இந்த அரசியல் கேள்வி, எமக்கு புலி முத்திரை குத்தி விலகிச் செல்லும் அரசியலாக வெளிப்படுகின்றது. இது இயங்கியலை புரிந்துகொள்ள முடியாத, அற்பத்தனமான இருப்புக்கான அரசியலாக மாறுகின்றது. எமக்கு புலி முத்திரை குத்துவது, உணர்ச்சிவசப்பட்ட ஒன்றாக இதை திரித்து புரட்டி அனைத்தும், இதை அரசியல் காழ்ப்புடன் அணுகுவதாகும்.
புலிகளை துரோகி என்ற சொல்லுக்குள் அடக்குவதும் கூட, ஒரு புலி அரசியல் தான். துரோகி, தியாகி என்ற சொற்களுக்குள் மொத்த அரசியலும் இயங்குவதில்லை. அரசியலில்லாத லும்பன்கள் தான், இதற்குள் இயங்குகின்றனர். புலிகளை துரோகி என்று ஒரு சொல்லுக்குள் மொட்டையாக அடக்கி, நாம் கருத்துச் சொல்ல முடியாது. அது இன்று உள்ளடகத்தில் புலிகளினதும், புலியெதிர்ப்பு அரசியலினதும் அடிப்படைக் கூறாகும்.
புலிகள் இன்று துரோகம் செய்தால், என்ன நடக்கும்? இதை நாம் ஆராய்வோம்.
1. புலித் தலைமை சரணடையாதும், துரோகத்தைச் செய்யாதும், மரணிக்கின்றனர். இதை எப்படி அரசியல் ரீதியாக நாம் மதிப்பிடுவது? ...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
No comments:
Post a Comment