தமிழ் அரங்கம்

Thursday, May 7, 2009

இந்திய சீனா மேலாதிக்க முரண்பாடும், இலங்கையின் எதிர்காலமும்

இந்தியாவானது பேரினவாத இனவொடுக்குமுறையை பயன்படுத்தி, இலங்கையை தன் பிராந்திய மேலாதிக்க பிடிக்குள் வைத்திருக்க முனைந்தது. இதுவே தமிழினத்துக்கு எதிரான, கடந்த 30 வருட வரலாறாகும். இதன் பின்னணியில் இந்தியா தமிழீழக் குழுக்களுக்கு பயிற்சி மற்றும் பணத்தை வழங்கி, அவற்றை தமது பிராந்திய நலனுக்கு ஏற்ற கூலிக் குழுக்களாக உருவாக்கியது.

ஆனால் ஏகாதிபத்திய சார்பு புலிகள் இயக்கம் தம் பாசிச மேலாதிக்கத்தை நிறுவும் வகையில், இந்தியா சார்புக் குழுக்களை சேர்த்து அழித்தது. இதன் விளைவாக, இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நோக்கம் தான் நிறுவிய வழியில் சிதறிப்போனது.

இருந்தபோதும் சிங்களப் பேரினவாதிகள் புலிகள் மேல் நடத்திய தாக்குதலினால், புலிகளுக்கு தோல்வி ஏற்பட்டது. இதைப் பயன்படுத்திய இந்தியா, அதை தமிழின அழிப்பாகக் காட்டியது. இதன் மூலம் நேரடியான ஆக்கிரமிப்பை நடத்தி, தன் மேலாதிக்கத்தை நிறுவமுனைந்தது. ஆனால் புலிகள் மற்றும் சிங்கள அரசுடனான இந்தியாவின் மோதல் போக்கால், இதிலும் தோல்வியை தழுவியது. இப்படி இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நலனை, இலங்கையில் தான் விரும்பியவாறு இந்தி..........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: