Friday, March 6, 2009

ஈழப் போராட்டமும், உலகத் தமிழர்களின் போராட்டமும்

ஒரு இனத்தின் அவலம், உலகின் கண்ணைத் திறக்கவில்லை. மனித அவலத்தை விதைத்தவர்கள், அறுவடை செய்தவர்களிடையே யார் இதற்கு உரிமையாளர்கள் என்ற எல்லைக்குள் உலகம் கண்ணை இறுக்க மூடிக்கொண்டது.

எம்மக்கள் கேட்பாரின்றி, நாதியிழந்த சமூகமாக அடிமைகளாகி இழிவுக்குள்ளாகி கிடக்கின்றனர். இதற்கு எதிராக போராடுவதாக கூறுகின்றவர்கள் கூட, ஏறெடுத்து பார்க்காத வக்கிரம். 'ஜனநாயகத்தை" மீட்பதாகவும், புலித் 'தேசியத்தை" பெற்றுத் தருவதாகவும் கூறித்தான், இந்த மனித அவலம் நியாயப்படுத்தப்படுகின்றது. இதற்குள் விதவிதமான பொறுக்கிகள். இலங்கை, இந்தியா, புலம்பெயர் சமூகம் வரை, இந்த மக்களை வைத்து அரசியல் செய்கின்றனர். தமிழனே இப்படி என்றால், பேரினவாதத்தின் பின்னால் உள்ள சிங்களவர்கள் எப்படி மனித கண்ணோட்டத்துடன் அணுகுவார்கள்?.

இப்படி தமிழ் தேசிய விடுதலைப் போராட்டமும், அது உருவாக்கிய மனித அவலமும், சர்வதேசிய தன்மை பெறவில்லை. மாறாக வெறும் தமிழர் போராட்டமாக சுருங்கிப்போனது. போராட்டத்தின் குறுகிய தன்மையால், இதன் வலதுசாரிய பாசிசத் தன்மையால், ஒடுக்கப்பட்ட உலக மக்களின் அனுதாபத்தைக் கூட அது பெறத்தவறியது.

இதற்கு விதிவிலக்காக இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் விதிவிலக்கு காணப்பட்டது. தமிழர் என்ற அடையாளத்தின் அடிப்படையிலான ஒரு பின்னணியில், ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் அமைப்பு வடிவம் பெற்று இருந்ததால், சர்வதேசியதன்மை.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: