தமிழ் அரங்கம்

Tuesday, March 3, 2009

"அகம் சும்மாஸ்மி’ - நான் கடவுள் - - குருசாமி மயில்வாகனன் திரைப்படம் குறித்த ஒரு பார்வை

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் குரங்கினத்திலிருந்து வளர்ச்சியடைந்து மனித இனமாய்ப் பரிணமித்த பிறகு உற்பத்தியில் ஈடுபடாதவரையில் மனிதன் நாகரீகமடையவில்லை. சமூகத்திற்கான உற்பத்தியில் அறிந்தோ, அறியாமலோ ஈடுபட்ட பிறகுதான் மனிதஇனம் நாகரீகமடையத் துவங்கியது. உற்பத்தியில் ஈடுபடாத மனிதர்கள் இயற்கையோடு இணைந்த விலங்கின வாழ்வுநிலையிலேயே நீண்ட வருடங்களாகத் தேங்கி நின்றனர்.

உலகம், இயற்கை, மரணம் குறித்தான கேள்விகள் மனிதர்களுக்குள் எழுந்தபோது அவர்கள் பயந்து போனார்கள். குறிப்பாகஇ காடுகளில் இயற்கையின் வேடிக்கைகளைக் கண்ட மனிதன் மேலும் பயந்து போனான். இடி, மழை, புயல் மற்றும் பிறஉயிரினங்களின் ஒலிகள் அவனுக்குகள் பீதியை ஊட்டின. இவைகளையெல்லாம் அவன் தீயவைகளாகக் கருதினான். இவைகள் இல்லாதபோது அவற்றை நல்லவைகளாகக் கருதினான். இளங்காற்றானது பெரும்புயலாவதையும், சிறுதூறல் பெருமழையாவதையும், பயந்தோடும் மிருகங்களே பிறகு பாய்ந்து குதறுவதையும் கண்ட அவனால் நன்மை, தீமை இரண்டிற்குமான வேறுபாடுகளைத் துல்லியமாக வரையறுக்க முடியவில்லை. நன்மை, தீமை இரண்டையும் தனித்தனியான ஒன்றாகவும் இவைகள் தனித்தனியாக இயக்கப்படுகின்றன என்றும் எண்ணிக் கொண்டான். இவைகளை இயக்குபவர்கள் யார்? என அறியமுடியாமல் அவர்களை இவனே உருவகப்படுத்தி வழிபட ஆரம்பித்தா............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: