம்பர்'' பரிசு அடித்தது போல, 12,000 கோடி ரூபாய் பெறுமான ஹைதராபாத் பெருநகர ரயில் திட்டம்; 1,500 கோடி ரூபாய் பெறுமான மச்சிலிப்பட்டிணம் துறைமுகத்திட்டம்; காக்கிநாடாவில் மூன்று சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் திட்டம் உள்ளிட்டு 40,000 கோடி ரூபாய் பெறுமான பல கட்டுமானத் திட்டங்கள் கிடைத்தன.அரசாங்க விதிகளின்படி.......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: