தமிழ் அரங்கம்

Saturday, April 11, 2009

அரசுக்கு ஆதரவு வழங்குவதே 'பொறுப்புள்ள" அரசியல் என்கின்றனர் 'ஜனநாயகவாதிகள்"

சுத்திசுத்தி கடைசியில் புலியெதிர்ப்பு, தன் இலக்கு அரசை ஆதரிப்பதுதான் என்பதை வெளிப்படையாக சொல்லத்தொடங்கியுள்ளனர். புலிக்கு மட்டும் இன்று சேடமிழுக்கவில்லை, புலியெதிர்ப்புக்கும் வேறு போக்கிடம் எதுவும் கிடையாது. அரசின் பின்னால் அம்மணமாகவே பவனிவரத் தொடங்கியுள்ளனர்.

புலிகள் சேடமிழுத்தபடி தனக்கு தானே கட்டிய தன் சொந்த பாடையுடன் தனது இறுதி யாத்திரையைத் தொடங்கியுள்ளது. எதிரியுடன் சேர்ந்து குழிவெட்டிய கூட்டம், இன்று குழிக்குள் தானும் இறங்கி நிற்கின்றது. இந்த புதைகுழிக்குள் புலிகள் மட்டுமல்ல, புலியெதிர்ப்புக் கும்பலும் சேர்ந்தே புதைகின்றது.

ஜனநாயகம் கிடைத்தால் மக்களுக்காக போராடப் போவதாகக் கூறிக்கொண்டு திரிந்த புலியெதிர்ப்புக் கும்பல்தான், இன்று அரசுக்கு பின்னால் அணிதிரளுகின்றனர். தாம் மக்களுக்காக போராட முடியாதவாறு, புலிகள் ஜனநாயகத்தை மறுப்பதாக கூறித் திரிந்த கும்பல், இன்று பேரினவாதத்தை ஆதரிப்பதுதான் 'பொறுப்புள்ள" அரசியல் என்கின்றது.

இன்று புலிகள் தன் யுத்த இறுதிக் காலத்தில் அரசுடன் சேர்ந்து மற்றொரு துரோகத்தை இழைக்காமல் முழுமையாக போராடி மடிந்தால், அரசுக்கு எதிரான உணர்வுடன் தமிழ் சமூகம் நீடிக்கும் என்ற கவலை புலியெதிர்ப்பு கும்பலுக்கு. அதுதான் 'பொறுப்புள்ள அரசியல்" என்பது, அரசை ஆதரித்து தமிழ் மக்களை அரசின் பக்கம் கொண்டு வருவதுதான் என்கின்றனர். இதையே பிரச்சாரம் செய்ய வேண்டும் என்கின்றனர்.

இதற்காக மக்களி................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: