தமிழ் அரங்கம்

Saturday, March 28, 2009

இந்துக்கலாச்சாரம்- ”பப்” கலாச்சாரம் இந்தியப் பெண்களைக் கவ்வும் இரட்டை அபாயம்


இவ்வாறு, குடித்துக் கூத்தடிக்கும் "பப்'' கலாச்சாரத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த ஸ்ரீமான் ராமனின் நாமகரணத்தையே தனது திருப்பெயராக சூட்டிக்கொண்ட அமைப்புதான் கருநாடக மாநிலத்தை சேர்ந்த "ஸ்ரீராமசேனை''. இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் அண்மையில் மங்களூரில் ஒரு கேளிக்கை மதுவிடுதிக்குள் (பப்) நுழைந்து அங்கிருந்த பெண்களைக் கடுமையாகத் தாக்கி, அவர்களை மானபங்கப்படுத்தினர்.

இந்திய கலாச்சாரத்தையும், "இந்து'ப் பெண்களையும் மேற்கத்திய கலாச்சார சீரழிவிலிருந்து காப்பதற்காகவே அவதாரமெடுத்துள்ளதாக சொல்லுகிறான், ஸ்ரீராம சேனையின் தலைவன் பிரமோத் முத்தலிக். ""இந்துப் பெண்களை கலாசார முன்னேற்றம் என்ற பெயரில் சீரழிக்கும் அயல்நாட்டு அரக்கனிடமிருந்து காக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்'' என்று கூறும் இவர்கள், அயல்நாட்டு அரக்கனிடமிருந்து பெண்களை காப்பதெல்லாம் இருக்கட்டும்; உள்ளூர் சாமியார்களிடமிருந்தும், சங்கராச்சாரிகளிடமிருந்தும் பெண்களை யார் காப்பாற்றுவது?

No comments: