தமிழ் அரங்கம்

Sunday, March 22, 2009

மோடித்துவாவின் புதிய பங்காளிகள்

இந்தியத் தரகு முதலாளிகளின் தளபதிகளாகக் கருதப்படும் ரத்தன் டாடா, அனில் அம்பானி, சுனில் மித்தல் (ஏர்டெல் நிறுவனத் தலைவர்) ஆகி யோரின் மனம் கவர்ந்த நாயகனாகிவிட்டார், திருவாளர் நரேந்திர மோடி. குஜராத்தில் சமீபத்தில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலாளிகளின் கூட்டம் மோடியைப் புகழ்ந்து தள்ளியதைக் கேட்டால், தமிழ்நாட்டில் அம்மாவையும், தளபதிகளையும் புகழ்ந்து "கட்அவுட்'' வைக்கும் தொண்டன்கூடக் கூசிப் போயிருப்பான்.

"மோடி, ஒரு நிறுவனத்திற்குப் பதிலாக ஒரு மாநிலத்தையே ஆளும் மிகச் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரி'' என்றார் ஏர்டெல் நிறுவனத் தலைவர், சுனில் மித்தல். ""கண்களைத் திறந்து வைத்துக் கொண்டே கனவு காணும் மோடியின் ஆற்றல்; குறிக்கோள்களை அடைவதற்கு அவர் காட்டும் வேகம் ஆகியவற்றை வைத்துப் பார்த்தால், மோடிதான் நமது நாட்டின் எதிர்காலத் தலைவர்'' என்றார், அனில் அம்பானி.

No comments: