தமிழ் அரங்கம்

Friday, March 6, 2009

தமிழ்நாட்டு தமிழர்களும், அவர்கள் போராட்டமும்

ராஜீவ் கொலையின் பின் ஓய்ந்து போன அலை, புலிகளின் தோல்வி நெருங்க மீண்டும் தமிழகத்தில் போராட்ட அலையாக இன்று வெடித்துள்ளது. முன்னைய அலையில் பின் இருந்து பிழைத்த பிழைப்புவாதிகள் பலர், இன்று எதிர்ப்பு நிலையில் இதை ஒடுக்குபவராகிவிட்டனர்.

சிறிய பிழைப்புவாதக் கட்சிகள் இதை கையில் எடுத்து, வாக்குபெற முனைகின்றன. ஆனால் இதற்கு வெளியில் தன்னெழுச்சியான போராட்டங்கள், அரசியல் மயமாக்கல்கள் நிகழ்கின்றது. இந்திய ஆளும் வர்க்கத்தை எதிர்த்த பொதுப் போராட்டம், ஈழத்தமிழர் ஆதரவு தளத்தில் வளர்ச்சி பெறுகின்றது. புலிகள் பற்றிய நிலைப்பாடு விமர்சனத்துக்கு உள்ளாக்காமல், பிழைப்புவாத ஈழ ஆதரவு அரசியலை மறுத்து இது நிகழ்கின்றது.

இங்கு புலிகளின் அரசியல் தளம் நேரடியாக கேள்விக்குள்ளாகவில்லை. ஈழ ஆதரவு பிழைப்புவாத அரசியலுக்கு மாறாக, இயல்பாக தமிழின மற்றும் சர்வதேசியமும் ஒன்றிணைந்த ஒரே தளத்தில் இன்று போராட்டம் நடக்கின்றது.

இன்று ஈழ ஆதரவான அலை, இரண்டு பிரதான அணியாகி வருகின்றது.

1.பாராளுமன்ற பிழைப்புவாத அரசியல்

2.பாராளுமன்றமல்லாத புரட்சிகர அணிகள்

இந்த இரண்டு போக்கில் பாராளுமன்றமல்லாத அணிக்குள் இரண்டு பிரிவுகள் உள்ளது.

1.வெறும் இன (தமிழ் தேசியவாதிகள்) உணர்வாளர்கள்,

2.சர்வதேசியத்தை முன்வைக்கும் சர்வதேசியவாதிகள்

பாராளுமன்ற பிழைப்புவாதிகள் படிப்படியாக அம்பலமாகி, வெறும் புலிக்குள் புலிகளைப்போல் முடங்கி வருகின்றனர். இவர்கள் அ.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: