தமிழ் அரங்கம்

Friday, May 8, 2009

ஈழம்: தமிழினக் குழுக்களின் துரோகம்

''ஈழத் தமிழர்களின் இன அழிப்புப் போருக்கு சோனியா தலைமையிலான காங்கிரசு ஆட்சி அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி அனைத்து உதவிகளையும் இலங்கை அரசுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் காங்கிரசுக்கும் காங்கிரசுக்குத் துணை போகும் தி.மு.க.வுக்கும் தமிழர்கள் பாடம் புகட்ட வேண்டும். காங்கிரசு ஆட்சி அகற்றப்படுவதன் மூலமே ஈழத்தில் இனப்படுகொலைகளைத் தடுத்து நிறுத்த முடியும். எனவே, காங்கிரசுதி.மு.க. வேட்பாளர்களைத் தோற்கடிப்பதே இத்தேர்தலில் தமிழர் கடமையாக இருக்க முடியும். களத்தில் சம போட்டியில் நிற்கக் கூடிய வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலமே, இவர்களைத் தோற்கடிக்க முடியும். இவர்களை எதிர்த்து நிற்கும் வலிமையான கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். நிச்சயமாக அந்த வலிமையான கூட்டணி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிதான்!'' என்று இச்சந்தர்ப்பவாதத்துக்குக் கொள்கை சாயம் பூசி பேட்டியளித்துள்ளனர். பெரியார் தி.க.வின் கோவை இராமகிருஷ்ணனும் "விடுதலை' இராசேந்திரனும்.

பார்ப்பனபாசிசத்தைச் சித்தாந்தமாகக் கொண்டுள்ள அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா, தொடக்கத்திலிருந்தே ஈழ விடுதலைப் போரை எதிர்த்தும் ஈழ ஆதரவாளர்களை ஒடுக்கியும் வந்தவர் என்பது நாடறிந்த உண்மை. ஈழத் தமிழர்கள் மீதான சிங்கள பாசிச அரசின் தற்போதைய கொடிய போரின்போது கூட, ''போர் என்றால் மக்கள் மடியத்தான் செய்வார்கள்'' என்று.....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: